சிம்ம ராசிக்கு சிக்கல் தரும் 4 கிரகங்கள்.. குருவின் அருளால் அதிர்ஷ்டம் கொட்டும்.. பணமழை தான்

Subscribe to Oneindia Tamil

தமிழ் புத்தாண்டு: தமிழ் புத்தாண்டு தொடங்கியுள்ளது. சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த ஆண்டு கிடைக்கப் போகும் பலன்கள், பரிகாரங்கள், தெய்வ வழிபாடுகள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

2025 ஆம் ஆண்டில் பல்வேறு முக்கிய கிரகங்களின் மாற்றங்கள் நடைபெறவுள்ளன. உலக மக்கள் அனைவரும் எதிர்பார்த்துக் காத்திருந்த சனிப்பெயர்ச்சி நடைபெற்றுள்ளது. ராகு கேது பெயர்ச்சி மற்றும் குருப்பெயர்ச்சி நடைபெறவுள்ளது. இதற்கிடையே ஏப்ரல் 14 ஆம் தேதி விசுவாவசு தமிழ்ப் புத்தாண்டு பிறந்துள்ளது. இந்தப் புத்தாண்டில் சிம்ம ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், தெய்வ வழிபாடுகள் குறித்து பார்க்கலாம்.

Tamil puthandu palan simmam

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்கள் அதிகமாக அடி வாங்கும் நிலை ஏற்படும். அஷ்டமத்தில் சனி, குரு, சுக்கிரன், ராகு, நீச்சம் பெற்ற குரு உள்ளனர். விரையத்தில் கேது அமர்ந்திருக்கிறார். 10 இல் குரு அமர்ந்திருக்கிறார். 4 கிரகங்கள் அஷ்டமத்தில் அமர்ந்துள்ளதால் சிறையில் அடைபட்ட போன்ற நிலை ஏற்படும். அடைந்திருக்கும் நிலை உண்டாகும். ராகு 7 ஆம் இடத்துக்கு வரப்போகிறார். கேது ராசி லக்கினத்திற்கு வருகிறார். குரு லாப ஸ்தானத்துக்கு போகிறார்.

கஷ்டப்பட்டு, பல பாதிப்புகளுக்கு உள்ளாகி, அவமானப்படும் சூழலில் குரு பார்வை இருப்பதால் இத்தனை பிரச்சனைகளுக்குப் பிறகு மீண்டு வருவீர்கள். கடகத்தை விட சிம்ம ராசிக்கு பரவாயில்லை என்ற நிலை தான் உள்ளது. சுக்கிரன் வீட்டில் குரு கடுமையானப் பகை கிரகம். குரு வீட்டில் புதன், புதன் வீட்டில் குரு நட்பு ஸ்தானம் என்பதால் நல்லது நடக்கும்.

7 ஆம் இடத்தில் ராகு வருவதால் கணவனால், மனைவிக்கும், மனைவியாக இருந்தால் கணவனுக்கும் கண்டம் உள்ளது. அயல்நாட்டு பிராயணம், வெளியூர் பிராயணம், வெளிநாடு பிராயணம், புதிய உறவுகள், புதிய புரிதல் உண்டாகும். கேது லக்கினத்துக்கு வரும்போது யாரை பார்த்தாலும் சந்தேகம் உண்டாகும். நிறைய பேருக்கு தலையில் முடி கொட்டும். எல்லாமே இருந்தாலும் ஏதோ ஒரு தனிமை, கஷ்டத்தால் அவதிப்படுவீர்கள். இந்த உணர்வுகள் மனதில் நிறைந்திருக்கம்.

லாப ஸ்தானத்தில் குரு புதன் வீட்டில் இருப்பதால் கிருஷ்ணர் கோயில், பெருமாள் கோயிலுக்குச் சென்று வழிபடுவது நன்மை பயக்கும். துளசி மாலையை சுவாமிக்கு சாற்றி, துளசி தீர்த்தத்தை சாப்பிட்டு வருவது நல்ல பலன்களைத் தரும். பார்வை பலத்தால் மனதை தெம்பாக்கி விடுவார் குரு பகவான். நீங்கள் தனியாக இருந்தாலும் உங்கள் வழி சரியாக இருக்கும்.

3 ஆம் இடத்தில் குரு இருப்பதால் மற்றவர்களால் பாராட்டப்படுவீர்கள். நல்ல நபர்களுடைய தொடர்பு கிடைக்கும். சகோதர, சகோதரிகளுடைய அன்பு கிடைக்கும். கால், முட்டி, நரம்பு விஷயங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். குழந்தை பாக்கியம் உண்டாகும். காதல் கைகூடும். எதிர்பாராத அதிர்ஷ்டங்கள் உண்டாகும்.

பணத்துக்கோ, பொருளாதாரத்துக்கோ எந்தவித பாதிப்பும் ஏற்படாது. ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். இரவு நேர பயணத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். கொழுப்பு, வயிறு தொடர்பான விஷயங்களில் கவனம் தேவை. பெரியவர்களின் ஆரோக்கியம், பணம் சார்ந்த விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும்.

மற்றபடி சிம்ம ராசிக்காரர்களுக்கு பொற்காலமாக இருக்க ஸ்ரீரங்கத்தில் ராகவேந்திர சுவாமியின் பிருந்தாவனத்துக்குப் பின்னால் இருக்கும் மகானின் சந்நிதானத்தில் வழிபாடு செய்து வருவது ஏற்றத்தை தரும். சந்தோஷத்தின் அடிப்படையில் 70 சதவீதமும், பொருளாதாரத்தில் 90 சதவீதமும் நன்மையைப் பயக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+