திடீர் யோகத்தை அள்ளும் தனுசு, மகரம் ராசிகள்.. இந்த வாரத்தில் நடக்கப் போகும் சூப்பர் மாற்றம்
வார ராசி பலன்: ஏப்ரல் 28 முதல் மே 4 ஆம் தேதி தனுசு, மகரம் ராசியினருக்கு என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கும், எந்த விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும், தெய்வ வழிபாடுகள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் இடப்பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலைமாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும். அந்த வகையில், இந்த வாரத்தில் தனுசு மற்றும் மகர ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

தனுசு
நிம்மதி
சமூகத்தில் உங்களின் தனிப்பட்ட செல்வாக்கு அதிகரிக்கும். உத்யோகத்தில் அற்புதமான பலன்களை பெற போகிறீர்கள். எல்லா வகையிலும் ஏற்றம் காணப்படும். திறமைக்கேற்ற அங்கீகாரம் கிடைக்கும். உறவினர்கள், நண்பர்களால் மகிழ்ச்சி ஏற்படும். பயணங்களால் ஆதாயம் உண்டு. மனதில் இருந்த சஞ்சலங்கள் விலகி நிம்மதி ஏற்படும்.
பண வரவு
பண வரவு திருப்தியாக இருக்கும். உத்யோகத்தில் இருந்த தடைகள் நிவர்த்தியாகும். தொழிலில் இருந்த சிக்கல்கள் நீங்கி நல்ல ஏற்றம் காணப்படும். தன்னம்பிக்கை, தைரியம் அதிகரிக்கும். தாய், தந்தை வழி உறவில் இருந்த கசப்புகள் நீங்கி மேன்மையடையும். உறவுகளிடையே இருந்த சங்கடங்களும் நீங்கும். முன்னேற்ற பாதைக்கான முயற்சிகளை மேற்கொள்வதற்கு சரியான காலகட்டம்.
லாபம்
தொழில் விருத்தியாகி நல்ல லாபம் கிடைக்கும். கல்வியில் நல்ல முன்னேற்றம் காணப்படும். தொலைதூர தகவல்களால் மன மகிழ்ச்சி ஏற்படும். உடல், ஆரோக்கியத்தில் கூடுதல் அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும். வயிறு சம்பந்தப்பட்ட பிரச்னை ஏற்படும் என்பதால் உணவு பழக்க வழக்கத்தில் கவனம் தேவை.
கவனம்
குழந்தைகள் விஷயத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும். முக்கியமாக குழந்தைகளிடம் கோபத்தை குறைத்துக் கொண்டு அன்பாக செல்வது நல்லது. பொருளாதாரத்தில் உயர்வு இருந்தாலும் வீண் விரயம் காணப்படும். ஆதரவற்றவர்களுக்கு செவ்வாய்க்கிழமை மதியம் உணவு, எலுமிச்சை ஊறுகாய் அல்லது எலுமிச்சை சாறு தானம் செய்வது வீண் விரயத்தைத் தடுக்கும்.
மகரம்
அதிர்ஷ்டம்
இந்த வாரத்தில் அதிகளவு நற்பலன்களை பெறப்போகிறீர்கள். உத்யோகம், தொழிலில் ஏற்றம் காணப்படும். குழந்தைகளின் கல்வி, உத்யோகம், தொழிலில் இருந்த மனக்கவலைகள் நீங்கி முன்னேற்றம் காணப்படும். சுப காரிய தடைகள் நிவர்த்தியாகி அடுத்தடுத்து சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். பண வரவு சிறப்பாக இருக்கும். அடுத்தடுத்து அதிர்ஷ்டம் உங்கள் வீட்டுக் கதவை தட்டும்.
மாற்றம்
உத்யோகம், தொழிலில் எதிர்பார்த்தபடியான மாற்றங்களை மேற்கொள்வதற்கு இது சிறந்த காலம். முதலீடுகளில் லாபம் அதிகரிக்கும். தடைபட்ட காரியங்கள் உங்களுக்கு சாதகமாக மாறும். மனதில் இருந்த கவலைகள் நீங்கி மகிழ்ச்சி அதிகரிக்கும். தாய், தந்தை வழி உறவுகளால் ஆதாயம் கிடைக்கும். மனதில் தன்னம்பிக்கை, தைரியம் அதிகரிக்கும்.தொழிலில் சிறப்பாக இருக்கும். அதனால் புதிய முயற்சிகளை மேற்கொள்வதற்கு இது அற்புதமான காலம்.
கவனம்
வாழ்க்கை துணையுடன் வீண் விவாதத்தை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் அந்நியர் தலையீடு கூடாது. பிறர் குடும்ப விவகாரங்களில் நீங்கள் தலையிடாமல் இருப்பது நல்லது. ரத்தம் சம்பந்தப்பட்ட பிரச்னை, சளி பிரச்னை அதிகரிக்க வாய்ப்புள்ளது. எனவே உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். சிறிய பிரச்னை என்று எதையும் அலட்சியப்படுத்த வேண்டாம். அருகில் உள்ள சிவன் கோயில்களில் சென்று வழிபடுவது நல்ல பலன்களை கொடுக்கும். இந்திராட்சி கவசம் பாடுவதால் பாதிப்புகள் குறைந்து நன்மை அதிகரிக்கும்.












Click it and Unblock the Notifications