கன்னி ராசிக்கு 3 கிரகங்களின் பெயர்ச்சியால் காத்திருக்கும் அதிர்ஷ்டம், ஆபத்து.. கவனம் கவனம்
சனி, குரு, ராகு கேது பெயர்ச்சி பலன்: 2025 ஆம் ஆண்டில் சனி, குரு, ராகு கேதுவின் பெயர்ச்சியால் கன்னி ராசிக்கு கிடைக்கும் சாதகமான பலன்கள், எச்சரிக்கையாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு 7 இல் சனி பகவான் இருக்கிறார். 7 இல் சனி இருப்பதால் திருமணத்தில் எந்தவிதமான பாதிப்பையும் ஏற்படுத்தாது. ஆனால் துணையை தேர்ந்தெடுப்பதில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். செவ்வாயின் நிலை, தசா புத்தி, சனியின் நிலை போன்றவற்றை பார்த்துக் கொண்டு திருமணம் செய்வது நல்லது. திருமணத்தை தள்ளிப் போடத் தேவையில்லை.

குழந்தை பாக்கியம்
இந்த காலகட்டத்தில் உங்களுக்கு குழந்தை பாக்கியம் கட்டாயமாக உண்டாகும். குரு பகவான் குடும்ப ஸ்தானத்தை பார்ப்பதால் இயற்கையாகவும், மருத்துவம் பெற்று வருவோருக்கும் கண்டிப்பாக குழந்தை கிடைக்கும் யோகம் உண்டு. 2 ஆம் வீட்டை குரு 5 ஆம் பார்வையாக இருப்பதால் குழந்தைகளுக்கான முயற்சிகளை எடுப்பதற்கான சிறந்த காலகட்டமாக இருக்கும்.
கவனமாக இருக்க வேண்டிய விஷயம்
கன்னி ராசிக்காரர்கள் தங்களுடைய தொழில் கூட்டாளி, கூட்டாளி விஷயங்களில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். பழகும் அனைத்து நபர்களின் செயல்களிலுமே திருப்தி இல்லாத நிலை இருப்பதால் எரிச்சல், கோபத்தை தவிர்ப்பது நல்லது. புதிய அறிமுகங்களிடமும், சக ஊழியர்களிடமும் மிகுந்த கவனமாக இருப்பது நல்லது. நீங்கள் ஒன்று சொல்ல, அதனை வேறு விதமாக மேலிடத்தில் சொல்லக்கூடிய வாய்ப்புள்ளதால் கவனமாக இருப்பது நல்லது.
தொழில்
10 இல் குரு இருப்பதால் எந்தவிதமான பாதிப்பையும் ஏற்படாது. நிறைய மாற்றங்கள் தரக்கூடிய காலகட்டமாக இருக்கும். அந்த மாற்றத்தினால் சூப்பரான வளர்ச்சி உண்டாகும். தொழில்நுட்ப ரீதியான வேலைகள், புதிய நபர்களின் ஆலோசனை, மீட்டிங் மூலமாக தொழிலில் உள்ள பிரச்சனைகளைக் கண்டறிந்து அதற்கான தீர்வுகளை செய்வீர்கள். தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். மாற்று மொழி, மாற்று இனத்தவர் மூலமாக வெற்றியடையக் கூடிய காலகட்டமாக இருக்கும்.
10 இல் குரு இருந்தால் பதவி பறிபோகும் என்பது பழமொழி. ஆனால் அதை வைத்து மட்டும் முடிவு செய்ய முடியாது, வேலையில் இருந்து தனியாக செயல்படுவது, வேறு துறையைத் தேர்ந்தெடுப்பது, வேலையில் இடமாற்றம் போன்றவை உண்டாகுமே தவிர வேலையில் பாதிப்பு எதுவும் ஏற்படாது. குரு புதனுடைய வீட்டிற்கு வருவதால் உங்களுடைய புத்தி வேலை செய்து நல்ல மாற்றங்கள் உண்டாகும் காலகட்டமாக இருக்கும்.
வழக்குகளில் சாதகம்
7 இல் சனி இருக்கிறார். 9 ஆம் வீட்டையும், 4 ஆம் வீட்டையும் சனி பகவான் பார்க்கிறார். ஆனால், குரு தற்போது பார்ப்பதால் வரும் பிரச்சனைகள் அனைத்தையும் எளிதாக சமாளிக்கக்கூடிய யோகம் உண்டாகும். பெரிய பாதிப்புகள் அனைத்தும் ஏதோ ஒரு வகையில் வரும் உதவியால் நீங்கும். 6 ஆம் வீட்டிற்கு ராகு வருவதால் நெகட்டிவிட்டிகள் அனைத்தும் விலகும். ராகுவே குருவாக மாறுவதால் அதிர்ஷ்டமான காலகட்டமாக இருக்கும்.
சொத்துகள் வாங்கும் யோகம்
துலாம் ராசியின் 4 ஆம் வீட்டில் குரு, சனி பகவானின் பார்வை இருப்பதால் வீடு, நிலம் வாங்குவதற்கான யோகம் உண்டாகும். வாடகை வீட்டில் இருப்பவர்களுக்கு சொந்த வீடு செல்லும் வாய்ப்புள்ளது. விற்க முடியாத நிலத்தை எல்லாம் விற்று சொந்த வீடு கட்டும் சூழ்நிலை அமையும். முதலீடுகளைச் செய்து மகிழ்வீர்கள்.
கடன் பிரச்சனை
கன்னி ராசிக்கு 6 ஆம் வீட்டில் ராகு வருவதாலும், குருவின் பார்வை இருப்பதாலும் எத்தனை கடன்கள் இருந்தாலும் அதனை குறைப்பீர்கள். பழைய கடன்களை தீர்த்து முடிப்பீர்கள். பண வரவு அதிகரிப்பதால் கடனை அடைப்பதில் கவனம் செலுத்துவீர்கள். புதிய கடன்கள் வாங்குவதை தவிர்ப்பது நல்லது.
தான தர்மம்
7 இல் சனி பகவான் இருப்பதால் நீண்ட நாட்களாக திருமணம் ஆகாமல் இருப்பவர்களுக்கு திருமண விஷயங்களுக்கு உதவுவது, ஏழைகளுக்கு தாலி வாங்கி கொடுப்பது போன்றவை நற்பலன்களை அள்ளிக் கொடுக்கும். வேட்டி, சேலை என எந்த உதவியை வேண்டுமானாலும் செய்யலாம்.
வழிபட வேண்டிய தெய்வம்
மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்குச் சென்று வழிபடுவது, குறிப்பாக புதன்கிழமைகளில் தரிசனம் செய்வது நல்ல பலன்களையும், மனத் தெளிவையும் தரும். திருவெண்காடு புதன் ஸ்தலத்துக்குச் செல்வதும் நல்லது.












Click it and Unblock the Notifications