Rasi Palan This Week: விருச்சிக ராசிக்கு எதிரிகளால் வரும் தொல்லை.. ரகசியம் காப்பது நல்லது
வார ராசி பலன்: நவம்பர் 3 ஆம் தேதி முதல் 9 ஆம் தேதி வரையிலான ஐப்பசி 17 முதல் 22 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான விருச்சிக ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

சூரிய பகவான் துலாம் ராசியில் நீச்சமாக இருக்கக்கூடிய மாதமே ஐப்பசி. அக்டோபர் 18 ஆம் தேதி முதல் நவம்பர் 16 ஆம் தேதி வரையிலான ஐப்பசி மாதத்தில் மழை, வெள்ளம், புயல் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. அரசியல்வாதிகள், பெரும் புகழ்மிக்கவர்கள், தொழிலதிபர்கள், உலகத் தலைவர்கள், பிரதமர்கள், ராணுவத் தளபதிகள், முப்படைத் தளபதிகள் உள்ளிட்டோர் கவனமாக இருக்க வேண்டிய காலகட்டம்.
அந்த வகையில், நவம்பர் 3 ஆம் தேதி முதல் 9 ஆம் தேதி வரையிலான ஐப்பசி 17 முதல் 22 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான விருச்சிக ராசி பலன்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் எதிரிகள் விஷயத்தில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். ஆரோக்கியத்தில் வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள், ரத்த அழுத்தம், சர்க்கரை தொடர்பான பாதிப்புகளில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். பதட்டங்களைத் தவிர்ப்பது நல்லது. கோபப்பட்டு தவறான வார்த்தைகளை பேசுபவர்களுக்கு சட்ட சிக்கல்கள் வருவதற்கான வாய்ப்புள்ளது.
தொழில்
தொழில் ரீதியாக விரயங்கள் காணப்படுகிறது. விலை உயர்ந்த பொருள்களை கையாளும் விருச்சிக ராசியினர் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். மன நிம்மதி ஏற்படும். ஏதோ ஒரு தவறு நடப்பது போன்று தேவையில்லாத பரிதவிப்புகள் ஏற்படும். அதுபோன்ற பாதிப்புகள் எதுவும் நேராது. பிள்ளைகள் விஷயத்தில் கோபத்தை தவிர்ப்பது நல்லது. பிள்ளைகளுக்கான சுப காரியங்கள் அடுத்தடுத்து நடக்கும்.
குரு பார்வை
குருவின் பார்வை பிள்ளைகளுக்கு அதிசாரத்தில் படுவதால் பூர்வ புண்ணியத்தால் புதிய வரவுகள் உண்டாகும். பிள்ளைகளின் படிப்பு, உத்தியோகம், தொழிலில் ஏற்றம் உண்டாகும். சங்கடங்கள் அனைத்தும் பரிபூரணமாக நீங்கும். குடும்பத்தில் நிம்மதி ஏற்படும். நீண்ட நாட்களாக இருந்த மனத் தாங்கல்கள், கஷ்டங்கள் தீரும். அதீத சந்தோஷம் ஏற்படும்.
சொத்துகள் சேரும்
தாய் வழி உறவு, தந்தை வழி உறவு மேன்மை அடையும். சுப காரியத்தில் இருந்த பிரச்சனைகள் நீங்கும். பண வரவுக்கான உத்தரவாதத்தைப் பெறுவீர்கள். அசையும், அசையா பொருள்கள் சேர்க்கை உண்டாகும். தொழில் ரீதியாக மேலதிகாரிகள், உங்களுடன் பணியாற்றுபவர்கள் உங்களை டார்கெட் செய்வது போன்றவை நீங்கும். பூர்வ புண்ணியத்தின் பலம், தாயின் ஆசிர்வாதம் உங்களைக் காப்பாற்றும்.
வழிபாடு
வியாழக்கிழமை தோறும் பெற்றோரின் காலில் விழுந்து கும்பிடுவது உங்களுக்கு அதிர்ஷ்டத்தை ஏற்படுத்தும். உங்களது பூர்வ புண்ணிய ஸ்தானம் குருவின் வீடு மீனமாகும். குருவின் ஆசிர்வாதம் அல்லது குருக்களின் ஆசிர்வாதம் மேன்மையை ஏற்படுத்தும். குரு மந்திரம், மகான்கள் வழிபாடு உங்களுக்கு எப்போதும் மேன்மையை ஏற்படுத்தும்.
ரகசியம் காப்பது..
ரகசியங்களை மிகவும் ரகசியமாக வைத்திருப்பது நல்லது. யாரிடத்திலும் உங்களுடைய எதிர்கால முதலீடுகள், பண விஷயங்கள் குறித்து ஆலோசிக்காமல், பேசாமல் இருப்பது நல்லது. எதிரிகள், ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். விநாயகர் வழிபாடு, முருகர் வழிபாடும் உங்களைக் காப்பாற்றும். சுப்பிரமணிய புஜங்கமும், துர்க்கை கவசமும் பெரிய பலத்தைக் கொடுக்கும்.












Click it and Unblock the Notifications