Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கோடீஸ்வர யோகம்..புதையல் யோகம்..யாருக்கு கிடைக்கும்..உங்க ஜாதகம் எப்படி இருக்கு?

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஏழையாக பிறந்தாலும் கோடீஸ்வரர் ஆக வேண்டும் என்ற எண்ணம் பலருக்கும் இருக்கும். பணத்தின் மீதான ஆசையும் நிறைய சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையும் அனைவருக்கும் இருக்கும். யாரெல்லாம் கோடீஸ்வரர் ஆகும் அதிர்ஷ்டசாலிகள்? புதையல், லாட்டரி, பங்குச்சந்தையில் செய்யும் முதலீடுகள் மூலம் யாரெல்லாம் கோடீஸ்வரர் ஆவார்கள் என்றும் அதற்கு ஜாதக அமைப்பு எப்படி இருக்க வேண்டும் என்றும் பார்க்கலாம்.

ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு தொழில் செய்து பணம் சம்பாதிக்கிறார்கள். பலர் அன்றாடத் தேவைகளுக்கே போதிய வருமானமின்றிப் போராட்டத்துடன் வாழ்கின்றனர். உண்மையில், அன்றாட வாழ்க்கைக்குப் போராடும் பலருக்கு கோடீஸ்வர யோகம் இருக்கிறது. எப்போது என்பதைத் தெரிந்துகொண்டு செயல்படுவதுதான், நீங்களும் கோடீஸ்வரர் ஆவதற்கான வழியாகும்.

Who will get Kodeeswara Yogam and Puthayal Yogam check your Jathagam

ஒருவரின் பிறந்த ஜாதகத்தில் சுக ஸ்தான அதிபதி எனப்படும் நான்காம் அதிபதி, செவ்வாய், ஒன்பது, பத்தாம் அதிபதிகள் பலம் பெற்ற ஜாதகர் கோடீஸ்வர குடும்பத்தில் பிறந்திருப்பார். முன்னோர்கள் செல்வமும் செல்வாக்கும் மிக்கவர்களாக இருப்பர். குருவும் 9ம் அதிபதியும் இணைந்து கேந்திர, திரிகோணத்தில் இருந்தால், பிறப்பால் கோடீஸ்வரர். லக்னாதிபதி மற்றும் 4ம் அதிபதிகள் பலம்பெற்று இணைந்து தசை நடந்தால் பல வாகனங்களுக்கு அதிபராகவும், பிறப்பு முதல் இறப்பு வரை பெருஞ்செல்வந்தராகவும் வாழ்வார்.

ஒவ்வொருவருக்கும் ராசியைப் போல லக்னம் உண்டு. பிறந்த நாளில் உள்ள நட்சத்திரத்தின் அடிப்படையில் ராசியையும், பிறந்த நேரத்தைக் கொண்டு லக்னத்தையும் அறிந்துகொள்ளலாம். மேஷம் விருச்சிகத்துக்கு செவ்வாய் தசை, ரிஷபம் துலாமுக்கு சுக்கிர தசை, மிதுனம் கன்னிக்கு புதன் தசை, மீனம் தனுசுக்கு குரு தசை, மகரம் கும்பத்துக்கு சனி தசை, சிம்மத்துக்கு சூரிய தசை, கடகத்துக்கு சந்திர தசை என லக்னாதிபதி, ராசி அதிபதிகளின் தசை நடக்கும்போது ஜாதகர் வாழ்க்கையில் அதிரடி மாற்றங்கள் ஏற்படும்.

திடீர் வளர்ச்சி, பணம், புகழ், செல்வாக்கு ஏற்படும். சாதாரண நிலையில் இருப்பவரும் சுபகிரக பார்வை பலம் பெற்று லக்னாதிபதி, ராசி அதிபதி தசை நடந்தால், பெருத்த முன்னேற்றத்தை எளிதில் அடைவார்கள். அதேபோல், 2, 10, 11ம் அதிபதிகளின் தசை சுப பலம் பெற்று நடைபெற்றால், செல்வச் சேர்க்கை, தொழிலால் லாபம், குடும்ப முன்னேற்றம் போன்றவை உண்டாகும்.

குருவிற்கு கேந்திரம் அல்லது திரிகோண இடங்களில் கேது நிற்பதும், குரு 5, 7, 9ம் பார்வையால் கேதுவைப் பார்ப்பதும், உயர்தர கோடீஸ்வர யோகத்தைத் தரும். பிறந்த ஜாதகத்தில் குரு, கேது இணைவும், கேதுவுக்கு குரு பார்வை ஏற்படுவதும் குரு தசையிலோ, கேது தசையிலோ சாதாரணமானவரையும் எதிர்பாராத நிலைக்கு உயர்த்தி, புகழுடன் கோடீஸ்வரராக்கிவிடும். 6, 8, 12ல் குரு இருந்து, கேது 6, 8, 12 ஆகிய மறைவிடங்களில் இருந்து குருபார்வை பெறுவது யோக பலனைக் குறைக்கவே செய்யும்.

கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம் என்ற வகையில் விபரீத ராஜயோகத்தால் சிலர் கோடீஸ்வரராகிவிடுவர். 3, 6, 8, 12ம் இடங்கள் மறைவு ஸ்தானம். 3ம் அதிபதி 6, 8, 12ம் இடத்திலோ, 6ம் அதிபதி 3, 8, 12ம் இடத்திலோ, 8ம் அதிபதி 3, 6, 12ம் இடத்திலோ, 12ம் அதிபதி 3, 6, 8ல் மாறி நின்றாலோ, 3, 6, 8, 12ம் அதிபதிகள் பாவ கிரகங்களான சூரியன், செவ்வாய், சனியாக இருந்து மறைந்தால் புகழுடன் கோடீஸ்வரராக வாழ்க்கை கிடைத்துவிடும். பாதகாதிபதி நீசம், வக்ரம் போன்று வலுவிழந்து தசை நடந்தாலும், ஜாதகரை கோடீஸ்வரராக மாற்றிவிடும். சுபகிரக, கேந்திர, திரிகோண அதிபதிகள் ராசியில் நீசம் பெற்று அம்சத்தில் பலம் பெற்றாலும், சுபயோக பலன்களையே தருவர்.

செவ்வாய் என்றதுமே தோஷம் குறித்த நினைவுகளே நம்மை பயமுறுத்தும். ஆனால், மங்களகாரகனான செவ்வாய், பல அற்புதமான யோகங்களையும் வாரி வழங்குகிறார். லக்னத்துக்கும் சந்திரனுக்கும் 1, 4, 7, 10 ஆகிய இடங்களில் செவ்வாய் அமர்ந்து, அந்த இடம் செவ்வாய்க்கு சொந்தவீடாகவோ, உச்ச வீடாகவோ இருப்பது ருசக யோகம் ஆகும். செவ்வாய் தன் சொந்த வீடுகளான மேஷம், விருச்சிகம் ஆகியவற்றிலும், உச்ச வீடான மகரத்திலும் இருந்தாலும் யோகம் உண்டாகும்.

பிறந்த ஜாதகத்தில் செவ்வாய் உடன் சந்திரன் இணைந்து 1, 4, 7, 10 ஆகிய இடங்களில் வலுத்திருக்கும்போது, சந்திரமங்கள யோகம் உண்டாகும். மனோகாரகன் சந்திரனுடன் தைரியகாரகன் செவ்வாய் இணைவதால் மனோபலம் கூடும், தன்னம்பிக்கை அதிகரிக்கும், சொத்துகள் சேரும்; அதனால் ஆதாயமும் கிடைக்கும்.

பிருகு என்றால் சுக்ரனைக் குறிக்கும். சுக்ரனுடன் செவ்வாய் சேர்ந்து 1, 4, 7, 10 ஆகிய இடங்களில் வலிமையாக அமர்ந்து இருக்கும் போது பிருகு மங்கள யோகம் உண்டாகும். பெண்களால் அனுகூலம் உண்டாகும். வசதியான வாழ்க்கை அமையும். உயர்வாகன யோகமும் உண்டாகும். சொத்து சேரும்; சுகபோகம் கூடும்.

ஒருவரின் ஜாதகத்தில் புதையல் யோகம் இருந்தாலும் திடீர் பண வரவு வரும். மண்ணில் அடியில் மறைந்திருக்கும் தங்கம், வைரம் மட்டுமே புதையல் என்று சொல்ல முடியாது. நமக்கு கிடைக்கும் திடீர் பண வரவும் புதையல்தான்.
ஒருவரின் ஜாதகத்தில்

2, 5, 9,11 அதிபதிகள் தசையோ புத்தியோ நடைபெறும் போது புதையல் கிடைக்கும் அமைப்பு ஏற்படலாம், இதில் எட்டாம் அதிபதி சம்பந்தம் மற்றும் 6,8,12 ல் மறைந்த யோகம் பிரச்சினையும் சேர்த்தே தரும். 2,5,9,11அதிபதி சுக்கிரனாக இருந்து அதன் தசை புத்தியில் புதையல் போன்ற தனயோகம் ஏற்படுகிறது. எதிர்பாராத பதவி, பொருள் கிடைத்து அதன் மூலம் பெயர் புகழ் அடையும் நிலையை தருகிறது.

பங்குச்சந்தையில் செய்துள்ள முதலீடு மூலம் வருமானம் வரும். கடன் கொடுத்து விட்டு திரும்பியே வராத பணம் என்று நீங்கள் எண்ணிக்கொண்டிருந்த பணம் திடீரென உங்களுக்கு கிடைக்கலாம். செவ்வாய்கிழமை சந்திர ஓரையில் நம்மால் முடிந்ததை சிறிய அளவு சேமித்தால் அந்த பணமானது நமக்கு தேவைப்படும் நேரத்தில் புதையலாக நிச்சயம் கிடைக்கும்.

ஒருவர் பிறந்த ஜாதகத்தில் 4ஆம் அதிபதியும், பத்தாம் அதிபதியும் இணைந்திருத்தல், நான்காம் அதிபதியும் பத்தாம் அதிபதியும் ஒன்றுக்கொன்று பார்வை பெற்றிருத்தல், நான்காம் அதிபதியும் பத்தாம் அதிபதியும் பரிவர்த்தனை பெற்றிருத்தல் புதையல் யோகம் எனச் சொல்லப்படும் நிஷ்கல யோகம் கிடைக்கும்.

மேஷம், துலாம் சர லக்னங்களுக்கு சந்திரன், சனி கிரகங்கள் புதையல் யோகத்தை ஏற்படுத்தும். ரிஷபம், விருச்சிகம் ஸ்திர லக்னங்களுக்கு சூரியன், சனி கிரகங்கள் புதையல் யோகத்தை ஏற்படுத்தும். மிதுனம், கன்னி, மீனம், தனுசு ஆகிய உபயலக்னங்களுக்கு வியாழன், புதன் கிரகங்கள் புதையல் யோகத்தை ஏற்படுத்தும். கடகம், மகரம் சர லக்னத்திற்கும் சிம்மம், கும்பம் ஸ்திர லக்னத்திற்கும் செவ்வாய், சுக்கிரன் கிரகங்கள் புதையல் யோகத்தை ஏற்படுத்தும் என்று ஜோதிடத்தில் சொல்லப்பட்டுள்ளது.

சராசரி வாழ்க்கைக்கே போராடுகிறோம்; இந்த நிலையில், நாம் எங்கே கோடீஸ்வரராவது என்றே பலர் நம்பிக்கை இழந்துவிடுகின்றனர். முறையான உழைப்பாலும், புதிய சிந்தனையாலும், எந்தத் தொழில் மூலமாகவும் கோடீஸ்வரராகி விடலாம். பலரின் ஜாதகத்தில் கோடீஸ்வர யோகம் இருக்கிறது. எல்லோர் வாழ்விலும் நல்ல நேரம் உண்டு. வாய்ப்புகளைச் சரியாகப் பயன்படுத்தத் தெரியாமலேயே தவறவிடுகின்றனர். அதிர்ஷ்டத்துக்காகக் காத்திருப்பது, ஏங்குவதைவிட அவரவர் ஜாதகத்தில் எந்த நேரத்தில், எந்தத் துறையில் ஈடுபட்டால் கோடீஸ்வரராக முடியும் என்பதைக் கண்டறிய வேண்டும்.

பல வருடங்கள் சேமித்த பொருளைக் கொண்டும், கடன் வாங்கியும் புதிய தொழில் தொடங்கும்போது, முதலில் ஜாதகத்தில் தொழில் தொடங்கும் நேரம் தற்போது உண்டா, தொழிலால் லாபம் கிடைக்குமா, கூட்டுத் தொழில் வெற்றி தருமா என்பதையெல்லாம் கருத்தில் கொள்வது பாதுகாப்பானது. கோசாரத்தில் 10ல் சனி, அஷ்டம சனி, அர்த்தாஷ்டம சனி மற்றும் ஏழரைச் சனி காலங்களில் தொழில் சம்பந்தமான பிரச்னையால் தொழில் நஷ்டம், தொழில் மாற்றம், இடமாற்றம் கண்டிப்பாக ஏற்படும். அத்தகைய காலங்களில் புதிய தொழில் தொடங்குவதைத் தவிர்த்தல் நலம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+