ஸ்டாலினின் 6 மாஸ்டர் பிளான்கள்.. தமிழ்நாட்டில் வாகன ஓட்டிகளுக்கு முக்கிய அறிவிப்பு! மொத்தமாக மாறுதே

Subscribe to Oneindia Tamil

சென்னை: முதல்வர் சாலை மேம்பாட்டு திட்டத்தில் 2021-22 மற்றும் 2022-23ல் எடுக்கப்பட்ட 64 நான்கு வழி சாலை பணிகளில், 9 பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 55 பணிகள் விரைந்து முடிக்கப்பட வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார்.

முக்கியமாக 6 முத்திரைப் பணிகளை விரிவாக ஆய்வு செய்து விரைந்து செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அவை என்னென்ன முத்திரைப் பணிகள்?

6 Masterplans from CM Stalin: Major announcements on road and transports by Tamil Nadu Government

1. தொழிற்துறை தொடர்பான வைப்பு நிதி பணிகள்: சிப்காட், டாட்டா, ஓலா போன்ற பல்வேறு தொழில்துறை சம்பந்தமான 9 வைப்பு நிதி பணிகளை சிறப்பு கவனம் செலுத்தி, ஆய்வு செய்து விரைந்து முடித்திட வேண்டும் எனவும், ஒரு ஆண்டுக்கு கீழ் உள்ள நிலுவைப் பணிகள் மற்றும் ஒரு ஆண்டுக்கு மேல் உள்ள பணிகள் விரிவாக ஆய்வு செய்யப்பட்டு நீண்ட நாள் முடிக்கப்படாமல் உள்ள பணிகள் விரைந்து முடித்திட வேண்டும்.

வரவு செலவு திட்ட மதிப்பீடு கொண்டு தற்போது தற்போது வரை 34 சதவீதம் செலவிடப்பட்டுள்ளது. மீதமுள்ள பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அறிவுறித்தினார்கள்.

2. புறவழிச் சாலைப்பணிகள்: மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளுக்கு புறவழிச் சாலைகள் அமைக்கும் பணிகளை தனி கவனம் செலுத்தி செயல்படுத்த வேண்டும். விரிவான திட்ட அறிக்கை நிலையில் உள்ள 12 பணிகள் மற்றும் மற்றும் நில எடுப்பு நிலையில் உள்ள 28 பணிகள், ஆக 40 பணிகளை தனி கவனம் செலுத்தி செயலாக்கத்திற்கு கொண்டு வரவேண்டும்.

3. சாலை பாதுகாப்பு: பணிகளில் விபத்து கரும்புள்ளி பகுதி பணிகள், ஹாட்ஸ்பாட் பணிகள் போன்ற பணிகளுக்கு முக்கியத்துவம் தந்து தகுந்த பொறியியல் சீரமைப்பினை மேற்கொள்ள வேண்டும்.
அனைத்து விபத்து கரும்புள்ளி பகுதி பணிகளிலும், மேலும் விபத்து நடைபெறாத வண்ணம் பணிகளை மேற்கொள்ள வேண்டும். மேலும், சாலைகளில் கனரக வாகனங்களில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட கூடுதலாக சுமை ஏற்றிச் செல்வதால், சாலைகளின் தாங்கும் திறன் பாதிக்கப்படுகிறது. சாலைகளில் போக்குவரத்து தரவுகளை கணக்கில் கொண்டு தான் சாலைகள் அமைக்கப்படுகின்றன. சாலைகள் பழுதாவதை தவிர்க்க ஆலோசனைகள் வழங்கினார்.

4. கலைஞர் நூற்றாண்டு விழா: 100 இடங்களில் மரக்கன்றுகள் நடுதல், 100 பாலங்கள் கட்டுதல், 100 பாலங்கள் புனரமைத்தல், 100 இடங்களில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் போன்ற பணிகளுக்கு முக்கிய கவனம் செலுத்த வேண்டும் என கேட்டு கொண்டார்கள். நாளிதழ்கள், தொலைக்காட்சிகள், சமூக வலைதள செய்திகளில் குறிப்பிட்ட சாலைகள் மற்றும் பாலங்கள் குறித்த செய்தி வெளியாகும் போது, அது குறித்து உடனடியாக சீர் செய்து, தலைமை பொறியாளர்களுக்கும், அரசு கூடுதல் தலைமை செயலாளருக்கும் விரிவான அறிக்கையை அனுப்ப வேண்டும் எனவும் பத்திரிக்கைகளுக்கு செய்தியை உடனடியாக அனுப்ப வேண்டும்.

5. சாலை பராமரிப்பு: சாலை பராமரிப்பு பணிகளுக்கு முக்கியத்துவம் தர வேண்டும். மரங்களுக்கு வண்ணம் பூசுதல், பாலங்கள் / சிறு பாலங்கள் சீரமைத்தல் புருவங்களை செம்மைப் படுத்துதல், சாலை பாதுகாப்பு போன்ற பணிகள் அவ்வப்போது செய்யப்பட வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

6. கள ஆய்வு: மேலும் எனது கள ஆய்வின் போதும் மற்றும் உயர் அதிகாரிகள் ஆய்வின் போதும், இது குறித்த சுணக்கம் இருந்தால் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.

ஆகஸ்ட் மாதம் பாலங்கள் பராமரிப்பு மாதமாக கடைபிடிக்கப்படுவதால், சிறு பாலங்கள், குழாய் பாலங்கள் அனைத்தையும் சுத்தப்படுத்தி நீர் வழி பாதைகளில் உள்ள அடைப்புகளை அகற்றி பராமரிக்க வேண்டும். பாலங்களை வெள்ளை அடித்து நல்ல முறையில் பராமரிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
தமிழ்நாடு முழுவதும் நான் கள ஆய்வு செய்ய உள்ளதாகவும், ஆய்வின் போது பாலங்கள் பராமரிப்பு குறித்து சிறப்பு கவனம் செலுத்தி ஆய்வு செய்ய உள்ளதாகவும், கண்காணிப்பு பொறியாளர்களும் கோட்ட பொறியாளர்களும் தனி கவனம் செலுத்தி பாலங்கள் பராமரிப்பை உரிய முறையில் செயல்படுத்திட வேண்டும் என இந்த ஆய்வுக் கூட்டத்தில் அறிவுரை வழங்கினார்கள்.

மேலும், 3.7.2023 அன்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இத்துறையின் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டதில் சுட்டிகாட்டிய பணிகளின் முன்னேற்றத்தையும் ஆய்வு செய்தார்கள்.
இரண்டாவது நாளாக 4.8.2023 அன்று தேசிய நெடுஞ்சாலை, திட்டங்கள், மாநகரம், தமிழ்நாடு சாலை மேம்பாட்டுத் திட்டம், சென்னை கன்னியாகுமரி தொழில்தடத் திட்டம், தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனம், தமிழ்நாடு சாலை உட்கட்டமைப்பு மேம்பாட்டு கழகம் ஆகிய அலகுகளின் பணிகள் குறித்த மாநில அளவிலான ஆய்வுக்கூட்டம் நடைபெற உள்ளது.

ஆய்வுக் கூட்டத்தில், மாநில அளவில் நடைபெற்று வரும் நில எடுப்பு பணிகள், சாலைகள், சாலை மேம்பாலங்கள், ரயில்வே மேம்பாலங்கள், ஆற்றுப்பாலங்கள், புறவழிச்சாலைகள், ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய சாலைகளை தரம் உயர்த்தும் பணிகள் மற்றும் மாண்புமிகு முதலமைச்சரின் சாலை மேம்பாட்டுத் திட்டப் பணிகள் தொடர்பாக தற்போது பணிகளின் முன்னேற்றம் குறித்தும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் பல்வேறு ஆலோசனைகள் மற்றும் அறிவுரைகள் குறித்து வழங்குவதன் அடிப்படையில் அனைத்து அலகு அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் நடைபெறுகிறது.

இந்த ஆய்வு கூட்டத்தில், அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் திரு.பிரதீப் யாதவ்,
இ.ஆ.ப., திட்ட இயக்குநர் மருத்துவர் எஸ்.பிரபாகர், இ.ஆ.ப., நெடுஞ்சாலைத் துறையின் தலைமைப் பொறியாளர், கண்காணிப்பு பொறியாளர், கோட்டப் பொறியாளர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொள்கின்றனர், என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+