Rasi Palan This Week: சுக்கிரன் அருளால் அதிர்ஷ்டம் பெறும் துலாம் ராசி.. பெண்களுக்கு சூப்பர் ஜாக்பாட்
வார ராசி பலன்: நவம்பர் 17 ஆம் தேதி முதல் 23 ஆம் தேதி வரையிலான கார்த்திகை 1 முதல் 7 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான துலாம் ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

சூரியன் துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு வரக்கூடிய மாதமே கார்த்திகை மாதம். செவ்வாய் வீட்டிற்கு சூரியன் வரும் மாதம். கார்த்திகையில் மிக பிரசித்திபெற்ற விசேஷம் கார்த்திகை தீபம், சபரிமலைக்கு மாலை போடுவது. செவ்வாய் வீட்டிற்கு சூரியன், அதாவது பகை வீட்டிற்கு சூரிய வரும் காலகட்டம்.
அந்த வகையில், நவம்பர் 17 ஆம் தேதி முதல் 23 ஆம் தேதி வரையிலான கார்த்திகை 1 முதல் 7 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான துலாம் ராசி பலன்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு அற்புதமாக இருக்கக்கூடிய வாரம். ராசி, லக்கினத்தில் சுக்கிரம் இருப்பதால் அழகு, ஆடம்பரம், சந்தோஷம், காதல், காமம் என எல்லா விஷயங்களும் உங்களுக்கு நட்க்கும். உடம்பு ஆரோக்கியம் நன்றாக இருக்கும். 10 ஆம் இடத்தில் குரு இருப்பதால் புதிய வேலையில் மாற்றம் ஏற்படும். பழைய நண்பர்களால் புதிய வேலைக்கு மாறும் யோகம் உண்டாகும். பழைய விஷயங்கள் எல்லாம் நடக்கும்.
தைரியம் அதிகரிக்கும்
எந்த வாய்ப்புகளை நீங்கள் பயன்படுத்தினாலும் அதில் வெற்றி பெறுவீர்கள். தன குடும்ப வாக்கு ஸ்தானத்தில் சூரியன், செவ்வாய், புதன், வக்கிரம் இருந்தால் பல் சம்பந்தப்பட்ட விஷயங்களுக்கு சிகிச்சை பெறுவீர்கள். கண் சார்ந்த பிரச்சனைகள் வந்து போகும். வீட்டில் சண்டை சச்சரவுகள் ஏற்படும். மனைவிக்கு ஆரோக்கிய குறைபாடு ஏற்படும். தைரியம் உங்களுக்கு ஏற்படும். எடுத்த காரியங்களில் வெற்றி பெறுவீர்கள்.
அதிர்ஷ்டம் கொட்டும்
பெண்களுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளித் தரும் வாரமாக இருக்கும். நவம்பர் 25 ஆம் தேதி வரை சனி வக்கிரமாக இருப்பதால் தேவையில்லாத பகை ஏற்படும். விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. புதிய முயற்சிகளை செய்வீர்கள். எல்லா விஷயங்களும் தள்ளிப்போய் நடக்கும். எல்லா விஷயங்களும் உங்கள் வசமாகும். தெய்வ அனுக்கிரகம் நன்றாக இருக்கும். தாயின் ஆதரவு இருந்தால் அற்புதமாக எல்லா விஷயத்தையும் சாதிப்பீர்கள்.
ஆரோக்கியம்
தொண்டைப் பகுதி, அசிடிட்டி, பற்கள், காது, மூக்கு, தொண்டை தொடர்பான பாதிப்புகளில் கவனமாக இருப்பது நல்லது. பழைய கடன்களை அடைத்து முடிக்கும் யோகம் உண்டாகும். யோக பலன்கள் அதிக அளவில் பெறும் யோகம் ஏற்படும். வார்த்தைகளில் இனிமையைக் கடைப்பிடிக்க வேண்டும். தனிப்பட்ட முறையில் செல்வாக்குகள் கைகொடுக்கும்.
வழிபாடு
வார்த்தைகளில் சிறிது கவனமாக இருந்தால் அனைத்து விதமான நன்மைகளும் நடக்கும். உறவுகள் ஏற்றத்தைக் கொடுக்கும். துணையிடம் இருந்து வந்த மன வேற்றுமைகள் நீங்கும். முதுகு, கை, கால், சுழுக்கு போன்ற விஷயங்கள் பரிபூரண நிவர்த்தியாகும். நிறைய ஏற்றங்களும், பொன்னான காரியங்களும் நடக்கும். தாயார் வழிபாடு செய்வது அற்புதத்தை ஏற்படுத்தும். சந்தோஷம் ரீதியாக 90 சதவீதமும், பொருளாதாரம் ரீதியாக 80 சதவீதமும் அற்புதமாக இருக்கும்.
-
Kanni Rasi Palan: சொல்லி அடிக்கும் கன்னி ராசி.. இந்த விஷயங்களில் கவனமாக இருங்க..! -
Simmam Rasi Palan: சிங்கம் போல யோகம் பெறும் சிம்ம ராசி.. பண மழை கொட்டப் போகுது -
Kadagam Rasi Palan: கடக ராசிக்கு லாபத்தில் செவ்வாய்.. இந்த வாரம் அதிர்ஷ்டம், ஆபத்து சேர்ந்து வருது -
Mithunam Rasi Palan: டாப் கியரில் செல்லும் மிதுன ராசி.. 3 சர்ப்ரைஸ் நிச்சயம் -
Rishabam Rasi Palan: ஜாக்பாட் அடிக்கும் ரிஷப ராசி.. இனி தொட்ட காரியங்களில் வெற்றி நிச்சயம் -
Mesham Rasi Palan: மேஷ ராசிக்கு டபுள் தமாக்கா காத்திருக்கு.. இந்த வாரத்தில் நடக்கும் அதிரடி மாற்றம் -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங்












Click it and Unblock the Notifications