Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கோடீஸ்வர யோகம் தரும் அமாவாசை சோடசக்கலை தியான நேரம் எப்போது தெரியுமா

இன்று வைகாசி மாதம், அமாவாசை திதியும், கிருத்திகை நட்சத்திரமும், ஒரே நாளில் வருகின்றது. இந்த தினத்தில் நம் மனதில் நினைத்ததை நிறைவேற்றிக் கூடிய, சோடசக்கலை நேரம் குறிப்பாக எப்போது வருகிறது அந்த நேரத்தில்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கோடீஸ்வரர் ஆக வேண்டும் என்று நினைக்கிறீர்களா? இன்று நீங்கள் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் தியானம் செய்யுங்கள். அதற்கான அற்புதமான நாள் இன்றைக்கு கூடி வந்துள்ளது. நம்முடைய சித்தர்கள் நாம் நினைத்ததை நிறைவேற்றிக் கொள்வதற்காக, இந்த சோடசக்கலை நமக்கு சொல்லி வைத்துள்ளார்கள். குறிப்பாக இந்த வைகாசி அமாவாசை தினமான இன்று நீங்கள் நினைத்ததையெல்லாம் நிறைவேற்றிக்கொள்ள கடவுளை நினைத்து தியானம் செய்ய வேண்டிய அந்த சோடசக்கலை நேரம் என்பது இன்று இரவு 10.54 லிருந்து 12.54 மணி வரை உள்ளது.

சோடசக்கலை நேரம் என்பது அகத்தியர் அருளியது. திதிகள் 15 உள்ளன. வளர்பிறை திதி 15 தேய்பிறை திதி 15 இதனை கலை என்றும் சொல்லலாம். இதில் பதினாறாவதாக உள்ள திதிதான் சோடசக்கலை. இது 5 சொடக்கு போடும் நேரமே இருக்குமாம். இந்த நேரம் திருமூர்த்தியின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும். இந்த நேரத்தில் தியானம் இருந்தால் நினைத்தது நிறைவேறும் என்பது நம்பிக்கை. இந்த பூஜை செய்வதன் மூலம் குடும்பத்தில் ஆனந்தம், தனவரவு, மனநிறைவான தாம்பத்ய வாழ்க்கை அமையும். எல்லாம் வல்ல அன்னை அபிராமி ஒவ்வொரு திதியிலும் ஒவ்வொரு தேவியாகத் தோற்றமளித்து, தன்னை நாடும் பக்தர்களுக்கு அருளாசி புரிகின்றாள்.

அமாவாசை முடிந்து பிரதமை தொடங்கும் முன்பாகவும், பவுர்ணமி முடிந்து பிரதமை தொடங்கும் முன்பாகவும் 16வதாக வரும் சோடசக்கலை நேரம் அற்புதமான நேரம் உள்ளது. இந்த நேரத்தில் தியானம் இருந்தால் நினைத்தது நிறைவேறும். வைகாசி அமாவாசை திதி இன்று இரவு வரை உள்ளது இன்றைக்கு சோடசக்கலை நேரம் என்பது இன்று இரவு 10.54 லிருந்து 12.54 மணி வரை உள்ளது. இந்த நேரத்தில் பூஜை அறையில் விளக்கேற்றி வழிபட நன்மைகள் நடைபெறும் நினைத்தது நிறைவேறும். அஷ்ட லட்சுமியின் அருளோடு செல்வ வளம் பெருகும்.

பணக்காரர்களாவது எப்படி

பணக்காரர்களாவது எப்படி

சேட்டுகள், மார்வாடிகள் எல்லோரும் தலைமுறை தலைமுறையாகவே செல்வந்தர்களாக திகழ காரணம் அவர்களின் நடைமுறை வாழ்க்கைதான். பணத்தை எப்படி உபயோகிக்கிறார்கள் என்பதில்தான் இருக்கிறது. அம்பானி, அதானி எல்லாம் எப்படி பணக்காரர்களாக மாறுகிறார்கள் என்ற கேள்வி பலருக்கும் இருக்கிறது. பணம் பண்ணும் வழியும் அவர்களுக்கு தெரிந்திருக்கிறது. பணத்தை எப்படி பெருக்குவது பணத்தை எப்படி தக்க வைப்பது என்ற சூட்சுமம் அவர்களுக்கு தெரிந்திருக்கிறது.

பணத்தை ஈர்க்கும் பரிகாரம்

பணத்தை ஈர்க்கும் பரிகாரம்

பணக்காரனாகவேண்டும், ஏன் கோடீஸ்வரனாகவேண்டும் என்று கூட பலருக்கும் ஆசை இருக்கும், சுக்கிரனும், குபேரனும் அன்னை மகாலட்சுமியும் பணக்காரர்கள் வீட்டில் மட்டும்தான்தான் தங்குவார்களா? நம்ம வீட்டிற்கு எல்லாம் வர மாட்டார்களா என்று பலரும் நினைப்பார்கள். மகாலட்சுமியையும், குபேரனையும் நம் வீட்டிற்கு வர வழைக்கவும், தங்க வைக்கவும் ஒரு பரிகாரம் உள்ளது. அதை செய்தால் கண்டிப்பாக நீங்களும் பணக்காரர்கள் ஆகலாம்.

கோடீஸ்வரராக மாற்றும் தியானம்

கோடீஸ்வரராக மாற்றும் தியானம்

அமாவாசை முடிவதற்கு ஒருமணி நேரத்திற்கு முன்பே தியானத்தை தொடங்க வேண்டும் பூஜை அறையை சுத்தம் செய்து விளக்கேற்றி வைக்க வேண்டும். சைவ உணவுதான் சாப்பிட வேண்டும். வயிறு காலியாக இருந்தாலும் நல்லதுதான். ஆசனத்தில் அமர்ந்து இறைவனை மந்திரங்களால் ஜபிக்க வேண்டும். மனதிற்குப் பிடித்த மந்திரத்தை மனதால் ஜபித்து தியானம் செய்யலாம்.

இறைவனிடம் வேண்டுங்கள்

இறைவனிடம் வேண்டுங்கள்

பூஜை அறையில் சுத்தமான ஆசனத்தை விரித்து அமைதியாக வடகிழக்கு திசையைப் பார்த்து கண்களை மூடி அமரவேண்டும். நம்முடைய தேவையை என்னவோ அதை நினைத்து தியானத்தில் இருக்க அவண்டும். இந்த தியானத்தை ஜாதி, மதம் கடந்து யார் வேண்டுமானாலும் செய்யலாம். நோய் தீர, கடன் தீர, வம்பு வழக்குகள் தீர, பிரிந்த தம்பதியர் சேர என எதை நினைத்து வேண்டுமானாலும் தியானம் செய்யலாம்.

அமாவாசை சோடசக்கலை தியானம்

அமாவாசை சோடசக்கலை தியானம்

இன்றைய தினம் தியானத்தில் அமரும் சோடசக்கலை நேரம் இரவு 10.54 லிருந்து 12.54 மணி வரை உள்ளது. இந்த நேரத்தில் பூஜை அறையில் விளக்கேற்றி வழிபட நன்மைகள் நடைபெறும் நினைத்தது நிறைவேறும். வீடு, பங்களா, கார், பணம், வேலை, காதல், திருமணம் என உங்களுக்கு என்ன விருப்பமோ, நல்லதாக நினைத்து மனதார வேண்டுங்கள். நினைத்தது நிறைவேறிய உடன் அடுத்ததை நினைத்து தியானம் செய்யலாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+