தை அமாவாசை: பொருளாதாரத்தில் சிறப்பான பலன்களை பெறப்போகும் 6 ராசிகள்
சென்னை: பொதுவாக வேதம் மற்றும் ஜோதிட சாஸ்திரங்களின்படி தை அமாவாசை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. அந்த வகையில் நாளை ஜனவரி 29-ம் தேதி தை அமாவாசை நிகழ உள்ளது. இது 12 ராசிகளிலுமே குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும். அதிலும் 6 ராசிகள் அதிகளவு யோகங்களை பெறவுள்ளன. அதுகுறித்து இந்த செய்தி தொகுப்பில் விரிவாக காணலாம்.
முன்னோர் வழிபாட்டை தடையின்றி தொடர்வது நம் பூர்வ புண்ணிய ஸ்தானத்தை வலுவாக்கும். எப்படி சாதாரண அமாவாசை, ஆடி அமாவாசை மற்றும் மகாளயபட்ச நாட்களில் நம் முன்னோருக்கு திதி கொடுக்கிறோமோ அப்படி தை அமாவாசையில் திதி கொடுப்பது அவசியம். இதன் தாக்கம் நம் ராசி மற்றும் லக்னத்தில் எதிரொலிக்கும்.

இந்தாண்டு ஏற்கனவே குரு, சனி, சுக்கிரன், புதன், ராகு - கேது உள்ளிட்ட முக்கிய பெயர்ச்சிகள் உள்ளன. பல கிரகங்கள் இணைந்து பயணிக்கின்றன. அந்த வகையில் இந்த தை அமாவாசை என்பது மேஷம், ரிஷபம், கடகம், விருச்சிகம், மகரம், மீனம் ஆகிய 6 ராசிகளுக்கு அதிகளவுக்கு பலன்களை அள்ளி தரப்போகிறது.
மேஷம்: தை அமாவாசைக்கு பிறகு மேஷம் ராசியினருக்கு பொருளாதாரத்தில் முன்னேற்றம் இருக்கும். உத்யோகம் மற்றும் தொழிலில் லாபம் அதிகரிக்கும். புதிய வேலை வாய்ப்பு மற்றும் வேலை மாற்றம் எதிர்பார்த்து காத்திருப்போருக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். நீண்ட காலம் திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் ஆவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
ரிஷபம்: ரிஷபம் ராசிக்கு இந்தாண்டு நிகழவுள்ள அனைத்து பெயர்ச்சிகளுமே நல்ல பலன்களையே தரும். கடந்த கால கஷ்டங்கள் பனிப்போல விலகும். அந்த வகையில் தை அமாவாசைக்கு பிறகு எதிர்பாராத பல சிறப்பான பலன்களை பெறப் போகிறார்கள். உத்யோகம் மற்றும் தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். எதிர்பார்த்த வேலை அமையும். உழைப்புக்கான அங்கீகாரம் தேடி வரும்.
கடகம்: கடகம் ராசிக்கு தை அமாவாசைக்கு பிறகு சிறப்பான பலன்களை தரப்போகிறது. தொழில் மற்றும் குடும்பம் இரண்டிலும் நல்ல பலன்கள் கிடைக்கும். நிதி நெருக்கடி குறையும். எதிர்பார்த்த வேலை வாய்ப்பு, தொழில் விருத்தி நடைபெறும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். சுப காரியங்களால் வீட்டில் மகிழ்ச்சி பொங்கும். திருமணம் மற்றும் குழந்தை பாக்கியம் கைக்கூடும்.
விருச்சிகம்: விருச்சிகம் ராசிக்கு தை அமாவாசைக்கு பிறகு உத்யோகம் மற்றும் தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டு. தொழிலில் விரிவடைந்து லாபம் அதிகரிக்கும். உங்களின் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தைரியம், தன்னம்பிக்கை அதிகரிக்கும். உங்கள் குடும்பத்துக்காக நீண்ட காலமாக திட்டமிட்ட காரியங்களை செய்து முடிப்பீர்கள்.
மகரம்: மகரம் ராசிக்கு தை அமாவாசைக்கு பிறகு அதிர்ஷ்டம் உங்கள் வீட்டு வாசல் கதவை தட்டும். யோகங்கள் கொட்டும். இறங்கிய அனைத்து காரியங்களிலும் வெற்றி பெற்று தடம் பதிப்பீர்கள். பொருளாதாரத்தில் நல்ல வளர்ச்சி இருக்கும். நீண்ட காலமாக நினைத்த வெளிநாட்டு பயணம் கைக்கூடும். செல்ல வாய்ப்பு உள்ளது. உத்யோகத்தில் பதவி உயர்வு, சம்பள உயர்வு உண்டு. வியாபாரத்திலும் லாபம் அதிகமாகும்.
மீனம்: மீனம் ராசிக்கு தை அமாவாசைக்கு பிறகான மாற்றங்கள் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் இருக்கும். கடன் சுமை நீங்கும். சொந்த வீடு, நிலம், வண்டி, வாகனம், நகை, வீட்டுக்கு தேவையான ஆடம்பர பொருட்களை வாங்குவதற்கு வாய்ப்புள்ளது. தொழிலில் நல்ல லாபம் இருக்கும். முதலீட்டால் ஆதாயம் உண்டு.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications