Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க

Subscribe to Oneindia Tamil

தமிழ் புத்தாண்டு ராசி பலன்: ஏப்ரல் 14 ஆம் தேதி தமிழ் புத்தாண்டு பிறக்கிறது. பராபவ ஆண்டு என்று அழைக்கப்படும் இந்த ஆண்டானது 60 ஆண்டுகளுக்கு ஒருமுறை வருவதாகும். இந்த காலகட்டத்தில், சனி குரு திரிகோணத்தில் இணைவது என்பது 32 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே நிகழும். குருவுக்கு சக்தி கொடுப்பது போல சனி திரிகோணத்தில் அமர்ந்திருப்பதால் மிகப்பெரிய அதிர்ஷ்டங்கள் உண்டாகும். இந்த காலகட்டத்தில் கவனமாக இருக்க வேண்டிய 3 ராசிகள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.

மேஷம் ராசி பலன் (Mesham rasi palan)

மேஷ ராசியினருக்கு அதிர்ஷ்டங்கள் தேடி வரும் காலகட்டமாக இருக்கும். வீடு, நிலம், வாசல், சொத்துகள் தொடர்பான விஷயங்களில் அபரிமிதமான லாபம் உண்டாகும். 4 ஆம் இடத்தில் குரு வந்து அமர்ந்து, திரிகோணத்தில் சனி அமைவதால் மிகப்பெரிய யோகம் உண்டாகும். நிலம் வாங்கினால் இரட்டிப்பு லாபம் கிடைப்பது, வீடு கட்டுவதால் நிறைய சுப விஷயங்கள் நடப்பது போன்ற யோகம் நிறைந்த காலகட்டமாக இருக்கும். மாணவர்கள் நன்றாகப் படிக்கும் காலகட்டமாக இருக்கும். ஜூன் முதல் செப்டம்பர் மாதம் வரையிலான காலகட்டத்தில் நல்ல முன்னேற்றங்கள், அனுகூலம் ஏற்படும்.

tamil-puthandu-rasi-palan-which-3-zodiac-signs-should-be-during-this-period

புதிதாக வீடு கட்டிச் செல்பவர்களுக்கு அக்டோபர் மாதத்திற்குப் பிறகு திருமண யோகம் உண்டாகும். குழந்தைகளுக்கு அக்டோபர் முதல் ஜனவரி மாதம் வரை மொட்டை போடும் யோகம் உண்டாகும். நீர்நிலைகள் அருகே அமர்ந்திருக்கும் பகுதிகளில் இடங்கள் உங்களுக்கு அமையும். இடம், பொருள், வீடு, தோட்டம் வாங்கும் யோகம் உண்டு. நீர்நிறைந்த பகுதிகளில் தோட்டம் அமையும். வசதியான பகுதிகளில் வீடு கட்டும் யோகம் உண்டாகும். மேஷ ராசியில் பிறந்த மாணவர்கள் நீட் தேர்வில் தேர்ச்சி பெறும் யோகம் உண்டு.

பாதிப்புகள்

வேலையில் நெருக்கடி, பாதிப்புகளைச் சந்தித்து வருபவர்களுக்கு இடமாற்றம் உண்டாகும், வேலை மாற்றம் உண்டாகும். தொழில் மாற்றம் ஏற்படும். ஊர் மாறும், நிலம் மாறும், வீடு மாறும் யோகம் உண்டாகும். வெளிநாட்டில் இருப்பவர்கள் இந்தியாவுக்கு வரும் யோகம் உண்டாகும். விரயத்தில் சனி வரும்போது மாத்திரை செலவுகள் அதிகமாக இருக்கும். விட்டமின் குறைபாடு, தோல் பிரச்சனை, பெரியவர்களுக்கு மார்பகம், நெஞ்சகம் சார்ந்த பகுதிகளில் கட்டிகள் வருவதற்கான வாய்ப்புள்ளதால் கவனம் தேவை.

சிம்மம் ராசி பலன் (simmam Rasi Palan)

சிம்ம ராசியினருக்கு எந்த விஷயத்தையும் வெளியில் சொல்லாமல் இருப்பது நல்லது. நாம் உண்டு நம் வேலை உண்டு என்றிருப்பது நல்லது. ஜூன் மாதம் வரை நீங்கள் செய்யும் எல்லா காரியங்களிலும் வெற்றி ஏற்படும். லாபத்தில் குரு இருக்கும் வரைக்கும் வேலைக்கும், பணத்திற்கும் பஞ்சமே இருக்காது. குரு விரயத்துக்கு வரும்போது அஷ்டமத்தில் சனி இருக்கும்போது மாநிலம் விட்டு மாநிலம் சென்றால் அற்புதமான யோகம் ஏற்படும். நிறைய பேருக்கு இடமாற்றம், வேலை மாற்றம் ஏற்படும். பூரம், உத்திரம் நட்சத்திரத்திற்கு அற்புதமான நன்மைகள் உண்டு.

மகம் நட்சத்திரத்திற்கு சிறிய சிறிய பிரச்சனைகள் வரும். விரயத்தில் குரு இருப்பதால் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். சுழுக்கு, பிடிப்பு போன்றவை வருவதற்கான வாய்ப்புள்ளது. சிம்ம ராசியினர் இருக்கும் வீட்டில் யாரோ ஒருவருக்காவது மன வேதனை இருந்து கொண்டே இருக்கும். நன்மை
மகனைப் பிரிவது, பெரியவர்களைப் பிரிவது, அம்மாவுடைய ஆரோக்கியத்தில் பிரச்சனைகள் வரும் வாய்ப்புள்ளது. நதி, கடலில் குளிப்பதால் பாதிப்புகள் கண்டிப்பாகக் குறையும். காவேரி நதி ஸ்நானம் அற்புதமான நன்மைகளைத் தரும். இரவு நேரத்தில் செய்யக்கூடிய வேலைகள் அற்புதமாக இருக்கும். பங்குச் சந்தையில் முதலீடு செய்வது, நல்ல லாபம் வரும் வாய்ப்புள்ளது.

பெரியவர்களின் இறப்பு

சொத்துகள் உங்களை வந்து சேரும். எதிர்பாராத அதிர்ஷ்டம், எதிர்பாராத லாட்டரி, எதிர்பாராத விஷயங்கள் உண்டாகும். யாரோ ஒருவர் உங்களுடன் இருப்பார்கள், உதவி செய்வார்கள். முடி உதிர்தல் பிரச்சனை, நரம்புகள் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புள்ளதால் ஆரோக்கியத்தை கவனமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும். நிறைய கவலைகள், பெரியவர்களின் இறப்பு, பிரிவு போன்றவை ஏற்படும். நன்றாகப் போய்க் கொண்டிருக்கும் வேலையை கூட விட்டுவிடலாம் என்ற எண்ணம் தோன்றும்.

அக்டோபர், நவம்பர், டிசம்பரில் அற்புதமான மாற்றங்கள் ஏற்படும். வாழ்க்கையில் என்ன வேண்டுமோ அவை எல்லாமே நடக்கும் நல்ல காலகட்டமாக இருக்கும். நம்பிக்கை, தைரியம், புத்துணர்வு ஏற்படும். யாரையும் நம்பாமல் இருப்பது நல்லது. பணத்தை சேமித்து வைத்துக் கொள்ள வேண்டும். விபத்துகள் நடப்பதற்கான வாய்ப்புள்ளதால் மிகுந்த கவனம் தேவை. கிரெடிட் கார்டுகளில் லோன் வாங்குவது, அதிக செலவு செய்வதைத் தவிர்ப்பது நல்லது. தேவைகளை சுருக்கிக் கொள்ள வேண்டும். மாணவர்கள் படிப்பில் மிக அதிகமான கவனத்தை செலுத்துவது நல்லது. கவனக்குறைவு ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளதால் கவனமாக இருக்க வேண்டும். சந்நியாசி, ரிஷி, முனிவர்களை வழிபாடு செய்வது நன்மை பயக்கும்.

தனுசு ராசி பலன் (Dhanusu Rasi Palan)

தனுசு ராசிக்கு இந்த தமிழ் புத்தாண்டு தாயின் உடல்நிலை, வண்டி, வாகனம், வீட்டில் இருக்கும் பிரச்சனை, வாக்குவாதம், சண்டை, வங்கிப் பிரச்சனைகள், அக்கவுண்டில் இருக்கும் பிரச்சனைகளில் கவனமாக இருக்க வேண்டும். குழந்தைகளின் உடல்நிலையில் கவனமாக இருக்க வேண்டும். 4 ஆம் இடத்தில் சனி, அஷ்டமத்தில் குரு இணைந்திருப்பது நல்ல அமைப்பு இல்லை. ராகு 3 ஆம் இடத்தில் அமர்ந்திருப்பதால் அசாத்தியமான வலிமையும், பலத்தையும் கொடுக்கக்கூடிய அமைப்பு உள்ளது.

எந்தவிதமான பிரச்சனைகள் வந்தாலும் அதிலிருந்து எப்படியாவது தப்பித்து வருவீர்கள். அஷ்டமத்தில் குரு இருப்பதால் நிறைய பேருக்கு கோர்ட், கேஸ், மெமோ, நோட்டீஸ் வருவது போன்ற அமைப்பு உள்ளது. தேவையில்லாத அரெஸ்ட், மற்றவர்கள் செய்த தப்புக்கு நீங்கள் பதில் சொல்வது போன்ற அமைப்பு ஏற்படும். கார்ப்பரேட்டில் இருப்பவர்கள் அக்கவுண்ட்ஸில் கவனமாக இருக்க வேண்டும். அரசு வேலைகளில் இருப்பவர்கள் தேவையில்லாத விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். பிள்ளைகளின் விஷயத்திற்காக நிறைய செலவுகளை செய்யக்கூடிய அமைப்பு உள்ளது. அதிகமான செலவுகளை செய்வீர்கள். சுபவிரயம், ஆடம்பர விரயமாக இருக்கும். கல்விக்காக நிறைய செலவு செய்வீர்கள். நிறைய உழைக்கக்கூடிய நிலைமை ஏற்படும்.

பரிகாரம்

வேறு நாடு, மாநிலம், வேறு மொழி பேசும் சமூகத்தின் பக்கத்தில் இருப்பது நன்மையைத் தரும். சுபகிரகங்கள் மறைவதால் சுவாமிக்கு விரதம் இருப்பது நன்மை பயக்கும். வியாழக்கிழமை தோறும் சாய்பாபா, ராகவேந்திரருக்கு விரதம் இருப்பது, இல்லையெனில் திங்கள்கிழமை மட்டும் காலை, இரவில் வெறும் பழங்களை மட்டும் சாப்பிடுவது நன்மை பயக்கும். உங்களுக்கு இருக்கும் கஷ்டங்கள் எல்லாம் தீரும்.

தப்பான சேர்க்கை, தப்பான விஷயங்களை செய்வதைத் தவிர்ப்பது நல்லது. உங்களால் முடியும், முடியாது என்பதை தெளிவாக சொல்லிவிட வேண்டாம். மற்றவர்களுக்காக சிபாரிசு செய்வதைத் தவிர்ப்பது நல்லது. அண்ணன், தம்பியுடன் நிறைய பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. தொடர்ந்து அன்னாதானம் செய்வது ஏற்றத்தைக் கொடுக்கும். ஆரோக்கியத்தில் அஜீரணக் கோளாறு, வயிறு சம்பந்தப்பட்ட விஷயங்களில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். பிள்ளைகளைத் திட்டாமல் இருப்பது நல்லது. பசுமாடுகளுக்கு தானம் கொடுப்பது நன்மை பயக்கும். பெளர்ணமி, அமாவாசை தினத்தன்று பசு மாடுகளை வழிபாடு செய்வது தானம் கொடுப்பது ஏற்றத்தைத் தரும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+