ஒரே நாளில் 5 விபத்துகள்.. சென்னை பெங்களூர் எக்ஸ்பிரஸ்வேயில் திட்டமிட்டு நடக்கும் விபத்துகள்? ஷாக்?
சென்னை: சென்னை பெங்களூர் எக்ஸ்பிரஸ்வே சாலையில் திட்டமிட்டு விபத்துகள் நடத்தப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. கடந்த மே 25ம் தேதி ஒரே நாளில அங்கே 5 விபத்துகள் ஏற்பட்டு உள்ளன.
அதோடு இல்லாமல்.. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் அங்கே 8 விபத்துகள் ஏற்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. பெங்களூர் - சென்னை எக்ஸ்பிரஸ் விரைவுச் சாலையின் கர்நாடகப் பகுதி முழுமையடைந்து போக்குவரத்திற்காக திறக்கப்பட்டுள்ளது. ஆனால் இங்கே பாதுகாப்பற்ற சூழல் நிலவி வருகிறது.
இந்த சாலை பகுதியில் போதிய விளக்குகள் இன்னும் பொருத்தப்படவில்லை. ஒரு பக்கம் பணிகள் வேறு நடக்கின்றன. அதேபோல் பொட்டல் காடாக இருப்பதால் இரவு நேரத்தில் பாதுகாப்பற்ற சூழல் உள்ளது. தற்போது கர்நாடக பகுதி மக்களால் இது நீண்ட டிரைவ்களுக்கும் ஜாலி ரைடுகளுக்கும் பயன்படுத்தப்படுகிறது.

பெங்களூர் - சென்னை எக்ஸ்பிரஸ் விரைவுச் சாலையின் தமிழ்நாடு மற்றும் கர்நாடகப் பகுதி முழுமையடைந்து போக்குவரத்திற்காக திறக்கப்பட்டுள்ளது. ஆந்திர பிரதேச பகுதி இன்னும் திறக்கப்படவில்லை. இந்த சாலையில் தற்போது வேகத்தை கண்காணிக்கும் ஏஐ சென்சார்கள், கேமராக்கள் உள்ளன. இவை கடந்த சில நாட்களாக செயல்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டு உள்ளது. இவை விடாமல் அங்கே செல்லும் வாகனங்கள் கண்காணிக்கும். சாலையில் பயணம் செய்பவர்களை விடாமல் இந்த கேமரா கண்காணிக்கும். ஆனால் பல இடங்களில் இன்னும் கேமராக்கள் வைக்கப்படவில்லை. இதனால் அங்கே விபத்துகள் திட்டமிட்டு நடத்தப்படுகின்றன.
அதிகரிக்கும் விபத்துகள்
அங்கே பெரிய கார்களை திட்டமிட்டு விபத்துக்கு தள்ளும் சூழல் ஏற்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. ஆள் நடமாட்டம் இல்லாத இடங்களில் திட்டமிட்டு விபத்துகள் அரங்கேற்றப்படுவதாக குற்றச்சாட்டுகள் வைக்கப்படுகின்றன. அதாவது அங்கே செல்லும் வாகனங்களை சில சமூக விரோதிகள் திட்டமிட்டு தாக்குவதாக புகார்கள் வைக்கப்படுகின்றன.
கார்களில் செல்பவர்களின் தங்கம், பணத்தை குறி வைத்து இந்த விபத்துகள் அரங்கேற்றம் செய்யப்படுவதாக கூறப்படுகிறது. சென்னை பெங்களூர் எக்ஸ்பிரஸ்வே சாலையில் சிசிடிவி இல்லாத, ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிகளில் அடிக்கடி இப்படி நடப்பதாக கூறப்படுகிறது. சாலையில் சில சமூக விரோதிகள் பொய்யாக பேரிகேட் வைக்கின்றனர். இதை பார்த்து வாகன ஓட்டிகள் மெதுவாக ஒதுங்கி செல்கின்றனர்.
அப்போது சாலை ஓரம் பதுங்கி இருக்கும் கும்பல் வாகனத்தின் கண்ணாடியை கம்பியை வைத்து உடைத்து விபத்துகளை ஏற்படுத்துகின்றனர். இந்த சம்பவம் அடிக்கடி நடந்து வருவதாக கூறப்படுகிறது. இங்கே ஹைவே போலீசார் இன்னும் ரோந்து பணிகளை தொடங்காத காரணத்தால் இந்த குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
கடந்த 23ம் தேதி பெங்களூரை சேர்ந்த நபர் ஒருவர் இங்கே இதேபோன்ற திட்டமிடப்பட்ட விபத்தில் இருந்து தப்பி உள்ளார். அதில் சாலையில் சில சமூக விரோதிகள் பொய்யாக பேரிகேட் வைத்து இருந்தனர். அதை பார்த்து மெதுவாக ஒதுங்கி சென்ற போது.. சாலை ஓரம் பதுங்கி இருக்கும் கும்பல் வாகனத்தின் கண்ணாடியை கம்பியை வைத்து உடைத்து விபத்து ஏற்படுத்த முயன்றனர் என்று அவர் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வெளியிட்டு எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த ரீல் இணையத்தில் தீயாக பரவி வருகிறது.
இதேபோல் கடந்த சில நாட்களாகவே மக்களுக்கு அங்கே தொடர்ந்து விபத்துகள் நடப்பதாக வாகன ஓட்டிகள் பலரும் இணையத்தில் புகார்களை வைத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications