மீனம் ராசிக்கு குருவின் அருளால் திடீர் அதிர்ஷ்டம்.. இந்த ஒரு விஷயத்தில் கவனம் கவனம்
தமிழ் புத்தாண்டு: தமிழ் புத்தாண்டு தொடங்கியுள்ளது. மீனம் ராசிக்காரர்களுக்கு 4 முக்கிய கிரகங்களின் சேர்க்கையால் இந்த ஆண்டு கிடைக்கப் போகும் பலன்கள், பரிகாரங்கள், தெய்வ வழிபாடுகள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
மீன ராசிக்காரர்களுக்கு எந்த அளவுக்கு பொறுமையாக இருக்கிறீர்களோ அந்த அளவுக்கு உங்களுக்கு நல்லது நடக்கும். சனி, ராகு, சுக்கிரன், புதன் ஆகிய 4 கிரகங்கள் இணைந்துள்ளன. யாராவது கூட இருந்தாலும் கஷ்டம், இல்லாட்டியும் கஷ்டம் என்பதுபோல அவர்களாலேயே அவர்களுக்கு பிரச்சனை உண்டாகும். எதோ ஒரு மனக் கவலை இருந்து கொண்டே இருக்கும்.

சுக்கிரன், புதன் இணைந்துள்ளதால் சண்டை சச்சரவு செய்துதான் மே 20 ஆம் தேதி வரை ஒரு வேலையை செய்வீர்கள். மே 20க்குப் பின்னர் சனி 2 ஆம் இடத்தில் அமர்ந்துள்ளதால், ராசி லக்கினத்துக்கு விரைய ஸ்தானத்தில் இருக்கக்கூடிய 12 ஆம் இடத்துக்கு ராகு வருவதால் குரு பார்வையில் ராகு சிக்கும். அதனால், நிச்சயம் இடமாற்றம் உண்டாகும். நிறைய பயணங்கள் செய்வீர்கள். காசி, கயாவுக்கு செல்லும் யோகம் உண்டாகும்.
முன்னோர்களுக்கு செய்யக்கூடிய தர்ப்பணங்கள், சாத்தங்கள், திதிகளை செய்வதால் உங்களுடைய வம்சாவளிகளுக்கு இந்த தோஷங்கள் போகாமல் இருக்கும். உங்கள் பிள்ளைகளின் வீட்டில் நல்லது நடக்கும். குழந்தை பாக்கியம் உண்டாகும். மன மகிழ்ச்சி, திருப்தி ஏற்படும். பண வரவுகள் தாராளமாக இருக்கும்.
4 ஆம் இடத்தில் குரு போவதால் தாயுடைய ஆரோக்கியத்தில் அக்கறையாக இருப்பது நல்லது. நெஞ்சகம், மார்பகம் தொடர்பான விஷயங்களில் கவனம் தேவை. கொழுப்பு சேருவதற்கான வாய்ப்புள்ளதால் தினந்தோறும் நடைப்பயிற்சி, உடற்பயிற்சி செய்வது நல்லது. கோவில் பிரகாரத்தை சுத்தி வருவது நல்லது. தெய்வ அனுக்கிரகம் உண்டாகும். கர்ப்ப கிரகத்தின் பாசிட்டிவ் எனர்ஜி கிடைக்கும்.
ரத்த ஓட்டம் நன்றாக இருந்தால் எண்ணங்கள் நன்றாக இருக்கும். எண்ணங்கள் நன்றாக இருந்தால் கவலை வராது. கவலை வரவில்லை என்றால் மன அழுத்தம் உண்டாகாது. அதனால் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது.
குரு பார்வை பலத்தால் மறைவு ஸ்தானத்தை பலப்படுத்துவதால் அதிர்ஷ்டமான காலகட்டமாக இருக்கும். வீட்டில் சுபகாரியங்களான திருமணம், காதல், குழந்தை பாக்கியம், காதல் போன்ற மகிழ்ச்சிகரமான விஷயங்கள் நடக்கும். குருவால் திடீர் பண வரவு, அதிர்ஷ்டம் உண்டாகும். பதவி உயர்வு கிடைக்கும். பட்ட கஷ்டத்துக்கு பலன் கிடைக்கும். அங்கீகாரம் உண்டாகும்.
சனி ராசிக்குள் வருவதால் மந்த புத்தி உண்டாகும். சிறிய விஷயம் கூட புரிந்துகொள்ள கொஞ்சம் தாமதமாகும். அதனால் கோபம் ஏற்படும். மீன ராசிக்காரர்கள் ஆஞ்சநேயருக்கு வடமாலை சாற்றுவது நல்லது. ஆஞ்சநேயருக்கு தேனைக் கொடுத்து பரிகாரம் செய்வது நல்ல பலன்களைத் தரும்.
அடுத்த ஆண்டுகளில் நிறைய நல்ல விஷயங்கள் நடக்கும். ஆரோக்கியத்தில் மட்டும் கொஞ்சம் கவனம் தேவை. சந்தோஷம் 75 சதவீதமும், பொருளாதாரத்தில் 90 சதவீதமும் நன்மை கிடைக்கும் யோகம் உண்டாகும்.












Click it and Unblock the Notifications