மேஷ ராசிக்கு ஏழரை சனியால் உண்டாகும் யோகம்.. பணம் கொட்டும்.. ரேஞ்சே மாறப்போகுது
தமிழ் புத்தாண்டு: தமிழ் புத்தாண்டு தொடங்கியுள்ளது. மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த ஆண்டு கிடைக்கப் போகும் பலன்கள், பரிகாரங்கள், தெய்வ வழிபாடுகள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
2025 ஆம் ஆண்டில் பல்வேறு முக்கிய கிரகங்களின் மாற்றங்கள் நடைபெறவுள்ளன. உலக மக்கள் அனைவரும் எதிர்பார்த்துக் காத்திருந்த சனிப்பெயர்ச்சி நடைபெற்றுள்ளது. ராகு கேது பெயர்ச்சி மற்றும் குருப்பெயர்ச்சி நடைபெறவுள்ளது. இதற்கிடையே ஏப்ரல் 14 ஆம் தேதி விசுவாவசு தமிழ்ப் புத்தாண்டு பிறந்துள்ளது. இந்தப் புத்தாண்டில் மேஷ ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், தெய்வ வழிபாடுகள் குறித்து பார்க்கலாம்.

மேஷம்
மேஷம் ராசியினருக்கு 2 ஆம் இடத்தில் குடும்ப ஸ்தானத்தில் குரு இருக்கிறார். குடும்பத்தில் விருத்தி ஏற்படும். காசு, பணம் அதிகரிக்கும். மகிழ்ச்சி உண்டாகும். சமுதாயத்தில், குடும்பத்தில் மதிப்பு மரியாதை அதிகரிக்கும். பார்ப்பவர்களின் லட்சணங்கள் அதிகரிக்கும். இதெல்லாம் முதல் இரண்டு மாதங்களுக்கு மட்டுமே மூன்றாம் இடத்துக்கு குரு போகிறார். சனி ஏற்கனவே விரையத்தில் அமர்ந்திருக்கிறார்.
யோகம் கொட்டும்
ஏழரை சனி தொடங்கியுள்ளதால் அச்சப்படத் தேவையில்லை. இந்த காலகட்டத்தில் தான் திருமண யோகம் கைகூடி வரும். புதிய வேலைகளைத் தொடங்குவீர்கள். முக்கிமான இடமாற்றம், வெளியூரில் செட்டிலாகும் யோகம் உண்டாகும். விரைய ஸ்தானத்தில் சனி அமர்ந்திருப்பதால் சுப விரையங்களை செய்ய வைப்பார். வீடு கட்டி கிரக பிரவேசம் செய்வீர்கள்.
பிள்ளைகளுக்கு திருமணம் செய்து வைக்கும் யோகமான காலகட்டமாக இருக்கும். அவர்களின் படிப்புக்கான செலவு செய்வீர்கள். நகை வாங்குவது, முதலீடு செய்வது போன்றவற்றை செய்யத் தொடங்குவீர்கள்.
ஆரோக்கியத்தில் கவனம்
ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். கால் பாதம், கொழுப்பு தொடர்பான எச்சரிக்கைகளில் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும். லாப ஸ்தானத்துக்கு வந்து ராகு அமருவதால் பெரிய பெரிய மனிதர்களை சந்திக்கும் வாய்ப்பு ஏற்படும். எதிரி யாராக இருந்தாலும் உங்களுக்கு நண்பர்களாக மாறுவார்கள்.
பஞ்சம ஸ்தானத்தில் கேது வருவதால் ஆன்மிகத்தின் நாட்டம் மிகவும் அதிகரிக்கும். குடும்பத்தில் ஆரோக்கியத்தில் எச்சரிக்கை, அக்கறை, கவலை அதிகரிக்கும். ஒரு சிலருக்கு ஹார்மோன் இம்பேலன்ஸ், சிலருக்கு மாதவிடாய் பிரச்சனை, மூத்தவர்களுக்கு புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. பாட்டி அல்லது தாத்தாவின் ஆரோக்கியத்தை கவனத்தில் கொள்ள வேண்டும்.
வெற்றி
குருவின் மாற்றம் மிகப்பெரிய வெற்றியைத் தரக்கூடியதாக இருக்கும். மேஷத்துக்கு சனி பார்வை இல்லை என்பதே மிகப்பெரிய மகிழ்ச்சியைத் தரும். நிறைய நல்ல விஷயங்கள் அடுத்தடுத்து நடக்கும். குரு 3 ஆம் இடத்துக்குச் செல்வதால் 3 ஆம் இடத்தில் இருந்து ஸ்தான பலத்தை கெடுப்பார். இளைய சகோதரன், சகோதரி வாழ்க்கையில் ரொம்ப முக்கியமான விஷயங்களைப் பார்த்துக் கொள்ள வேண்டும். அவர்களுடைய ஆரோக்கியத்தில், நட்பு விஷயத்தில் கவனம் தேவை.
குரு பார்வை
குரு 3 ஆம் இடத்தில் இருப்பதால் மனதில் தேவையில்லாத குழப்பம், அழுத்தத்தை உண்டாக்கும். ஒரு புதிய நபரால் வாழ்க்கை உயரும். தெய்வ அனுக்கிரகம் பூரணமாகக் கிடைக்கும். கோவில் சம்பந்தப்பட்ட விஷயங்களை அடுத்தகட்டத்துக்கு எடுத்துச் செல்லும் யோகம் உண்டாகும். வழக்குகள் சாதகமாக முடியும். வெளியூர் செல்லும் யோகம் உண்டாகும். காசி, கயா, ராமேஸ்வரம் செல்லும் வாய்ப்பு உண்டாகும்.
லாபம்
லாப ஸ்தானத்தை குரு பார்ப்பதால் அபரிமிதமான பண வரவு உண்டாகும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள். பண வரவு அதிகரிப்பதால் மன மகிழ்ச்சியுடன் இருப்பீர்கள்.
வழிபாடு
மதுரையில் இருக்கக்கூடிய திருப்பரங்குன்றம் முருகப் பெருமான் கோயிலுக்குச் சென்று வருவது நல்ல பலன்களைத் தரும். மேஷ ராசிக்காரர்களுக்கு சந்தோஷத்தின் அடிப்படையில் 75 சதவீதமும், பொருளாதாரத்தின் அடிப்படையில் 80 சதவீதமும் நற்பலன்கள் கிடைக்கும்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications