தை மாத பலன் 2026: கடக ராசிக்கு கால் வைக்கும் இடமெல்லாம் கன்னி வெடி.. பண விஷயத்தில் கவனம்

Subscribe to Oneindia Tamil

தை மாத ராசி பலன் 2026: புத்தாண்டில் 2026 ஆம் ஆண்டில் வரும் முதல் தமிழ் மாதம் தை பிறக்கவுள்ளது. தை மாதம் மகர மாதம் என்று அழைக்கப்படுகிறது. தை மாதத்தில் கடக ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபாடு செய்ய வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் பார்க்கலாம்.

மகர மாதம்

சூரியன் மகர ராசியில் வரக்கூடிய மாதமே தை மாதம். மகர மாதம் என்றும் கூறப்படுகிறது. சூரியனின் தேர் பாதை தெற்கு திசையில் இருந்து வடக்கு திசைக்கு மாறும் காலம் தான் தை மாதம். தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது ஐதீகம். மகாபாரதத்தின் பிதாமகரான பீஷ்மர் தை மாதத்தில் தனது உயிர் போவதற்கு அம்பு படுக்கையில் காத்துக் கொண்டிருந்தாராம். அந்த அளவுக்கு சிறப்பு பெற்றது தை மாதம். தேவர்களின் உதயகாலம் தை மாதம்.

thai-matha-palan-what-kind-of-benefits-will-get-kadagam-rasi-people-during-this-motnh

சூரியன் வழிபாட்டுக்கு உகந்த மாதமாக தை மாதம் உள்ளது. சூரியன் இல்லையென்றால் இந்த உலகமே இல்லை. தை மாதம் 1 ஆம் தேதியான ஜனவரி 15 ஆம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. அன்றைய தினம் கேட்டை நட்சத்திரத்தில் விருச்சிக ராசியில் சித்த யோகத்தில் அமையக்கூடிய நாளே பொங்கல் பண்டிகை. இந்தப் பண்டிகையின் விசேஷமே சூரியன், விவசாயிகள், கால்நடைகளுக்கு நன்றி செலுத்துவதாகும்.

பொங்கல் வைக்க நல்ல நேரம்

பொங்கல் தினத்தன்று காலையில் நேரமாக எழுந்து குளித்து முடித்து புத்தாடை அணிந்து சுவாமி கும்பிட்டுவிட்டு, சூரிய பகவானை வழிபாடு செய்து கிழக்கு நோக்கி அமர்ந்து பொங்கல் சாப்பிட வேண்டும். தை மாதத்தில் பிரம்ம முகூர்த்தத்தில் பொங்கல் வைக்கலாம். காலை 9 மணி முதல் 10.30 மணிக்குள் பொங்கல் வைத்து இறைவனை வழிபாடு செய்வது நன்மை பயக்கும். சுக்கிர ஓரை, புதன் ஓரையாக இருந்தாலும் குளிகை நேரத்தில் பொங்கல் வைப்பது விசேஷமாகும்.

கடகம் தை மாத ராசி பலன் (Kadagam)

கடக ராசிக்காரர்களுக்கு 7 ஆம் இடத்தில் ஏராளமான கிரகங்கள் உள்ளதால் புதிய தொழில் தொடங்கும் யோகம், வியாபாரம் தொடங்கும் யோகம் ஏற்படும். கணவராக இருந்தால் மனைவி பெயரிலும், மனைவியாக இருந்தால் கணவர் பெயரிலும் வியாபாரத்தை தொடங்குவது நன்மை பயக்கும். கணவன், மனைவிக்குள் வாக்குவாதங்களைத் தவிர்த்துக் கொள்வது நல்லது.

பிரச்சனைகள்

கணவர் மூலமாக, மனைவி மூலமாக, பங்குதாரர்கள் மூலமாக, பார்ட்னர்கள் மூலமாக பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. பார்ட்னர்ஷிப்களில் பிரச்சனைகள் ஏற்படக்கூடும். விரயத்தில் குரு வக்கிரமாக இருப்பதால் உங்கள் கையில் இருந்து நிறைய பணம் போவதற்கும். நிறைய சிக்கல்களில் மாட்டிக் கொள்ளக்கூடும் சூழல் ஏற்படும்.

வேகம், கோபம்

எந்த விஷயத்தையும் நேரடியாக நீங்கள் செய்வதைத் தவிர்த்து, மற்றவர்கள் மூலமாக செய்து கொள்ள வேண்டும். ஒருவித வேகமும், கோபமும் உங்களிடமும் இருக்கும். மக்கள், சமூகம், நண்பர்கள், உறவினர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். எல்லா விஷயங்களும் உங்களை சார்ந்து நடக்கும். எதுக்காகவும், யாருக்காகவும் கவலைப்பட மாட்டீர்கள்.

முன்னேற்றம்

பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். லாபம் அதிகரிக்கும். எடுத்த காரியங்களில் ஜெயம் ஏற்படும். தைரியம், தன்னம்பிக்கை ஏற்படும். வேலை, தொழில், அந்தஸ்து, வியாபாரம் தொடங்கக்கூடிய நல்ல காலகட்டமாக இருக்கும். அடுத்த ஆண்டில் கொடிகட்டிப் பறப்பீர்கள். ஆக்ரோஷமான விஷயங்களை பார்க்கும் சூழல் ஏற்படும்.

வழிபாடு

குலதெய்வ வழிபாடு, பட்டீஸ்வரர் சுவாமி வழிபாடு உங்களுக்கு ஏற்றத்தையும், நல்ல முன்னேற்றத்தையும் கொடுக்கும். சந்தோஷமும், பொருளாதாரமும் 75 சதவீதம் நன்றாக இருக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+