வார ராசி பலன்: சிம்மம், கன்னி ராசிக்கு நடக்க போகும் அதிரடி மாற்றம்.. ஆரோக்கியத்தில் மட்டும் கவனம்

Subscribe to Oneindia Tamil

வார ராசி பலன்: பங்குனி மாதத்தில் மார்ச் 24 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை சிம்மம், கன்னி ராசிக்காரர்களுக்கு என்ன பலன்கள் கிடைக்கும், எந்த தெய்வங்களை வழிபட வேண்டும், பரிகாரங்கள் என்ன என்பது குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.

மார்ச் மாதத்தில் ஜோதிடத்தின் முக்கிய நிகழ்வான சனிப்பெயர்ச்சி நடைபெறவுள்ளது. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களுடைய இயக்கத்தை மாற்றுவதும், ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்கு இடப்பெயர்ச்சியாவதும் வழக்கம். இந்த கிரகங்களின் பெயர்ச்சி மற்றும் இயக்கத்தில் ஏற்படும் மாற்றம் ஒவ்வொரு ராசிகளிலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தும்.

Weekly rasi palan Astrology lucky zodiac signs

அந்த வகையில், மார்ச் மாதத்தில் முக்கியப் பெயர்ச்சியாக சனிப்பெயர்ச்சி நடைபெறவுள்ளது. சனி பகவான் சில ராசிகளுக்கு அபரிமிதமான நல்ல சுப பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் தரப்போகிறார். மாதத்தில் சிறந்த மாதமான பங்குனி மாதம் தற்போது தொடங்கியுள்ளது. பங்குனி மாதத்தில் மார்ச் 24 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை சிம்மம், கன்னி ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.

சிம்மம் - மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வாழ்வில் ஏற்றம் காணப்படும். தன்னம்பிக்கை, தைரியம் அதிகரிக்கும். ஆடை, ஆபரணம் வாங்குவதற்கான சூழல் உருவாகும். நீண்ட காலமாக சிந்தித்து வரும் வீடு, நிலம் உள்ளிட்ட சொத்து வாங்கும் முயற்சியில் முன்னேற்றம் ஏற்படும். வாகனம், வீட்டுக்கு தேவையான அடிப்படை, அத்தியாவசிய பொருட்கள் வாங்குவீர்கள்.

உத்யோகம் மற்றும் தொழிலில் நல்ல மாற்றம் நிகழும். உங்களின் பெற்றோர் மூலம் ஆதாயம் உண்டு. பூர்விக சொத்து மூலம் ஆதாயம் உண்டு. குடும்பத்தில் உள்ள மூத்தவர்களால் நல்ல பலன்கள் கிடைக்கும். கலை மற்றும் ஊடகத்துறை சம்பந்தப்பட்டவர்களுக்கு நினைத்த காரியங்கள் எல்லாம் நிறைவேறும்.

இறங்கிய காரியத்தில் எல்லாம் வெற்றி கிடைக்க போகிறது. புதிய தொழிலில் முயற்சியில் நன்மை கிடைக்கும். விவசாயிகளுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். நீண்ட காலமாக திட்டமிட்ட ஆன்மிக பயணங்கள் நிறைவேறுவதற்கான வாய்ப்பு உள்ளது. பொருளாதாரத்தில் முன்னேற்றம் இருக்கும். வெளியூர், வெளிநாடு பயணம் ஏற்படும்.

வாகனம் ஓட்டும்போது கவனமாக இருக்க வேண்டும். ஆரோக்கியத்தில் அதிக அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. நரம்பு, கண் சம்பந்தப்பட்ட தொந்தரவுகள் வர வாய்ப்புள்ளது. அந்நியர்களிடம் அதிக கவனமாக இருக்க வேண்டும். வாழ்க்கை துணை உடல் ஆரோக்கியத்தில் எச்சரிக்கையாக இருப்பது அவசியம். உயரதிகாரிகளிடம் வீண் வாக்குவாதம் செய்வதை தவிர்க்கவும். திருவாரூர் திருகொள்ளிக்காடு அக்னீஸ்வரர் கோயில் சென்று வழிபடுவது காரிய தடைகளை நிவர்த்தி செய்யும்.

கன்னி - கல்வியில் சிறந்த முன்னேற்றம் காணப்படும். உத்யோகம் மற்றும் தொழிலில் நல்ல மாற்றம் ஏற்படும். தன்னம்பிக்கை, தைரியம் அதிகரிக்கும். உத்யோகத்தில் உயரதிகாரிகளின் நம்பிக்கை மற்றும் பாராட்டை பெறுவீர்கள். வீடு, தொழில், உத்யோகம் ஆகியவற்றில் நல்ல மாற்றம் இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

தொழில் விருத்தி செய்வீர்கள். வம்பு, வழக்குகளில் உங்களுக்கு சாதகமான தீர்ப்பு கிடைக்கும். சுப காரியங்கள் ஒவ்வொன்றாக நடக்கும். உத்யோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.

ஆரோக்கியத்தில் அதிக அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. காது, மூக்கு, தொண்டை சம்பந்தப்பட்ட பிரச்னைகள் ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது. விலை உயர்ந்த பொருட்களை கையாள்வதில் கவனம் தேவை. வீண் விவாதத்தை தவிர்ப்பது நல்லது. அரசு, அரசியல் கட்சிகள் சம்பந்தப்பட்டவர்கள் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும். வாழ்க்கை துணை ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. நவகிரகத்தில் உள்ள திருநள்ளாறு சென்று வழிபடுவது நன்மையை கொடுக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+