சிம்மத்துக்கு கால் வைக்கும் இடமெல்லாம் கன்னி வெடி.. கோபத்தை தவிர்ப்பது ரொம்ப நல்லது
வார ராசி பலன்: சூரியன் மிதுனத்துக்கு வரும் மாதமே ஆனி மாதம். இந்த வாரம் ஜூன் 30 முதல் ஜூலை 6 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான சிம்ம ராசி பலன்கள் குறித்து பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, தெய்வ வழிபாடுகள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
நவக்கிரகங்களில் உள்ள ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் இடப்பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலைமாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும். அந்த வகையில், இந்த வாரத்தில் சிம்ம ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

சிம்ம வார ராசி பலன்
சிம்ம ராசிக்காரர்களுக்கு லாபங்கள் கிடைக்கும் காலகட்டமாக இருக்கும். அனுகூலமான காலகட்டமாக இருக்கும். விரும்பிய பயணங்களை மேற்கொள்வீர்கள். எடுத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றி, அனுகூலம் கிடைக்கும். காதலித்துக் கொண்டிருப்பவர்களும், திருமணமானவர்களும் தங்களுடைய துணையிடம் கோபம், வாக்குவாதத்தை தவிர்த்துக் கொள்வது நல்லது.
கோபத்தை தவிர்ப்பது நல்லது
கோபப்படுவது, பொறாமைப்படுவது, மற்றவர்களை நினைத்து உங்களுக்கு இருக்கும் விஷயங்களை குறைவாக எண்ணி ஆதங்கப்படுவதைத் தவிர்ப்பது நல்லது. அனைத்து விதத்திலும் அனுகூலத்தைப் பெற நவக்கிரகத்தில் இருக்கும் சனி பகவானை வழிபடுவது, நல்லெண்ணெய் தீபமேற்றி வருவது நல்ல பலன்களைத் தரும். சனி கோயில்களுக்கு அடிக்கடி சென்று வருவது அனைத்து விஷயங்களிலும் ஏற்றத்தையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்திக் கொடுக்கும்.
வழிபாடு
திருகொள்ளிக்காடு, பொங்கு சனீஸ்வரர் கோயில்களுக்குச் சென்று வருவது சகல விதத்திலும் நன்மையை ஏற்படுத்தும். கால் பாதம், முதுகு தண்டுவடம், தலை, கழுத்து பகுதியில் மிக மிக கவனமாக இருப்பது நல்லது. எதிர்பார்க்காத நல்ல விஷயங்கள் நடக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் லாபம் உண்டாகும். பதவி உயர்வு தொடர்பான விஷயங்களை பேசித் தீர்த்துக் கொள்வது நல்லது.
உத்தியோகம்
உத்தியோகத்தில் கோபத்தை தவிர்ப்பது, உணர்ச்சிவசப்பட்டு பேசுவது, பேப்பர் போடுவது போன்றவற்றை தவிர்ப்பது நல்லது. வரும் ஓராண்டு காலம் வாழ்க்கையை கற்றுக் கொள்ளும் நிர்பந்தம் ஏற்படும். ரோஷத்தையும், கோபத்தையும் தவிர்த்தால் பெரிய ஆபத்து, சிக்கல், அவமானத்தில் இருந்து உங்களைக் காக்கும்.
எச்சரிக்கை
ஆவணி, புரட்டாசியில் பெரும் அவமானத்தில் சிக்கிக் கொள்ளும் காலம் என்பதால் மிகவும் கவனமாக இருப்பது நல்லது. மற்றவர்களை சொல்வதைக் கேட்டுக் கொண்டு நிதானமாக செயல்படுவது நல்லது. வண்டி, வாகனங்கள் விஷயங்களில் மிகுந்த கவனமாக இருப்பது நன்மையை ஏற்படுத்தும்.












Click it and Unblock the Notifications