இதை ரோடுன்னு சொன்னா.. பஸ் கூட நம்பாது! மரணக் குழிகளாக மாறிய சென்னையின் முக்கிய சாலைகள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், நகரின் மிக முக்கியமான பிரதான சாலைகள் அனைத்தும் ஆங்காங்கே பெயர்ந்து, பெரும் பள்ளங்களாக மாறி பொதுமக்களை அச்சுறுத்தி வருகின்றன.

மாநகராட்சி சாலைகளைச் சீரமைக்க ₹500 கோடி நிதி ஒதுக்கிய தமிழக நெடுஞ்சாலைத்துறை, ஏற்கெனவே தன் நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ள முக்கிய சாலைகளைப் பராமரிக்கத் தவறிவிட்டதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. வெயில் அடித்த கோடைக்கால மாதங்களில் சாலைகளைச் சீரமைக்காமல் அதிகாரிகள் கோட்டைவிட்டதால், தற்போது மழைக்காலத்தில் புதிய தார்ச்சாலை போடும் பணிகள் ஜனவரி மாதம் வரை தள்ளிப்போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் மழைநீரில் மூழ்கிய சாலைகளில் வாகனங்களை இயக்க முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர்.

chennai tvk

பல்லாவரம் - துரைப்பாக்கம் ரேடியல் சால

ஜிஎஸ்டி சாலையையும் ஓஎம்ஆர் ஐடி காரிடாரையும் இணைக்கும் 14.3 கி.மீ நீளமுள்ள பல்லாவரம்-துரைப்பாக்கம் ரேடியல் சாலையில் நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பள்ளிப் பேருந்துகளும் அலுவலக வாகனங்களும் சென்று வருகின்றன. ஆனால், இங்குள்ள சர்வீஸ் சாலைகள் ஆக்கிரமிப்புகளாலும், சட்டவிரோத வாகன நிறுத்தங்களாலும் முழுமையாக முடங்கியுள்ளன. எம்பசி டெக் சோன் மற்றும் அருகிலுள்ள கல்லூரிகள் அருகே டாக்ஸிகளும் லாரிகளும் வரிசையாக நிறுத்தப்படுவதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

வணிக நிறுவனங்களும் திருமண மண்டபங்களும் தங்களின் பேஸ்மென்ட் பார்க்கிங் இடத்தை வாடகைக்கு விட்டுவிட்டு, பொது சாலையை ஆக்கிரமித்து வாகனங்களை நிறுத்துவதாக அறப்போர் இயக்கத்தின் டேவிட் மனோகர் சுட்டிக்காட்டியுள்ளார். காலையில் வாகன நிறுத்தமாகவும், மாலையில் தள்ளுவண்டி கடைகளாகவும் சர்வீஸ் சாலை மாறுவதால், பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் பெரும் ஆபத்தை எதிர்கொள்வதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். சாலையில் சிதறிக் கிடக்கும் ஜல்லிக் கற்களால் இருசக்கர வாகனங்கள் தொடர்ந்து சறுக்கி விழுகின்றன.

13 ஆண்டுகளாக முடங்கிக் கிடக்கும் சிடிஎச் சாலை

பாடி மேம்பாலத்தில் இருந்து திருவள்ளூர் நோக்கிச் செல்லும் 22 கி.மீ நீளமுள்ள சென்னை-திருவள்ளூர் நெடுஞ்சாலை (CTH Road), நிர்வாக அலட்சியத்தின் உச்சமாகத் திகழ்கிறது. கடந்த 2013-ல் ஆறு வழிச்சாலையாக மாற்ற தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திடமிருந்து மாநில நெடுஞ்சாலைத்துறைக்கு இது மாற்றப்பட்டது. சுமார் 150-க்கும் மேற்பட்ட இடங்களுக்கு நில எடுப்பு நோட்டீஸ் அனுப்பப்பட்ட போதிலும், பிரிட்டானியா மற்றும் அம்பத்தூர் சந்திப்புகளில் சாலை இன்னமும் குறுகிய இரண்டு வழிச்சாலையாகவே உள்ளது. இந்தச் சிறு தூரத்தைக் கடக்கவே அரை மணி நேரத்திற்கும் மேலாகிறது. தற்போது நில எடுப்பு சிக்கலைத் தீர்ப்பதற்குப் பதிலாக, உயர்மட்ட மேம்பாலம் கட்டுவதற்கான திட்ட அறிக்கை (DPR) தயாரிக்க அதிகாரிகள் முடிவெடுத்துள்ளது கூடுதல் தாமதத்தையே ஏற்படுத்தும் என பொதுமக்கள் கொந்தளிக்கின்றனர்.

அண்ணா சாலை மற்றும் பூந்தமல்லி நெடுஞ்சாலை

நகரின் மையப்பகுதியான அண்ணா சாலையில், நந்தனம் - தேனாம்பேட்டை இடையே ₹621 கோடியில் கட்டப்படும் உயர்மட்ட மேம்பாலப் பணிகள் மெட்ரோ சுரங்கப்பாதை கட்டுப்பாடுகள் காரணமாகப் பாதியிலேயே நிற்கின்றன. இதனால் கீழே உள்ள தரைமட்ட சாலை பராமரிக்கப்படாமல் குண்டும் குழியுமாக மாறியுள்ளது. செனோடாப் ரோடு சந்திப்பில் தார் முழுவதும் பெயர்ந்து போய்விட்டது. நந்தனம்-சைதாப்பேட்டை இடையே சாலையின் ஒரு பகுதி மேடாகவும் மறுபகுதி பள்ளமாகவும் இருப்பதால், இருசக்கர வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி விபத்தில் சிக்குகின்றனர்.

இதேபோல், மதுரவாயல் முதல் பாடி ரயில் நகர் வரையிலான 5 கி.மீ பூந்தமல்லி நெடுஞ்சாலை, துறைமுகம்-மதுரவாயல் பறக்கும் சாலை பணிகளைக் காரணம் காட்டி சீரமைக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

ஓஎம்ஆரில் தொடரும் அவதி

சோழிங்கநல்லூர் குமரன் சந்திப்பு அருகே மெட்ரோ ரயில் தூண்கள் அமைக்கும் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள போதிலும், சாலைகள் இன்னும் சமன் செய்யப்படவில்லை. திறந்தவெளி பள்ளங்களும் உடைந்த தார் துண்டுகளும் தினமும் 20 நிமிட பயண நேரத்தை வீணடிப்பதுடன், பாதசாரிகளை அச்சுறுத்துகின்றன. மெட்ரோ நிர்வாகத்திடம் சாலை சீரமைப்புக்கான நிதி இருந்தும், மழை தீவிரமடைவதற்குள் எந்தவொரு துறையும் களத்தில் இறங்கி சாலையைச் சமன் செய்ய முன்வரவில்லை என்பதே மக்களின் கவலையாக உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+