சூரிய கிரகணம் ஏற்படும் போது.. திடீரென தலைவலி, வயிற்று பிரட்டல் ஏற்படுவது ஏன்? என்ன காரணம்?
சென்னை: வானியல் நிகழ்வில் நடக்கும் அதிசயங்களில் ஒன்றான முழு சூரிய கிரகணம் ஒன்று நடைபெறுகிறது. இந்த சூரிய கிரகணம் ஏற்படும் போது பலருக்கும் வாந்தி, மயக்கம், தலைசுற்றல் ஏற்படுவது வழக்கம்.
சூரிய கிரகணம் என்பது பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் சந்திரன் கடந்து சென்று சூரியனின் ஒளியை முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ தடுக்கும் ஒரு வானியல் நிகழ்வு ஆகும். சந்திரன் சூரியனை முழுவதுமாக மறைக்கும் போது, அது பூமியில் ஒரு நிழலை ஏற்படுத்துகிறது. பூமியின் அந்த பகுதியில் இருப்பவர்கள் இந்த சூரிய கிரகணத்தை பார்க்க முடியும்.

இன்று ஏப்ரல் 8 ஆம் தேதி, முழு சூரிய கிரகணம் வட அமெரிக்கா முழுவதும் வானத்தை அலங்கரித்து, பகலை இரவாக மாற்றும் வகையில், வானியல் பார்வையாளர்களை வசீகரிக்கும் வகையில் நடக்க போகிறது.
இந்த சூரிய கிரகணத்தை இந்தியாவில் இருந்து பார்க்க முடியாது என்றாலும் இந்தியாவிலும் இதன் மறைமுக தாக்கங்கள் இருக்கும். சூரிய கிரகணத்தை அனுபவிக்கும் வாய்ப்பு பெரும்பாலும் வாழ்நாளில் ஒரு முறை மட்டுமே பலருக்கும் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. இந்த முறை அமெரிக்கர்களுக்கு அதை பார்க்கும் வாய்ப்பு கிட்டியுள்ளது.
2024ம் ஆண்டின் முதல் சூரிய கிரகணம் இன்று நிகழ்கிறது. ஜோதிடத்தில் இது 500 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் அபூர்வமான நிகழ்வாக பார்க்கப்படுகிறது.
2024 ஆம் ஆண்டின் முழு சூரிய கிரகணம் இன்று நிகழும். மெக்சிகோ, அமெரிக்கா மற்றும் கனடா இடையே 185 கிலோமீட்டர் நீளமுள்ள 185 கிலோமீட்டர் நீளம் முழுவதும் வானம் இருளில் தெரியும். 18 வெவ்வேறு அமெரிக்க மாநிலங்களில் இருந்து இதைப் பார்க்கலாம். இருப்பினும், இந்தியாவில் உள்ள வான கண்காணிப்பாளர்களுக்கு இது கண்களில் புலப்படாது.
இந்திய நேரப்படி (IST), முழு சூரிய கிரகணம் ஏப்ரல் 8 அன்று இரவு 9:12 மணிக்குத் தொடங்கி, ஏப்ரல் 9, 2024 அன்று அதிகாலை 2:22 மணிக்கு முடிவடையும். மெக்ஸிகோவின் பசிபிக் கடற்கரையானது முதன்முதலில் 11:07 amக்கு சூரிய கிரகணத்தை அனுபவிக்கும்.
என்ன காரணம்: இந்த சூரிய கிரகணம் ஏற்படும் போது பலருக்கும் வாந்தி, மயக்கம், தலைசுற்றல் ஏற்படுவது வழக்கம். இதற்கு பின் 2 காரணங்கள் சொல்லப்படுகின்றன.
ஜோதிட ரீதியாக, சூரியன், சந்திரன் ஒரு கோட்டில் வரும் நிகழ்வில் ஒவ்வொரு ராசிகளின் சந்திர, சூரியன் அமைப்பை பொறுத்து அவர்களின் உடலில் மாற்றங்கள் ஏற்படும். உடல் ஆற்றல் மாற்றங்கள் பாதிப்படையும். இதன் காரணமாக உடலில் திடீரென மாற்றத்தை எதிர்கொள்ள முடியாமல் தலைவலி ஏற்படும் என்று கூறப்படுகிறது.
அறிவியல் ரீதியாக , சூரியன், சந்திரன் ஒரு கோட்டில் வரும் நிகழ்வில் திடீரென வானிலை மாற்றம் ஏற்படும், வெப்பம் குறையும். திடீரென வானம் இருட்டும். இந்த திடீர் வானிலை மாற்றம் பலருக்கும் வயிற்று பிரச்னையை உருவாக்கி அதனால் தலைவலியும் ஏற்படும். திடீரென வெயில் காலத்தில் பிற்பகலில் மழை பெய்தால் சிலருக்கு தலை வலிக்குமே அப்படிதான் இதுவும்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications