Thai matha palan: ரிஷப ராசிக்கு தொட்டதெல்லாம் தங்கமாகும் யோகம்.. அடுத்தடுத்து ஜாக்பாட்

Subscribe to Oneindia Tamil

தை மாத ராசி பலன்: தை மாத பலன்கள்: தை பிறந்தால் வழிபிறக்கும் என்பது நம்பிக்கை. மகர மாதம் என்று அழைக்கப்படும் தை மாதத்தில் ரிஷப ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.

சூரியன் மகர ராசியில் வரக்கூடிய மாதமே தை மாதம். இதனால் தான் தை மாதம் மகர மாதம் என்றும் அழைக்கப்படுகிறது. சூரியனுடைய தேர் பாதை தெற்கு திசையில் இருந்து வடக்கு திசைக்கு மாறும் மாதமே மகர மாதம். தை மாதம் பிறந்தால் வழி பிறக்கும் என்று பலர் காத்துக் கொண்டிருப்பார்கள். மகாபாரதத்தின் பிதாமகனான பீஷ்மர் இந்த தை மாதத்துக்காகவே அம்பு படுக்கையில் தன் உயிர் போவதற்காக காத்துக் கொண்டிருப்பாராம். அந்த அளவுக்கு புனிதமான மாதம்.

thai-matha-palan-rishabam-rasi-people-will-get-huge-success-and-lots-of-money-during-this-month

சூரியன் வழிபாட்டுக்கு உகந்த மாதம். சூரியனை வழிபடும் பண்டிகையே பொங்கல் பண்டிகை. சூரியன் இல்லை என்றால் இந்த உலகமே இல்லை. கேட்டை நட்சத்திரத்தில் விருச்சிக ராசியில் சித்த யோகத்தில் பொங்கல் பண்டிகை அமைந்துள்ளது. இந்த தை மாதத்தில் ரிஷப ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள் குறித்து பார்க்கலாம்.

ரிஷபம் ராசி பலன்

ரிஷப ராசி அன்பர்களுக்கு சுக்கிரன் தன் உச்சவீட்டை நோக்கி நகரக்கூடிய காலகட்டம் என்பதால் உங்களுக்கு மேன்மை கிடைக்கும் காலகட்டமாக இருக்கும். 9 ஆம் இடத்தில் ராசிநாதன் இருப்பதால் நினைத்த காரியங்கள் எல்லாம் நடக்கும். சனி பகவானின் வீட்டில் சுக்கிரன் அமர்ந்து பார்ப்பதால் எடுத்த காரியங்களில் எல்லாம் ஜெயம் ஏற்படும்.

பயணங்கள்

வேலை தொடர்பான நிறைய பயணங்கள் ஏற்படும். இதுவரைக்கும் கிடைக்காத பெயர், புகழ் வேலையில் கிடைக்கும். உங்களை விட்டுச் சென்றவர்கள் தானாக திரும்ப வருவார்கள். நிறைய நன்மைகள் நடக்கும். 9 ஆம் இடம் என்பது 8க்கு இரண்டாம் என்பதால் நிறைய நல்ல விஷயங்கள் கூடி வரும். அம்மாவுடைய ஆரோக்கியத்தில் மிகுந்த கவனம் தேவை. சுக ஸ்தானத்தில் கேது அமர்ந்திருந்தாலும் கெடு பலன்கள் எதுவும் கிடைக்காது.

முதலீடுகள்

ராசிநாதன் 9 ஆம் இடத்தில் அமர்ந்திருக்கிறார். 10 ஆம் இடத்தில் ராகு, 11 ஆம் இடத்தில் சனி இருக்கின்றனர். தர்மகர்மாதிபதி யோகம் இயங்கும். 12 ஆம் வீட்டின் அதிபதியும் உச்சமாகி இருப்பதால் நிறைய செலவுகளைச் செய்வீர்கள். நிறைய முதலீடுகளைச் செய்வீர்கள். முடிந்து போனது என்று நினைத்ததெல்லாம் இனி தொடரும். காதல் கைகூடும். வீட்டில் உங்கள் காதலுக்கு சம்மதம் கிடைக்கும்.

வேலைப் பளு குறையும்

வேலையில் இருந்து வந்த பளு குறையும். அலைச்சல்கள் மூலமாக அனுகூலம் கிடைக்கும். இதுவரை கிடைக்காமல் இருந்த பெயர்கள் கிடைக்கும். நீண்டநாட்களாக சண்டை போட்டுக் கொண்டிருந்த விஷயங்கள் எல்லாம் இணக்கமாக மாறும். வீட்டில் இருந்த ஊடல்கள் குறைந்து, கூடல்கள் அதிகரிக்கும். உடல் ரீதியாக நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

புதிய பயிற்சிகள்

குருமார்கள் கிடைப்பார்கள். புதிய பயிற்சிகளைப் படிப்பீர்கள். நிறைய கற்றுக் கொள்ளவும், கற்றுக் கொடுக்கவும் தயாராக இருக்கும். 10 ஆம் இடத்தில் ராசிநாதன் அமரும்போது பிப்ரவரி ஆரம்பிக்கும்போதே வேலையில் மிகச்சிறந்த ராஜயோகம் கிடைக்கும். தைப்பூசத்திற்குள் ரிஷப ராசிக்காரர்களுக்கு சூப்பரான காலகட்டம் கூடிவரும். முன்னுக்கு வரக்கூடிய காலமாக இருக்கும்.

நல்ல பலன்கள்

நிதி சார்ந்த பிரச்சனைகள் எல்லாம் சரியாகும். 4 கிரகங்களின் சேர்க்கையும் இருப்பதால் நல்ல பலன்கள் கிடைக்கும். உங்களைப் பற்றி மற்றவர்கள் சொல்கிற மதிப்பீட்டில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். யாரிடமும் வம்பு, வழக்குக்கு செல்லாமல் இருப்பது நல்லது. சுக்கிரனோடு புதன் சேர்ந்திருப்பதால் உங்களைப் பற்றி நிறைய பேர் புறம் பேசத் தொடங்குவார்கள்.

நிதி விஷயத்தில் கவனம்

புறம் பேசுவதைத் தவிர்ப்பது நல்லது. குரு வக்கிரமாக இருப்பது உங்களுக்கு நன்மையாக இருந்தாலும், பிப்ரவரி மாதத்தில் குரு வக்கிர நிவர்த்தியடைவதால் சிறு சிறு பாதிப்புகள் ஏற்படும். நிதி சார்ந்த விஷயத்தில் கவனம் தேவை. கடன் விஷயத்தில் கவனம், வட்டியில் கவனமாக இருப்பது நன்மையைக் கொடுக்கும். கேதுவால் மனதில் சிறு சிறு சஞ்சலங்கள் ஏற்படும். மற்றபடி பெரிய பாதிப்புகள் எதுவும் ஏற்படாது. ஏற்றம் நிறைந்த காலகட்டமாக இருக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+