Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தை மாதம் ராசி பலன்கள் 2021 - சூரியன்,சனி, குரு,புதன்,சுக்கிரன் சந்திரன் கூட்டணியால் யாருக்கு பலன்

தை மாதத்தில் ஆறு கிரகங்கள் கூட்டணியால் துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம் ராசிக்காரர்களுக்கு பலன்கள் எப்படி இருக்கிறது என்றுபார்க்கலாம்.

Subscribe to Oneindia Tamil

சென்னை : தை மாதத்தில் சூரியன் மகரம் ராசியில் பயணம் செய்கிறார். மகரம் ராசி சனிபகவானின் வீடு. சனிபகவான் ஆட்சி பெற்று சஞ்சரிக்கிறார். கூடவே குரு நீச பங்கம் பெற்று சஞ்சரிக்க புதனும் இணைந்துள்ளார். இந்த தை மாத அமாவாசை தினத்தில் மகரம் ராசியில் இணையும் ஆறு கிரகங்களின் கூட்டணி சஞ்சாரத்தினால் துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் என்ன பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

தை மாதத்தில் கிரக மாற்றங்களைப் பார்த்தால் மகரம் ராசியில் உள்ள புதன் கும்பம் ராசிக்கு இடமாற்றம் அடைகிறார். சுக்கிரன் தனுசு ராசியில் இருந்து மகரம் ராசிக்கு தை 12ஆம் தேதி இடப்பெயர்ச்சி அடைகிறார். சுக்கிரன் தனுசு ராசியில் இருந்து மகரம் ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார். 17 ஆம் தேதி புதன் வக்ரமடைகிறார். 22ஆம் தேதி மகரம் ராசியில் வக்ர கதியில் பயணிக்கிறார்.

இந்த மாதம் சூரியன், புதன், குரு, சுக்கிரன், சனி, சந்திரன் கிரகங்கள் பிப்ரவரி 10ஆம் தேதி ஒன்றாக இணைகின்றன. ஆறு கிரக சேர்க்கையால் துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசிக்காரர்களுக்கு இந்த தை மாதத்தில் என்ன பலன் கிடைக்கும் பரிகாரம் என்ன என்று பார்க்கலாம்.

துலாம்

துலாம்

சுக்கிரனை ராசி அதிபதியாகக் கொண்ட துலாம் ராசிக்காரர்களே, உங்கள் ராசிக்கு இரண்டாம் வீட்டில் கேது, மூன்றாம் வீட்டில் சுக்கிரன், நான்காம் வீட்டில் சனி, குரு, சூரியன், புதன், ஏழாம் வீட்டில் செவ்வாய், எட்டாம் வீட்டில் ராகு என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. பண வரவு அதிகரிக்கும். நான்காம் வீட்டில் ஆறு கிரகங்கள் இணைவதால் ஆரோக்கியம் நன்றாக இருக்கும் பயம் நீங்கும். ஆறு கிரகங்களும் இணைந்து தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டை பார்ப்பதால் வேலை தொழிலில் மேன்மை கிடைக்கும். புதிய வேலை கிடைக்கும். தொழிலை மேன்மைப்படுத்துவீர்கள். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். அதிக வாடிக்கையாளர்கள் வருவார்கள். பணம் எவ்வளவு வந்தாலும் செலவாகிறதே என்று யோசிக்கிறீர்களா? பணத்தை நீங்கள் கவனமாக சேமித்து வைக்கவும். நீண்ட காலமாக இடம், வீடு வாங்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இது நல்ல காலம். இடம் வாங்கலாம். பெண்கள், இல்லத்தரசிகளுக்கு நல்ல மாதம். சுப நிகழ்ச்சிகளில் அதிகம் பங்கேற்பீர்கள். மன மகிழ்ச்சி அதிகரிக்கும். சண்டைகள் நீங்கி சந்தோஷம் அதிகரிக்கும். வேலையில் புரமோசன் கிடைக்கும். சுப செய்தி தேடி வரும். திருமண வரன் அமையும். நல்ல வேலை கிடைக்கும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். மாணவர்களுக்கு யோகம் நிறைந்த மாதம். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். பெரிய மனிதர்களின் ஆசி கிடைக்கும். தை அமாவாசை நாளில் குல தெய்வ வழிபாடு செய்வது நன்மையை ஏற்படுத்தும்.

விருச்சிகம்

விருச்சிகம்

செவ்வாய் பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு இந்த மாதத்தில் கிரகங்களின் சஞ்சாரத்தை பார்க்கும் போது ராசிக்குள் கேது, இரண்டாம் வீட்டில் சுக்கிரன் மூன்றாம் வீட்டில் சூரியன், சனி, குரு, புதன், ஆறாம் வீட்டில் செவ்வாய், ஏழாம் வீட்டில் ராகு என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. நல்ல காலம் வந்து விட்டது. தொழில் செய்ய கடன் கிடைக்கும், நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். எதிர்பார்த்த விசயங்களில் நன்மைகள் நடைபெறும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். குடும்ப ஒற்றுமை அதிகரிக்கும். வீட்டில் மங்கல காரியங்கள் நடைபெறும். பிள்ளைகளுக்கு சுப காரியம் நடைபெறும். வேலைமாறுதல், புரமோசன் கிடைக்கும். இளம் வயதினருக்கு திடீர் திருமண யோகம் வரும். மாணவர்களுக்கு பள்ளி, கல்லூரி செல்லும் யோகம் வரும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். கூட்டுத்தொழில் வருமானத்தையும் லாபத்தையும் அதிகரிக்கும். தை மாதம் யோகத்தையும் லாபத்தையும் கொடுக்கும். பிப்ரவரி 10ஆம் தேதி உங்க ராசிக்கு மூன்றாம் வீட்டில் ஆறு கிரகங்கள் இணைவதால் நிதானம் அவசியம். நெருப்பு தொடர்பான விவகாரங்களில் கவனம் தேவை. சில தடை தாமதங்கள் வரலாம். பொறுமையும் கவனமும் தேவை. வேலையில் உயர்வுமும் முன்னேற்றமும் ஏற்படும். தை பூசம் நாளில் முருகன் கோவிலுக்கு சென்று வழிபடுங்கள். அன்னதானம் செய்யுங்கள் நல்லது விரைவில் நடைபெறும்.

தனுசு

தனுசு

குரு பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட தனுசு ராசிக்காரர்களே உங்கள் ராசிக்குள் சுக்கிரன், விரைய ஸ்தானத்தில் கேது, ராசிக்கு இரண்டாம் வீட்டில் சூரியன், புதன், சனி, குரு, ஐந்தாம் வீட்டில் செவ்வாய், ஆறாம் வீட்டில் ராகு என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. இந்த மாதத்தில் லாபம் அதிகரிக்கும். பணம் கைக்கு வரும். சொந்த வீடு வாங்குவதற்கான யோகம் வந்து விட்டது. உடல் ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். நீண்ட நாட்களுக்குப் பிறகு சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சம்பவங்கள் அதிகரிக்கும். கணவன் மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும். இரண்டாம் வீட்டில் ஆறு கிரகங்கள் இணையும் காலத்தில் யோகம் தேடி வரும். வேலை தொடர்பாக எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். நீண்ட நாட்களுக்குப் பிறகு சுப செய்திகள் தேடி வரும். வேலையில் செல்பவர்களுக்கு நல்ல செய்திகள் தேடி வரும். புரமோசனும், சம்பள உயர்வும் கிடைக்கும். திருமண வயதில் காத்திருப்பவர்களுக்கு திடீர் திருமண யோகம் தேடி வரும். மனதில் நீண்ட நாட்களாக இருந்த பாரம் நீங்கும். வெற்றியை தக்கவைத்துக்கொள்ளுங்கள். வியாபாரம் தொழிலில் வருமானமும் லாபமும் அதிகரிக்கும். மாணவர்கள் படிப்பில் அக்கறை காட்டுவீர்கள். தை அமாவாசை நாளில் சொந்த பந்தங்களுடன் இணைந்து குல தெய்வ வழிபாடு செய்வது நன்மையை கொடுக்கும்.

மகரம்

மகரம்


சனி பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மகரம் ராசிக்காரர்களே, உங்கள் ராசிக்குள் சூரியன், சனி, புதன், குரு, விரைய ஸ்தானத்தில் சுக்கிரன், லாப ஸ்தானத்தில் கேது, நான்காம் வீட்டில் செவ்வாய் ஐந்தாம் வீட்டில் ராகு என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. இந்த மாதத்தில் நீங்கள் எதிர்பார்த்த அதிசயம் நடைபெறும். கஷ்டங்கள் நீங்கும் கவலைகள் தீரும் காலம் வந்து விட்டது. பொருளாதார ரீதியான முன்னேற்றம் கிடைக்கும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். செய்யும் தொழிலில் லாபம் உண்டு. புத்திர பாக்கியம் கிடைக்கும். இந்த மாதம் திடீர் அதிர்ஷ்டம் வரும். அரசியல்வாதிகளுக்கு தைரியம் அதிகரிக்கும்.
சுக்கிரன் உங்கள் ராசியில் வரும் காலத்தில் நல்ல வேலை கிடைக்கும். பள்ளி கல்லூரியில் படிப்பவர்களுக்கு மன தைரியம் கூடும் படிப்பில் கவனம் அதிகரிக்கும். உங்கள் ராசியில் ஆறுகிரகங்கள் இணைகின்றன. சுப காரியங்கள் அதிகம் நடைபெறும். குடும்ப ஒற்றுமை மேலோங்கும். குடும்பத்துடன் வெளியூர் பயணம் செல்வீர்கள். வீட்டில் மங்கல காரியங்கள் நடைபெறும். புதிய பொருள் கை வந்து சேரும். திருமண சுப காரியங்கள் தடையின்றி நடைபெறும். கூட்டுதொழில் லாபத்தை கொடுக்கும். ஆறு கிரக சேர்க்கை ஏற்படும் அமாவாசை நாளில் காளி தேவியை வழிபடுங்கள் நன்மைகள் நடைபெறும்.

கும்பம்

கும்பம்

சனி பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட கும்பம் ராசிக்காரர்களே, உங்கள் ராசிக்கு மூன்றாம் வீட்டில் செவ்வாய், நான்காம் வீட்டில் ராகு, பத்தாம் வீட்டில் கேது, லாப ஸ்தானத்தில் சுக்கிரன், விரைய ஸ்தானத்தில் சூரியன், சனி, குரு, புதன் ஆகிய கிரகங்கள் பயணம் செய்கின்றன. விரைய ஸ்தானத்தில் கிரகங்கள் கூடியுள்ளதால் இந்த மாதம் செலவுகள் அதிகம் நடைபெறும். சுப செலவுகளாக மாற்றுங்கள். பூர்வ புண்ணியாதிபதி புதன் வக்ரமடைவதால் செய்யும் தொழிலில் கவனம் தேவை. உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். உணவு விசயத்திலும் கவனம் தேவை. வருமானம் அதிகம் வந்தாலும் அது வீண் செலவாக போகிறதே என்று கவலைப்பட வேண்டாம் இதுவும் கடந்து போகும். எதிர்பாலினத்தவர்கள் விசயத்தில் கவனம் தேவை. நண்பர்களே எதிரிகளாக மாறக்கூடிய வாய்ப்பு உள்ளது கவனம். குடும்பத்தில் விட்டுக்கொடுத்து செல்லுங்கள். வீண் வாக்குவாதங்கள் பிரச்சினையை ஏற்படுத்தி விடும். வேலைக்கு செல்லும் இடத்தில் உயரதிகாரிகளிடம் கவனமாக பேசவும். சுப காரியம் தொடர்பாக இப்போது பேச வேண்டாம் சில மாதங்கள் காத்திருக்கவும். இந்த மாதத்தில் கிடைக்கும் வேலையை ஏற்றுக்கொள்ளுங்கள். பொறுமையும் நிதானமும் தேவை. தை பூசம் நாளில் முருகனை தரிசனம் செய்வது நன்மையை கொடுக்கும்.

மீனம்

மீனம்

குரு பகவானை ராசி நாதனாகக் கொண்ட மீனம் ராசிக்காரர்களே உங்கள் ராசிக்கு இரண்டாம் வீட்டில் செவ்வாய், மூன்றாம் வீட்டில் ராகு, ஒன்பதாம் வீட்டில் கேது, பத்தாம் வீட்டில் சுக்கிரன், லாப ஸ்தானத்தில் சூரியன், சனி, குரு, புதன் என கிரகங்கள் பயணம் செய்கின்றன. இந்த மாதம் உங்களுக்கு லாபங்கள் நிறைந்த மாதம். தொட்ட காரியம் துலங்கும். வீட்டில் சுப காரியம் நடைபெறும். பிள்ளைகள் மூலம் நன்மைகள் நடைபெறும். வீட்டில் சுப காரியங்கள் நடைபெறும். வண்டி வாகன யோகம் வரும். ஆலய தரிசனம் செய்வீர்கள். வெளியூர் பயணங்களால் நன்மையை கொடுக்கும். சமூகத்தில் மதிப்பு மரியாதை கூடும். கடன் பிரச்சினைகள் நீங்கும். லாப ஸ்தானத்தில் ஆறு கிரகங்கள் இணைவதால் அரசியல்வாதிகளுக்கு முன்னேற்றங்கள் கிடைக்கும். பாராட்டுகள் அதிகரிக்கும். குடும்ப பிரச்சினைகள் நீங்கி சந்தோஷம் அதிகரிக்கும். வேலைக்கு செல்பவர்களுக்கு வேலையில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். சிலருக்கு சம்பள உயர்வும் புரமோசனும் கிடைக்கும். அரசு வேலைக்கு முயற்சி செய்யலாம் வெற்றிகிடைக்கும். மாணவர்களுக்கு இது நல்ல காலகட்டம். புதிய படிப்புகளுக்கு முயற்சி செய்யலாம். வியாபாரிகளுக்கு லாபம் பல மடங்கு அதிகரிக்கும். அரசு தொடர்பான சலுகைகள் தேடி வரும். ஆறு கிரகங்கள் இணைந்து ஐந்தாம் வீட்டினை பார்க்கின்றன. பிள்ளைகள் மூலம் நல்ல செய்திகள் தேடி வரும். தை பூசம் நாளில் திருச்செந்தூர் முருகனை வணங்கி வர நன்மைகள் அதிகரிக்கும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+