தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம்
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: ஏப்ரல் 14 ஆம் தேதி தமிழ் புத்தாண்டு பிறக்கிறது. பராபவ ஆண்டு என்று அழைக்கப்படும் இந்த ஆண்டானது 60 ஆண்டுகளுக்கு ஒருமுறை வருவதாகும். இந்த காலகட்டத்தில், சனி குரு திரிகோணத்தில் இணைவது என்பது 32 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே நிகழும். குருவுக்கு சக்தி கொடுப்பது போல சனி திரிகோணத்தில் அமர்ந்திருப்பதால் மிகப்பெரிய அதிர்ஷ்டங்கள் உண்டாகும். இந்த காலகட்டத்தில் கன்னி ராசியினருக்கு ஏற்படப் போகும் நன்மைகள், படிப்பு, தொழில் எப்படி இருக்கும் என்பது குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
கன்னி ராசி பலன் (Kanni Rasi Palan)
கன்னி ராசிக்கு லாப ஸ்தானத்தில் குரு வருவதால் பெரிய வெற்றிகள் கிடைக்கும். திருமண யோகம் உண்டாகும். எல்லோரும் உங்களைப் பாராட்டக்கூடிய சூழல் ஏற்படும். பகைகள் ஏற்படும். வயிறு பிரச்சனை, கால் முட்டி பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. கொஞ்சமாவது கடன் வாங்கும் சூழல் ஏற்படும். இந்த முறை எல்லா விஷயங்களிலும் வெற்றி பெறும் யோகம் உண்டு.

லாப ஸ்தானத்தில் குரு
நண்பர்கள், மூத்தவர்கள் மூலமாக நன்மைகள் நடக்கும். அண்ணனுக்கு நிறைய நல்ல விஷயங்கள் நடக்கும். உங்கள் வீட்டில் திருமணம் ஏற்படும் வாய்ப்புள்ளது. உங்களுக்கு கஷ்டமான விஷயங்கள் கூட எளிமையாக நடக்கும். லாப ஸ்தானத்தில் குரு வரும்போது லட்சியம், ஆசைகள் எல்லாம் நடக்கும் யோகம் உண்டு. தனி மரியாதை கிடைக்கும். குருவுடைய பார்வை பலம் இருப்பதால் கையில் நிறைய பணம் இருக்கும்.
திருமண யோகம்
திருமண யோகம், குடும்பத்தில் அந்நியோன்யம் உண்டாகும். பண வரவு அபரிமிதமானதாக இருக்கும். ஆசைகள் எல்லாம் நிறைவேறும். ஜூன் மாதம் வரை வேலையை காப்பாற்றிக் கொள்வது நல்லது. மற்றவர்களுக்கு அட்வைஸ் செய்வதை தவிர்ப்பது நல்லது. சிறிய வயதினர் கூட உங்களை அவமானப்படுத்தும் சூழல் வருவதற்கான வாய்ப்புள்ளது.
ஆரோக்கியம்
கால், கழுத்து சம்பந்தப்பட்ட பகுதிகளில் கவனமாக இருப்பது நல்லது. சனியின் பார்வை இருப்பதால் புதிய விஷயங்களை ஆரம்பிக்கக்கூடிய பாக்கியம் உண்டாகும். லாபத்தில் குரு வரும்போது பார்ட்னருடன் சேர்ந்து தொழில் செய்யும் யோகம் உண்டாகும். உணவு, எண்ணெய், கல்லூரி, உற்பத்தித் துறை, பள்ளி, கிளப் போன்ற மல்டிலெவல் மார்க்கெட்டிங் தொழில் செய் வதற்கான வாய்ப்புள்ளது.
பதவிகள்
வேந்தர், துணைவேந்தர் பொறுப்புகள், அமைச்சர் பதவிகள், முதலைமைச்சர் பதவிகள் கிடைக்கும் யோகம் உண்டு. எல்லா பாதிப்புகள், சிக்கலில் இருந்தும் வெளியில் வருவீர்கள். கன்னி ராசியினருக்கு அற்புதமான காலகட்டமாக இருக்கும். மீண்டும் இதேபோன்று ஒரு காலகட்டம் கண்டிப்பாக வராது. எந்த விஷயத்தை தொட்டாலும் அதில் வெற்றி பெறும் யோகம் உண்டு.
காதல் வாழ்க்கை
எளிமையாக பணம் வருவது, நட்பு உருவாகும் யோகம் உண்டு. நாம் மட்டுமல்லாமல், நம்மை சேர்ந்தவர்களும் நம்மை ஜெயிக்க வைப்பீர்கள். கூட்டணி ஆட்சி அமையும். இப்போது இருக்கும் நிலைமை எல்லாம் மாறும். மே 20 ஆம் தேதி முதல் நல்ல காலகட்டம் உண்டாகும். காதல் புரோபஷல்கள் அதிகமாக வரும். நன்மைகள் நிறைந்த காலகட்டமாக இருக்கும்.
இரட்டிப்பு பணம்
லாபத்தில் குரு இருக்கும்போது தெய்வத்தின் அனுக்கிரகம் அதிகமாக இருக்கும். இரட்டிப்பு லாபம் உண்டாகும். பல மாணவ, மாணவிகளுக்கு முன்னேற்றம் ஏற்படும். தேர்வுகளில் வெற்றி பெறும் யோகம் உண்டு. டாப் கிளாஸ் யோகம் உண்டாகும். எல்லாவிதமான ஆசிர்வாதங்களும் கிடைக்கும். பண வரவு இரட்டிப்பாகும். கடன்களை அடைத்து முடிப்பீர்கள். திட்டமிட்டு செய்யும் காரியங்களில் ஏற்றம் உண்டாகும். சொத்துகள் வந்து சேரும். நிறைய இடத்தில் இருந்து பணம் வந்து சேரும். காஞ்சிபுரம் காமாட்சியம்மனை வழிபாடு செய்வது, குங்குமர்ச்சனை செய்வது நன்மை பயக்கும்.












Click it and Unblock the Notifications