சிம்மம், கன்னி ராசிகளை திக்கு முக்காட வைக்கும் சூப்பர் அதிர்ஷ்டம்.. பண மழை கொட்டப் போகுது

Subscribe to Oneindia Tamil

ராசி பலன்: பங்குனி மாதத்தில் ஏப்ரல் 16 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை சிம்மம், கன்னி ராசிக்காரர்களுக்கு என்ன பலன்கள் கிடைக்கும், எந்த தெய்வங்களை வழிபட வேண்டும், பரிகாரங்கள் என்ன என்பது குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.

இரண்டு வார ராசி பலன்

ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களுடைய இயக்கத்தை மாற்றுவதும், ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்கு இடப்பெயர்ச்சியாவதும் வழக்கம். கடந்த மார்ச் முதல் வருகிற மே மாதம் வரை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. கடந்த மார்ச் 29 ஆம் தேதி சனிப்பெயர்ச்சி நிகழ்ந்தது. தமிழ் புத்தாண்டும் பிறந்துவிட்டது. விரைவில் குருப்பெயர்ச்சி, ராகு கேது பெயர்ச்சியும் நிகழ உள்ளது. இது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

Weekly rasi palan Simmam Kanni

16.04.2025 - 30.04.2025

பங்குனி மாதம் நிறைவடைந்து சித்திரை மாதம் பிறந்துள்ளது. புதிய நம்பிக்கையுடன் பிறந்துள்ள விசுவாவசு தமிழ் புத்தாண்டு அனைவருக்கும் நல்ல மாற்றத்தை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் 16.04.2025 - 30.04.2025 சிம்மம், கன்னி ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள் மற்றும் வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த கட்டுரையில் விரிவாகவும், தெளிவாகவும் பார்க்கலாம்.

சிம்மம் - இந்த காலத்தில் அதிகளவு நற்பலன்களை பெறப் போகிறீர்கள். கலை மற்றும் ஊடகத்துறையினருக்கு நல்ல ஏற்றத்தை அடைவார்கள். எல்லாவற்றிலும் அடுத்தடுத்து அதிர்ஷ்டங்கள் தேடி வரும். உள்ளூர் முதல் வெளிநாடு வரை தொடர் பயணங்களால் நன்மை ஏற்படும். நன்மைகள் கூடி வந்தாலும் மே மாதம் இரண்டாம் வாரத்தில் இருந்து எல்லாவற்றிலும் பெரிய வெற்றி கிடைக்கும்.

நிதானம்

எதிலும் நிதானமாக சிந்தித்து தெளிவான முடிவுகளை எடுப்பது நன்மைகளை கொடுக்கும். தொழிலில் புதிய முடிவுகளை எடுக்க வேண்டாம். வார்த்தைகளில் அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். தேவையில்லாத விஷயங்களில் மூக்கை நுழைக்காமல் இருப்பது பல பிரச்னைகளை தவிர்க்கும். அக்கம், பக்கத்தினர் மற்றும் அரசியல் சம்பந்தப்பட்டவர்களிடம் கவனமாக இருக்க வேண்டும். உத்யோகத்தில் உயரதிகாரிகளை அனுசரித்து செல்வது நல்லது.

தானம்

கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற அதிகம் சிரமப்படுவீர்கள். உங்கள் வீட்டின் அருகில் உள்ள பெருமாள் கோயிலுக்கு சென்று தரிசனம் செய்வது நன்மைகளை அதிகரிக்கும். பள்ளி கொண்ட பெருமாளாக இருந்தால் இன்னும் அதிக நன்மையை கொடுக்கும். செவ்வாய்க்கிழமைகளில் பசு மாடுகளுக்கு உணவு தானம் அளிப்பது காரிய தடைகள் நிவர்த்தியாகும்.

கன்னி - எல்லாவற்றிலும் அதிகளவு நன்மை, ஏற்றம் காணப்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். உத்யோகம் மற்றும் தொழிலில் நல்ல ஏற்றம் இருக்கும். கல்வியில் நல்ல முன்னேற்றம் காணப்படும். பண வரவு மிக சிறப்பாக இருக்கும். முதலீட்டில் நல்ல லாபம் காணப்படும். வேற்று மொழி மனிதர்களால் நல்ல ஆதாயம் ஏற்படும். தைரியம், நம்பிக்கை அதிகரிக்கும்.

மன அழுத்தம்

உத்யோகத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். விலை உயர்ந்த பொருட்களை கையாள்வதில் அதிக கவனம் தேவை. மன அழுத்தம் ஏற்படும். சுப காரியங்களில் தடை உண்டாகும். வீண் விரயம் உண்டாவதற்கான வாய்ப்புள்ளது. குடும்பத்தில் அந்திய தலையீடு இல்லாமல் பார்த்துக் கொள்வதும், பிறர் குடும்பங்களில் உங்களின் தலையீடும் இல்லாமல் பார்த்துக் கொள்ளவும்.

கவனம்

சளி, கால் வலி, ஒவ்வாமை உள்ளிட்ட விஷயங்களில் அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். சித்திரை மாதம் முழுவதுமே ஞாயிற்றுக்கிழமை மதிய உணவுடன், எலுமிச்சை ஊறுகாய் தானம் செய்வது வீண் விரயங்களை தடுத்து நல்ல பலன்களை கொடுக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+