குருவின் சூப்பர் மாற்றம்.. இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் கொட்டப் போகுது.. பணப் பலன்கள் கிடைக்கும்
குருப்பெயர்ச்சி: ரிஷப ராசியில் தற்போது சஞ்சாரம் செய்து வரும் குரு பகவான் பிப்ரவரி 4 ஆம் தேதி மதியம் 1.46 மணி முதல் முன்னோக்கி நகரப் போகிறார். குருவின் இந்த நகர்வால் 4 ராசிக்காரர்கள் அதிர்ஷ்டமான நல்ல பல பலன்களை அனுபவிக்கப் போகின்றனர். அந்த ராசிகள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்..
முழுசுபர் என்று அழைக்கப்படுபவர் குரு பகவான். ஜோதிட சாஸ்திரத்தின்படி ஜாதகருக்கு கல்வி, அறிவு, குழந்தை பாக்கியம், செல்வசெழிப்பு போன்ற அனைத்து யோகங்களையும் தருபவராக குரு பகவான் விளங்கி வருகிறார். குரு பகவான் தற்போது ரிஷப ராசியில் பின்னோக்கி நகர்ந்து வக்ர நிலையில் சஞ்சாரம் செய்து வருகிறார்.

இந்த குரு பகவான் பிப்ரவரி 4 ஆம் தேதி முதல் மீண்டும் முன்னோக்கி நகரத் தொடங்குவதால் நான்கு ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையில் நல்ல யோகங்களும், தொழில், வியாபாரம், வேலையில் நல்ல முன்னேற்றமும், வளர்ச்சியும் உண்டாகும். எந்த ராசிக்காரர்கள் பலன்களை அனுபவிக்கப் போகின்றனர் என்று பார்க்கலாம்.
மேஷ ராசி: மேஷ ராசிக்காரர்களுக்கு திடீர் பண வரவுகள் உண்டாகும். குரு பகவான் தன ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் நிதிநிலை மேம்படும். எதிர்பாராத நேரத்தில் பண வரவு ஏற்படும். அலுவலகத்தில் பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. உங்களுடைய பொருளாதார நிலையில் முன்னேற்றமும், ஸ்திரத் தன்மையும் உண்டாகும். குடும்ப வாழ்க்கையில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள். உங்களுடைய உழைப்புக்கேற்ற பலன்களைப் பெறுவீர்கள். வேலை, தொழில், வாழ்க்கையில் நல்லது நடக்கும். நேர்மையான மாற்றங்கள் பிறக்கும்.
கன்னி ராசி: கன்னி ராசிக்காரர்களுக்கு குரு பகவானின் அமைப்பால் சாதகமான சூழல் ஏற்படும். வாழ்க்கையில் அனைத்து விதத்திலும் முன்னேற்றம் உண்டாகும். வியாபாரம், தொழில், உத்தியோகத்தில் திருப்தியுடன் காணப்படுவீர்கள். வளர்ச்சிக்கான புதிய வழிகள் பிறக்கும். அதிர்ஷ்டமான காலமாக இருக்கும். வாழ்க்கையில் அனைத்து துறையிலும் நீங்கள் எதிர்பார்த்த வெற்றியை காண்பீர்கள். குரு பகவானின் அருளால் சுப நிகழ்வுகள் நடப்பதற்கான வாய்ப்புகள் ஏற்படும்.
விருச்சிக ராசி: விருச்சிக ராசிக்காரர்களுக்கு நற்பலன்கள் பல உண்டாகும். தொழில், வியாபாரத்தில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள். இரட்டிப்பு பலன்கள் கிடைக்கும். உங்களுடைய வேலைகள் அனைத்தையும் சரியான நேரத்தில் செய்து முடிப்பீர்கள். குருவின் அருளால் தொட்ட காரியங்களில் வெற்றி காண்பீர்கள். வேலை, குடும்பத்தில் இருந்து வந்த தடைகள் அனைத்தும் நீங்கும். வேலை செய்யும் இடத்தில் சக ஊழியர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். குடும்பத்தில் துணையின் ஆதரவு உண்டாகும். நல்ல லாபத்தையும், பணப் பலன்களையும் காண்பீர்கள்.
மகர ராசி: மகர ராசிக்காரர்களுக்கு வெளியூர் செல்வதற்கான யோகம் உண்டு. பயணங்கள் மூலம் ஆதாயத்தைக் காண்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு சம்பள உயர்வு கிடைக்கும். உங்களுக்கு சாதகமான காலமாக இருக்கும். வெளிநாடு செல்ல முயற்சி மேற்கொள்பவர்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். திடீர் பண வரவுகள் கிடைக்கும். பணியிடத்தில், குடும்பத்தில் மதிப்பு மரியாதையைப் பெறுவீர்கள்.
-
ஜூன் மாத பலன்: ரிஷப ராசி வாழ்க்கையில் ஏற்பட போகும் திருப்பம்.. தூக்கிவிடும் சுக்கிரன் -
ஜூன் மாத பலன்: மேஷ ராசிக்கு ஜூனில் வரப்போகும் சூப்பர் மாற்றம்.. நினைத்தது நிறைவேறும் யோகம் -
Meenam: மீன ராசிக்கு குரு அருள் மழை!.. ஜூன் 1-7 வரை பணவரவு, முன்னேற்றம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications