தனுசு ராசிக்கு ஜாக்பாட் நிச்சயம்.. கோபம் வேண்டவே வேண்டாம்.. உடற்பயிற்சி ரொம்ப முக்கியம்
வார ராசி பலன்: அம்மனுக்குரிய ஆடி மாதம் தொடங்கியுள்ளது. இந்த வாரம் ஆடி 5 முதல் 11 ஆம் தேதி வரையிலான (ஜூலை 21 முதல் 27 வரை) தனுசு ராசிக்கு இந்த வாரத்திற்கான பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
அம்மனுக்கு விஷேசமான மாதமான ஆடி மாதம் பிறந்துள்ளது. நவக்கிரகங்களில் உள்ள ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் இடப்பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலைமாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும். அந்த வகையில், இந்த வாரத்தில் தனுசு ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

தனுசு ராசி பலன்
தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த காலகட்டத்தில் அதிக அளவிலான யோக பலன்கள் கிடைக்கம். நினைத்தது நடக்கும் காலகட்டமாக இருக்கும். எடுத்த முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள். 8 ஆம் இடத்தில் சூரிய பகவான் இருக்கிறார். இதனால் ஒருவிதமான மன அழுத்தம், கோபம் இருந்து கொண்டே இருக்கும். மற்றவர்கள் எப்பவோ செய்த தவறை குடும்பத்தில் கொண்டு வந்து அவர்கள் மீது கோபம் கொள்வீர்கள். அதனை தவிர்த்துக் கொள்வது நல்லது.
ஆரோக்கியம்
வெள்ளிக்கிழமை தோறும் தெய்வ வழிபாடு, அம்பாள் வழிபாடு செய்வது பதட்டத்தைக் குறைக்கும். தலைவலி, வயிறு வலி தொடர்பான விஷயங்களில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். உணவு விஷயத்தில் கவனம் தேவை. 4 ஆம் இடத்தில் சனி பகவான் இருக்கிறார். உடற்பயிற்சி தினந்தோறும் செய்வது நல்லது. இல்லையெனில் தேவையில்லாத மனக் கஷ்டம், சங்கடம் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது.
அனுகூலம்
மனதில் வரும் குழப்பங்களைத் தவிர்த்துக் கொள்வது நல்லது. புதிய வாகனங்கள் வாங்குவதற்கான வாகன அமைப்பு ஏற்படும். திட்டமிட்ட மற்றும் திட்டமிடாத பயணங்களால் அனுகூலம் நிச்சயமாக ஏற்படும். ஆஞ்சநேயர் கோயிலுக்குச் சென்று வருவது மகிழ்ச்சியையும், ஏற்றத்தையும் ஏற்படுத்திக் கொடுக்கும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
கோபம் வேண்டாம்
எந்த விஷயத்திலும் கோபப்படாமல் நிதானமாக செயல்படுவது நன்மை பயக்கும். கணவன், மனைவி, வேலையாட்கள், பிள்ளைகளிடத்தில் கோபப்படாமல் இருப்பது நல்லது. அரசு உத்தியோகத்தில் இருப்பவர்கள் அதீத கவனமாக இருக்க வேண்டும். உள்ளூர், வெளியூர் பயணங்கள் ஏற்படும் காலகட்டமாக இருக்கும். பயணங்களால் ஆதாயம் ஏற்படும்.
-
2026 குருப்பெயர்ச்சி: சிம்ம ராசிக்கு குருப்பெயர்ச்சியில் பெரிய மாற்றம்! 2026ல் அதிர்ஷ்டம் வருமா? -
2026 குருப்பெயர்ச்சி: துலாம் ராசிக்கு தடைகள் நீங்கி முன்னேற்றம் தரும் குருப்பெயர்ச்சி -
2026 குருப்பெயர்ச்சி: கும்ப ராசிக்கு கிடைக்கும் 5 பெரிய யோகங்கள்!.. லிஸ்ட் பெருசா இருக்கே -
2026 குருப்பெயர்ச்சி: மகர ராசிக்கு வாழ்க்கையை மாற்றும் அதிர்ஷ்ட காலம்! -
2026 குருப்பெயர்ச்சி: பொற்காலம் ஆரம்பம்! தனுசு ராசிக்கு குரு பகவானின் அருள் மழை -
2026 குருப்பெயர்ச்சி: நினைத்தது நடக்கும்! விருச்சிக ராசிக்கு குருப்பெயர்ச்சி தரும் பெரிய அதிர்ஷ்டம்! -
2026 குருப்பெயர்ச்சி: கடக ராசிக்கு குருப்பெயர்ச்சியில் கிடைக்கும் 5 பெரிய அதிர்ஷ்டங்கள்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications