தமிழ்நாட்டில் முதல்முறையாக வருகிறது 10 வழி சாலை.. கவனிக்க வேண்டிய 7 சிறப்பம்சங்கள்.. நோட் பண்ணுங்க
சென்னை: தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலை துறையால் 132.87 கிமீ தூரத்திற்கு சென்னை பெரிஃபெரல் ரிங் ரோடு சாலை அமைக்கப்பட உள்ளது. மாமல்லபுரத்தில் இருந்து காட்டுப்பள்ளி துறைமுகத்தை இணைக்கும் 10 வழி சென்னை அவுட்டர் சாலையின் பணிகள் இரண்டு கட்டமாக நிறைவடைந்து ஜனவரியில் போக்குவரத்துக்கு திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
சென்னை பெரிபெரல் ரிங் ரோடு என்ற பெயரில் அமைக்கப்படும் இந்த "பார்டர் ரோடு" குறித்து 7 முக்கியமான அம்சங்களை இங்கே பார்க்கலாம்.

1. தமிழ்நாட்டில் திறக்கப்படும் முதல் 10 வழி சாலையாக இது மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காட்டுப்பள்ளி துறை முகத்தை மனதில் வைத்து இந்த சாலை விரிவாக்கம் செய்யப்படுகிறது. சென்னையில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண, கிண்டி கத்திப்பாரா - மணலி இடையே 100 அடி சாலை, இருளியூர் - புழல் இடையே சென்னை புறவழிச்சாலை, வண்டலூர் - மீஞ்சூர் இடையே சென்னை புறவழிச்சாலை உட்பட பல முக்கிய சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன.
2. ஜப்பான் சர்வதேச கூட்டுறவு முகமை (JICA) மூலம் தமிழ்நாடு சாலை மேம்பாட்டுக் கழகத்திற்கு ₹2,673 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தற்போது, கட்டுமானப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில், தொடர்ந்து 2 கட்டப் பணிகள் நடைபெறும்.
3. சாலை எப்படி இருக்கும்?: மொத்த மதிப்பிடப்பட்ட செலவு: ரூ. 12,301 கோடி
திட்டத்தின் நீளம்: 132.87 கிமீ (தோராயமாக)
பாதைகள்: 10 வழி பாதைகள் (மெயின் சாலை 6 பாதைகள் + இருபுறமும் 2 சேவைப் பாதைகள்)
வடிவமைப்பு வேகம்: மணிக்கு 120 கிமீ
நிலை: எண்ணூர் - தச்சூர் பிரிவு கட்டுமானத்தில் உள்ளது
4. இத்திட்டம் புத்துயிர் பெற்று, சென்னை பார்டர் ரோடு என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மாமல்லபுரத்தில் இருந்து காட்டுப்பள்ளி வரை நீட்டிக்கப்பட்டு, 196 அடி அகலத்தில் சாலை அமைக்கப்பட உள்ளது. மாமல்லபுரத்தில் துவங்கி எண்ணூர் காட்டுப்பள்ளி துறைமுகம் வரை 132 கி.மீ.க்கு 2 கட்டங்களாக சாலை அமைக்கப்படும்.
5. 5 பிரிவுகளைக் கொண்ட இந்த புதிய கிரீன்ஃபீல்ட் எக்ஸ்பிரஸ்வே சென்னையின் 4வது ரிங் ரோடாக இருக்கும். சிங்கபெருமாள்கோயில், ஸ்ரீபெரும்புதூர், திருவள்ளூர், தாமரைப்பாக்கம், பெரியபாளையம், புதுவாயல், காட்டுப்பள்ளி ஆகிய நகரங்களை இணைக்கும் வகையில் ரூ.12,301 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும். சென்னையில் வரவிருக்கும் சென்னை பெரிஃபெரல் ரிங் ரோட்டில் இரு சக்கர வாகனங்கள் சர்வீஸ் ரோடுகளில் மட்டும் அனுமதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. அதாவது மெயின் சாலையில் இரு சக்கர வாகனங்கள் அனுமதிக்கப்படாது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
6. கடைசி தேதி: 2025
உரிமையாளர்: தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனம் (TNRDC)
திட்ட மாதிரி: பொறியியல், கொள்முதல் மற்றும் கட்டுமானம் (EPC)
நிதி ஆதாரங்கள்: பிரிவு 1 (25.31 கிமீ எண்ணூர் துறைமுகம் முதல் தச்சூர் வரை): ஜப்பான் சர்வதேச கூட்டுறவு நிறுவனம் (JICA, 40,074 மில்லியன் யென் கடன்)
7. விரைந்து முடிக்க எண்ணூர் காமராஜர் துறைமுகம், காட்டுப்பள்ளி அதானி, எல் அண்ட் டி உள்ளிட்ட தனியார் துறைமுக நிறுவனங்கள் தமிழக அரசை வலியுறுத்தின. இந்த சாலை முடிந்தவுடன் சென்னையில் போக்குவரத்து நெரிசல் மற்றும் காற்று மாசுபாடு கணிசமாக குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது..
-
ஜப்பானுக்கு தண்ணி காட்டும் சீனா.. இருந்தது ஒன்னே ஒன்னு அப்போ அதுவும் போச்சா!! -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்!












Click it and Unblock the Notifications