For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காதலும் கல்யாண வாழ்க்கையும் சந்தோஷமாக எப்படி மாறும் தெரியுமா

கல்யாணத்திற்கு பொருத்தம் பார்க்கிறப்ப களத்திர ஸ்தானமும் கட்டில் ஸ்தானமும்,புத்திர ஸ்தானமும், மாங்கல்ய ஸ்தானமும் நல்லா இருக்கா என்று பார்த்து சேர்த்து வைப்பது அவசியம். அப்படி இருந்தால் மட்டுமே அந்த திர

Google Oneindia Tamil News

சென்னை: காதலித்து கல்யாணம் செய்து கொள்பவர்களுக்கு ஜாதகமோ, பொருத்தமோ பார்க்கத் தேவையில்லை மணப்பொருத்தம் மட்டுமே பார்த்தால் போதுமானது. அதே நேரத்தில் பெற்றோர்கள் பார்த்து முடிவு செய்யும் வரன் என்றால் கண்டிப்பாக ஜாதகம் பார்த்து பொருத்தம் பார்த்தே ஆகவேண்டும். கல்யாணமோ,காதலோ கிரகங்களின் சேர்க்கையும் பார்வையும் சரியாக இருந்தால் மட்டுமே வெற்றிகரமானதாக, மகிழ்ச்சியான வாழ்க்கையாக அமையும்.

எல்லாத்துக்கும் ஒரு யோகம் வேண்டும் என்பார்கள். ஜாதகத்தில் சரியான யோகம் இருந்தால் மட்டுமே கல்யாண வாழ்க்கை களைகட்டும் இல்லாவிட்டால் தினசரி சோக கீதம் பாட வேண்டியதுதான். திருமணம் என்ற பந்தத்தை அமைப்பதற்கு முன்னர் ஆண்- பெண் இருவருடைய பிறந்த ஜாதகங்ளின் கிரக நிலைகளை ஆராய்ந்து, அந்த ஜாதகங்களில் இருவரின் மனமொத்த வாழ்க்கைக்குத் துணைவருவதாக இருந்தால் மட்டுமே இணைத்துவைப்பது நல்லது. இருவரின் ஜெனன ஜாதகத்திலும் மணவாழ்க்கைக்கு ஏற்ற கிரகங்களின் ஆதிக்கங்கள் பலமாக இருந்தல் மிகவும் அவசியம்.

திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக அமைவதற்கு, ஜென்ம லக்னத்திற்கோ சந்திரா லக்னத்திற்கோ 7ஆம் அதிபதி ஆட்சி, உச்சம் பெற்றோ, கேந்திர ஸ்தானமான 1, 4, 7, 10ஆம் வீடுகளிலோ, திரிகோண ஸ்தானங்களாகிய 1, 5, 9ஆம் வீடுகளிலோ அமையப்பெறுவது நல்லது.

ஜுன் 1 முதல் கோயில்கள் திறப்பு? இ பாஸ்.. குறைவான பக்தர்கள்.. இந்து அறநிலையத்துறை திட்டம்ஜுன் 1 முதல் கோயில்கள் திறப்பு? இ பாஸ்.. குறைவான பக்தர்கள்.. இந்து அறநிலையத்துறை திட்டம்

கல்யாண வரம்

கல்யாண வரம்

ஏழாம் ஆம் அதிபதி பாவியாக இருக்கும்பட்சத்தில் சுபர் நட்சத்திரத்தில் அமைவதும், சுபர் பார்வையுடனிருப்பதும், சொந்தவீட்டில் அமைவதும் கெடுதியில்லை. ஏழாம் அதிபதி, களத்திரகாரகனான சுக்கிரன் ஆகியோர் கிரகச் சேர்க்கையின்றி தனித்து அமையப்பெற்று சுபர் நட்சத்திரத்தில், சுபர் பார்வையுடன் இருப்பது நல்லது. களத்திர ஸ்தானத்தையோ, களத்திர காரகனையோ குரு பார்க்க கல்யாண வாழ்க்கை களைகட்டும்.

காதலும் வீரமும்

காதலும் வீரமும்

காதல் திருமண வாழ்க்கை பற்றி பிரபல ஜோதிடர் ஒருவர் கூறியுள்ளதை பாருங்கள், பொதுவாக சுக்கிரனுக்கு செவ்வாயை சமநிலையில் நட்பு வைத்துக்கொண்டாலும் உண்மையிலேயே செவ்வாயை தான் அதிகம் நேசிப்பார் ஏனென்றால் திருமணத்திற்கும் சரி காதலுக்கும் சரி ஏன் ஓரு மணமகனை தேர்தெடுப்பதிலும் சரி சுக்கிரன் என்னும் பெண்ணிற்கு செவ்வாயின் வீரம், ஆண்மை, மற்றும் சுறுசுறுப்பு மற்றும் ஹீரோயிசம்,பாதுகாப்பு , வன்மை மற்றும் திரில்லிங் இதற்கெல்லாம் அதிபதியாக அங்கம் வகிக்கும் செவ்வாய் என்னும் ஆண்மகன்களை தான் சுக்கிரன் என்னும் பெண்களுக்கு மிகவும் பிடிக்கும்.

கற்பு நிலை

கற்பு நிலை

அதேபோல் கவர்ச்சி, அழகு மற்றும் சுகபோகம் மற்றும் மென்மை குணம் கொண்ட சுக்கிரன் என்னும் பெண்ணை தான் ஆண்மகனான செவ்வாய்க்கு மிகவும் பிடிக்கும் இருவரது நட்பில் உள்ள கெமிஸ்ட்ரி இருக்கிறதே அது காதலுக்கும் அப்பாற்பட்ட பந்ததில் இருக்கும்ங்க ஏனென்றால் சுக்கிரனின் கற்புக்கும் பெண்ணிய தன்மைக்கும் பிரச்சனை வந்தால் போதும் செவ்வாய் பகவான் தனது பதிதர்மத்தை நிலைநாட்ட எந்த எல்லைக்கும் செல்வார்.

சந்திரன் செவ்வாய்

சந்திரன் செவ்வாய்

அதேபோல் செவ்வாய் என்னும் காதலன் அல்லது கணவனுக்கோ அவமானம் மற்றும் அசிங்கமோ வந்துவிட்டால் போது தன் கணவனுக்காக எதையும் செய்ய துணிச்சலாக முதல் ஆளாக தட்டிகேட்பது மனைவி / காதலியான சுக்கிரன் மட்டுமே இருவரது காதலுக்கும் உதவி செய்வது மனோகாரகன் சந்திரன் தான்.

காதலை சொல்லும் சந்திரன்

காதலை சொல்லும் சந்திரன்

ஆண் பெண் இருவருக்கும் உடல் மற்றும் மனோரீதியாக.ஆக்கிரமித்து நெருக்கத்தை ஏற்படுத்தி சுக்கிரனின் பெண்ணியத்தையும் செவ்வாயின் ஆண்மையையும் ஆக்கிரமித்து அதில் சுகம்காண்பதும் இந்த சந்திரன் தான் அதனால் தான் காலபுருஷனின் சுகஸ்தானமான கடகத்திற்கு சந்திரன் அதிபதியாக ஆட்சிசெய்கிறார். அதேநேரத்தில் ஒரு ஆணின் வெற்றிக்கு பின்னால் ஒரு பெண் இருக்கிறாள் என்பதையும் ஒரு பெண்ணின் வெற்றிக்கு பின்னால் ஒரு ஆண்மகன் இருக்கிறான் என்கிற வாழ்கை தத்துவத்தை உணரவைப்பது இந்த சந்திரன் தான்

குரு பார்வை அவசியம்

குரு பார்வை அவசியம்

ஆணிற்கு சுக்கிரன் களத்திரகாரகனாகவும் பெண்ணிற்கு செவ்வாய் களத்திரகாரகனாகவும் வருகிறார்கள் அதேபோல் மங்களகாரகன் மாங்கல்யம் என்கிற தகுதியை தனது வீரம் மற்றும் செவ்வாய் ஆண்மைமூலமும் களத்திரகாரகன் என்கிற தகுதியை மென்மை மற்றும் மோகம் பெண்ணியத்தின் மூலம் சுக்கிரனும் தகுதியை பெற்றார்கள். இருவரது காதலுக்கு வழிவகுத்து இல்லறத்தில் புகுந்து ஒரு வாரிசை பெற்று தருவதற்கு வழிவகை செய்வதும் இந்த சந்திரனும் குருபகவானும் தான் அதனால் தான் புத்திரகாரகன் குரு உடல் மற்றும் மனதிற்கு அதிபதியான சந்திரனின் வீட்டில் சுகஸ்தானமான கடகத்தில் உச்சம் அடைகிறார்.

சந்தோஷமான வாழ்க்கை

சந்தோஷமான வாழ்க்கை

குரு பார்வை கோடி புண்ணியத்தை கொடுக்கும் எத்தகைய தோஷங்களையும் நீக்கும். குரு பகவான் தான் இருக்கும் இடங்களிலிருந்து 5, 7, 9 ஆகிய ஸ்தானங்களைப் பார்வை செய்வார். குரு பார்வை பெறும் பாவங்களுக்கு எவ்வளவு தோஷங்கள் இருந்தாலும் அதன் கெடுதிகள் அனைத்தும் விலகி நற்பலன்கள் உண்டாகும். இவ்வளவு மகத்துவங்களைப் பெற்ற குருவின் பார்வை ஜென்ம லக்னத்திற்கோ, 7ஆம் வீட்டிற்கோ, 7ஆம் அதிபதிக்கோ, சுக்கிரனுக்கோ அமையுமானால் மணவாழ்க்கையானது மிகவும் சிறப்பு வாய்ந்ததாக இருக்கும்.

கட்டில் ஸ்தானம்

கட்டில் ஸ்தானம்

திருமண வாழ்க்கைக்கு உறுதுணையாக இருக்கக்கூடிய குடும்ப ஸ்தானமான 2ஆம் வீட்டிலும், சுக ஸ்தானமான 4ஆம் வீட்டிலும், புத்திர ஸ்தானமான 5ஆம் வீட்டிலும், பெண்களுக்கு மாங்கல்ய ஸ்தானமான 8ஆம் வீட்டிலும், கட்டில் சுக ஸ்தானமான 12ஆம் வீட்டிலும் பாவகிரகங்கள் எதுவும் இல்லாமல் பலமாக அமையப்பெற்றால் மணவாழ்க்கை மகிழ்ச்சிகரமானதாக இருக்கும்.

English summary
Vedic astrology can be a good help to guide us about the prospects of a happy married life or relationships.The lagan lord conjoined with 7th lord placed in lagna, 7th , 5th or 9th house. If this combination get the aspect of benefic planets then it shows deep affection in a relationship.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X