சொத்துகளைக் குவிக்கும் ராசியினர்.. தொட்ட காரியங்களில் வெற்றி பெறும் ராசிக்காரர்கள்
Weekly rasi palan: பிப்ரவரி 17 ஆம் தேதி முதல் 23 ஆம் தேதி வரை துலாம், விருச்சிகம், தனுசு ராசிக்காரர்கள் பெறப் போகும் நற்பலன்கள், எச்சரிக்கையாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
துலாம்: துலாம் ராசிக்காரர்கள் பிள்ளைகளிடம் கோப தாபம் வேண்டாம். பிள்ளைகளிடம் மனம் விட்டுப் பேசுவது நல்லது. அபிராமி அந்தாதி படிப்பது நல்ல பலன்களைத் தரும். மாசி மாதத்தில் படிப்பு, தொழில், வியாபாரத்தில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள். தெய்வ வழிபாடுகளில் நாட்டம் அதிகரிக்கும். எதிர்பார்த்த அனைத்து விஷயங்களும் நடக்கும். அதில் முன்னற்றத்தையும் காண்பீர்கள்.

அலர்ஜி, சளி தொந்தரவு, தோல் பிரச்சனைகள் ஏற்படும். சங்கரன் கோயிலில் கோமதி அம்மன் சன்னிதானத்தில் புற்று மண்ணை எடுத்து வருகிறேன் என்று வேண்டிக் கொள்வது தோல் பிரச்சனைகளில் இருந்து விடுபடுவதற்கான வாய்ப்புள்ளது. வாழ்க்கையை செதுக்க கூடிய காலகட்டமாக இருக்கும். கொடுக்கும் வார்த்தைகளை காப்பாற்றுவீர்கள். உறவினர்களால் ஏற்படும் பணத் தட்டுப்பாடு குறையும். சுப விரயம் செய்து மகிழ்வீர்கள். மன தாங்கல்கள் குறையும். எதிர்பாராத நல்ல விஷயங்கள் நல்ல முன்னேற்றத்தைக் கொடுக்கும்.
விருச்சிகம்: யோக பலத்தை அதிகமாகப் பெறக்கூடிய ராசிக்காரர்களாக இருப்பார்கள். ரத்த பந்த உறவுகளில் கோபப்படாமல் இருப்பது நல்லது. துர்கை வழிபாடு சகல விதமான பலன்களையும் பெற்றுத் தரும். சுப காரிய தடைகள் நீங்கும். தைரியம், தன்னம்பிக்கை அதிகரிக்கும். அசையும் அசையா சொத்துகள் ஆனந்தத்தை ஏற்படுத்தும். வண்டி, வாகனங்கள், நகைகள் வாங்கி மகிழ்வீர்கள். தொழிலில் நல்ல முன்னேற்றத்தை ஏற்படுத்திக் கொடுக்கும். குடும்பத்தில் அந்நியோன்ய குறைபாடு ஏற்படும்.
விட்டுக் கொடுத்து போனால் குடும்பத்தில் சுபிட்சத்தையும், அஷ்ட லட்சுமி கடாட்சத்தையும் மற்றவர்கள் கண் படும் அளவுக்கு மகிழ்ச்சியான அமைப்பை ஏற்படுத்தும். ஏதாவது ஒன்றை பறிகொடுத்தது போல் எப்போதும் இருப்பதை தவிர்ப்பது நல்லது. ரத்த அழுத்தம், கொழுப்பு, சர்க்கரை பிரச்சனைகளில் கவனமாக இருக்க வேண்டும். நல்ல விஷயங்கள், சுப காரியங்கள் அனைத்தும் நடக்கும். தேவையில்லாத பதட்டம், கஷ்டத்தை ஏற்படுத்திக் கொள்ளாமல் இருப்பது நல்லது. முன்னேற்றத்தை ஏற்படுத்தும் நல்ல காலமாக இருக்கும்.
தனுசு: தனிப்பட்ட முறையில் செல்வாக்கு கூடும் நேரமாக இருக்கும். உள்ளூர், வெளியூர், கடல் கடந்த பயணம், சொந்த கிராமத்துக்குச் செல்வது போன்ற யோகம் உண்டு. விடுபட்ட தெய்வ வழிபாடுகள், குலதெய்வ வழிபாடுகளைச் செய்து அனுகூலத்தைப் பெறுவார்கள். சூரியன் 9 ஆம் வீட்டை பார்ப்பதால் மூதாதையரின் ஆசிர்வாதத்தை கொடுக்கும். ஆஞ்சநேயர் வழிபாடு, சூரிய கிரக வழிபாடு நன்மை பயக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். வார்த்தை மதிப்பு மரியாதை அதிகரிக்கும்.
சுப நிகழ்ச்சிகள் நடப்பதற்கான வாய்ப்புள்ளது. அசையும், அசையா சொத்துகளை சேர்த்து மகிழ்வீர்கள். குடும்பத்தில் புதுவரவு உண்டாகும். படிப்பு, வியாபாரம், தொழிலில் அனுகூலங்கள் காணப்படும். மீடியா துறையில் இருப்பவர்களுக்கு அனுகூலம் ஏற்படும். வயிறு தொடர்பான பிரச்சனைகள், சுழுக்கு பிரச்சனைகள் ஏற்படும். ஏற்றமும், அனுகூலமும், செல்வாக்கும் கூடக்கூடிய காலமாக இருக்கும். நடைப்பயிற்சி, உடற்பயிற்சி மேற்கொள்வது நல்ல பலன்களைத் தரும்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications