Viruchigam: விருச்சிக ராசிக்கு அடிக்கும் அதிர்ஷ்ட அலை.. பொறுமை ரொம்ப முக்கியம் பாஸ்
Vaikasi Matha Palangal: வைகாசி மாதத்தில் விருச்சிக ராசியினருக்கு அதிர்ஷ்டம் கிடைக்குமா, என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கும், வழிபட வேண்டிய தெய்வம் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
வைகாசி மாதம் என்றாலே சிறப்பான மாதமாகும். முருகர் அவதரித்த மாதம். வைகாசி மாதம் ஆரம்பிக்கும்போது அஸ்வினி நட்சத்திரத்தில் சந்திரன் சஞ்சாரத்தை தொடங்குகிறார். 12 ஆம் இடத்தில் சனி தன் இருப்பை நிலை நிறுத்தியிருக்கிறார். செவ்வாய் மேஷ வீட்டில் ஆட்சியாகி இருக்கிறார். சுக்கிரன் விருச்சிகம் வீட்டில் இருக்கிறார். சூரியன் ரிஷப வீட்டில் இருந்து இந்த மாதத்தில் தனது சஞ்சாரத்தை தொடங்குவதே வைகாசி மாதமாகும்.

சுக்கிரன் குரு உச்சமாக இருக்கக்கூடிய கடகத்தில் வந்து அமருகிறார். கேது சிம்ம வீட்டிலும், ராகு கும்ப வீட்டிலும் இருக்கிறார். இந்த கிரக நிலைகள் விருச்சிக ராசியினருக்கு என்ன விதமான பலன்களைக் கொடுக்கும். கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
விருச்சிகம்
விருச்சிக ராசியினருக்கு வழக்குகளில் வெற்றி பெறும் யோகம் உண்டாகும். சுபகாரியங்கள் அடுத்தடுத்து நடக்கும் அமைப்பு. பிள்ளைகள் விஷயத்தில் ஏற்றம் ஏற்படும். தைரியம் ஏற்படும். மன அழுத்தம் தீரும். உறவுகளின் ஆரோக்கியத்தைப் பார்த்துக் கொள்ள வேண்டும். பெரியவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபடாமல் இருக்க வேண்டும்.
தலையீடு
குடும்பத்தில் துணையிடம் மனம் விட்டுப் பேசுவது நன்மையைத் தரும். மற்றவர்கள் குடும்ப விஷயத்தில் தலையிடக் கூடாது. அதேபோல, உங்கள் குடும்ப விஷயத்தில் அந்நியர் தலையீடு இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். உத்தியோகம், தொழில், வியாபாரத்தில் அலைச்சல்கள் அதிகமாக இருக்கும். திங்கள்கிழமை தோறும் பசு மாடுகளுக்கு உணவளிப்பது ஏற்றத்தைத் தரும்.
திறமை வெளிப்படும்
உங்களுக்கு இந்த வைகாசி மாதம் கலவையான பலன்களை தரக்கூடியதாக இருக்கும். வேலை மற்றும் தொழில் தொடர்பாக புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பணியிடத்தில் உங்கள் திறமைகள் வெளிப்பட்டு பாராட்டுகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. அதேசமயம் வேலைப்பளு அதிகரிப்பதால் சற்று சோர்வு ஏற்படலாம். சமூகத்தில் உங்கள் மதிப்பும் அந்தஸ்தும் உயரும்.
பொறுமை அவசியம்
முக்கியமான நபர்களின் அறிமுகம் கிடைத்து அதனால் எதிர்கால முன்னேற்றத்திற்கு வாய்ப்புகள் உருவாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் அல்லது முயற்சிகள் மேற்கொள்ளும் போது கவனமாக செயல்படுவது நல்லது. திருமண வாழ்க்கையில் சிறிய கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்பு இருப்பதால் பொறுமையுடனும் விட்டுக்கொடுத்தும் நடந்து கொள்வது நல்ல பலனை தரும்.
வழிபாடு
குடும்பத்தில் அமைதியை பேணுவதற்கு தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பது அவசியம். பொருளாதாரத்தில் நிலையான வருமானம் இருந்தாலும் செலவுகளை கட்டுப்படுத்துவது நல்லது. உடல்நலத்திலும் ஓய்விலும் கவனம் செலுத்தினால் இந்த மாதத்தை சிறப்பாக சமாளிக்க முடியும்.வயிறு, கழிவுப் பாதை தொடர்பான விஷயங்களில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். முருகர் வழிபாடு ஏற்றத்தைக் கொடுக்கும்.
-
Simmam: ஜூன் 15க்கு பிறகு சிம்மத்தின் வாழ்க்கையில் பெரிய மாற்றம்!.. குரு பார்வையால் வரும் அதிர்ஷ்டம் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு?












Click it and Unblock the Notifications