30 ஆண்டுகளுக்குப் பிறகு கொட்டி கொடுக்கும் சனி பகவான்.. சிகரத்தில் ஏறப்போகும் மகர ராசியினர்

Subscribe to Oneindia Tamil

சனிப்பெயர்ச்சி 2025: மார்ச் 29 ஆம் தேதி நடைபெறவுள்ள சனிப்பெயர்ச்சியானது அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில், ஏழரை சனியில் இருந்து முற்றிலும் விடுதலையாகி 30 ஆண்டுகளுக்குப் பிறகு மகர ராசியினர் அதிர்ஷ்டத்தையும் யோகத்தையும் அள்ளப் போகின்றனர். இந்த சனிப்பெயர்ச்சியில் மகர ராசியினர் பெறும் பலன்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.

மகர ராசியில் பிறந்தவர்கள் ஏழரை சனியால் எதிர்ப்பு, அவமானங்கள், மிகப்பெரிய இழப்புகளை சந்தித்திருப்பீர்கள். சொல்ல முடியாத அளவுக்கு பிரச்சனைகளையும், வெறுப்பான காலகட்டங்களையும் கடந்து வந்திருப்பீர்கள். ஒவ்வொரு ராசியிலும் சனி பகவான் இரண்டரை வருடம் சஞ்சரிக்கிறார். அனைத்து ராசிகளையும் கடந்து வர கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாகும். அந்த வகையில், மார்ச் 29 ஆம் தேதி சனி பகவான் உங்கள் ராசியை விட்டு பெயர்ந்து கும்பத்தில் கடந்த இரண்டரை ஆண்டுகளாக இருந்து வந்த நிலையில், தற்போது சனி மீனத்துக்குப் பெயர்ச்சியாகிறார்.

sani peyarchi 2025 Magaram

இதனால், உங்களுக்கு நூறு சதவீத ஏழரை சனி நிறைவடையப் போகிறது. மார்ச் 29 ஆம் தேதி 100 சதவீதம் ஏழரை சனி பிரச்சனையில் இருந்து பூரணமாக விடுதலை அடையப் போகிறீர்கள். அந்த நேரம் 30 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போதுதான் வந்துள்ளது. வரும் சனிப்பெயர்ச்சி முற்றிலுமான விடுதலை மற்றும் முன்னேற்றத்தைக் கொடுக்கப் போகிறது. பொருளாதார சூழ்நிலையில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள்.

பண வரவு அதிகரிக்கும், பதவி உயர்வுகள் வந்து சேரும். பிரிந்த உறவுகள் ஒன்று சேர்வார்கள். சில விஷயங்களை மட்டுமே நாம் மீட்க முடியும். அப்படி கிடைக்க வேண்டிய அனைத்து விஷயங்களும் உங்களுக்கு கிடைக்கும். வாழ்க்கையில் ஜெயித்த எல்லோரும் அவமானப்பட்டிருப்பார்கள். எனவே, மகர ராசிக்காரர்கள் இதுவரை பட்டு வந்த அவமானங்கள் அனைத்தும் வெகுமானங்களாக மாறும்.

மார்ச் 20 ஆம் தேதி கும்ப ராசியில் இருந்து சனி பெயர்ச்சி மீன ராசிக்கு செல்கிறார். ஏற்கனவே, மீனத்தில் சூரியன், புதன், சுக்கிரன், ராகு ஏற்கனவே உள்ளார்கள். அன்றைய தினம் சனி பகவானும் ஐந்தாவது கிரகமாக மீனத்துக்கு செல்கிறார். மோட்ச ஸ்தானத்தில் இந்த 5 கிரகங்கள் அமரப் போகின்றனர். மகரத்தில் இருந்து மூன்றாம் இடத்தில் சொல்லக்கூடிய உபஜெய ஸ்தானத்தில் பெயர்ச்சி ஆகிறார். முயற்சிகளைக் குறிக்கக்கூடிய இடத்தில் பெயர்கிறார்.

புதன் நீச்சம் பெற்றாலும் அருகில் சுக்கிரன் உச்சம் பெற்றுள்ளதால் நீச்ச பங்கமாகும் மாறும். சனிப்பெயர்ச்சி நடக்கும்போது உங்கள் ராசிக்கு 5 ஆம் இடத்தில் குருவும் பரிவர்த்தனை பெறுவார். அரசாங்கம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் உங்களுக்கு அனுகூலம் உண்டாகும். மூன்றாம் இடத்தில் சனி வலுப்பெறுகிறார். 30 ஆண்டுகளுக்குப் பிறகு ஏழரை சனி முடிவதோடு மனதில் தெளிவான எண்ணங்கள் பிறக்கும்.

எதிர்மறையான எண்ணங்கள் உங்களுக்கு வராது. தனக்காரகனான குரு பகவானுடன் சுக்கிர பகவான் பரிவர்த்தனை ஆகும்போது திடீர் பண வரவு உண்டாகும். யோகங்களைத் தரக்கூடிய காலமாக இருக்கும். சுபச் செலவுகள், ஆடம்பர வாழ்க்கை, வெளிநாட்டு தொடர்பு போன்ற யோகங்ளைத் தருபவர் சுக்கிர பகவான். குரு சுக்கிரன் ஆகிய சுப கிரகங்கள் பரிவரத்தனையும் பெற்று, ராசிநாதனுடன் சுக்கிரன் சேர்ந்து உச்சமுமாகி உள்ள இந்த காலகட்டத்தில் பல அற்புதங்கள் நிகழும்.

உங்கள் வாழ்க்கையில் இதுவரை இருந்து வந்த துக்கங்கள் துயரங்கள் அனைத்தும் நிகழும். அதுமட்டுமல்லாமல் சனி பகவான் ஜாக்பாட் பரிசையும் தரப் போகிறார். சூரிய ராகு இணைவால் அரசாங்கம் சார்ந்த துறைகளில் இருப்பவர்கள், சட்டம் சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு இதைவிட அற்புதமான காலம் வருவதற்கான வாய்ப்பே இல்லை.

மார்ச் 29 ஆம் தேதி முதல் உங்கள் வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்பங்களை எதிர்பார்க்க முடியும். வைராக்கியம் வெற்றி பெறக்கூடிய காலகட்டமாக இருக்கும். திடீர் பெரிய பண வரவுகள் உண்டாகும். பிரிந்து போன உறவுகள், திருமண தடை இருப்பவர்களுக்கான பிரச்சனைகள் அனைத்தும் சரியாகும். நல்லவிதமான மாற்றங்கள் அனைத்தும் உண்டாகும். ஒட்டுமொத்தமாக இந்த சனிப்பெயர்ச்சியால் கிடைக்கும் வாய்ப்புகளை நீங்கள் சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

செவ்வாய் ராசிக்கு 6 ஆம் இடத்தில் மறைவதால், குரு பார்வை கிடைப்பதாலும் அபரிமிதமான நல்ல பலன்களைப் பெறுவீர்கள். மனதில் மிகுந்த நம்பிக்கையுடன் அனைத்து விஷயங்களையும் அணுக வேண்டும். தெய்வீக வழிபாடு நல்ல பலன்களைத் தரும். எடுத்த முயற்சிகள் அனைத்திலும் வெற்றி பெறுவீர்கள். யோக காலமாக இந்த சனிப்பெயர்ச்சி உங்களுக்கு இருக்கும்.

திருநள்ளாறில் உள்ள தர்பாரணீஸ்வரரை வழிபடுவது நல்ல பலன்களைத் தரும். சனி பகவான் வழிபாடு, சனீஸ்வர மந்திரங்களை கேட்பது, படிப்பது நல்ல பலன்களைத் தரும். தர்ம காரியங்கள் உங்களுக்கு நல்ல பலனை அள்ளித் தரும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+