சென்னையில் இந்த 5 இடத்தில்.. நிலம் வீடு வாங்கினால்.. நீங்கதான் கோடீஸ்வரர்.. அடிக்கும் லக்
சென்னை-பெங்களூரு விரைவுச்சாலையால் தமிழ்நாட்டில் பல பகுதிகளில் ரியல் எஸ்டேட் மதிப்பு கணிசமாக உயர்த்துவதற்கு வாய்ப்புகள் உள்ளன. அதிவேக நெடுஞ்சாலையின் அருகே இருக்கும் பகுதிகளில் சொத்து மதிப்புகள் உயரும் என எதிர்பார்க்கப்படும் ஐந்து இடங்கள் இங்கே கொடுக்கப்பட்டு உள்ளன.
ஸ்ரீபெரும்புதூர்
விரைவுச் சாலையின் தொடக்கப் புள்ளியாக கருதப்படும் ஸ்ரீபெரும்புதூரில் ஏற்கனவே நிலக் கட்டணம் உயர தொடங்கி உள்ளது. இங்கே நிலத்தின் மதிப்பு 30% வரை உயரும் என்று ரியல் எஸ்டேட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எண்ணூர் துறைமுகம் மாமல்லபுரத்தில் இருந்து 133 கிமீ நீளமுள்ள சென்னை பெரிஃபெரல் ரிங் ரோட்டின் பெரும்பகுதி 2025 ஆம் ஆண்டு இறுதிக்குள் முடிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்காக முக்கியமான சில இடங்களில் நிலம் கையகப்படுத்தும் பணிகள் நடந்து வந்த நிலையில் அந்த பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளன. தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலை துறையால் 132.87 கிமீ தூரத்திற்கு இந்த சாலை கட்டப்பட உள்ளது. சென்னை பெரிஃபெரல் ரிங் ரோடு (CPRR) என்பது, எண்ணூர் துறைமுகம் - மகாபலிபுரத்தை இணைக்கும் வகையில் தமிழ்நாட்டில் 10 வழி அணுகல் கட்டுப்பாட்டு விரைவுச் சாலையாகும். காட்டுப்பள்ளி வரை இந்த சாலை அமைக்கப்படுகிறது. 5 பிரிவுகளைக் கொண்ட இந்த புதிய கிரீன்ஃபீல்ட் எக்ஸ்பிரஸ்வே சென்னையின் 4வது ரிங் ரோடாக இருக்கும். சிங்கபெருமாள்கோயில், ஸ்ரீபெரும்புதூர், திருவள்ளூர், தாமரைப்பாக்கம், பெரியபாளையம், புதுவொயல், காட்டுப்பள்ளி ஆகிய நகரங்களை இணைக்கும் வகையில் ரூ.12,301 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும். இதனால் ஸ்ரீபெரும்புதூர் ரியல் எஸ்டேட் விலை வேகமாக உயரும்.
இந்த விரைவுச்சாலை கட்டுமானத்திற்கு 2025 ஆம் ஆண்டு காலக்கெடு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. NHAI இன் கட்டுப்பாட்டின் கீழ் கட்டுமானத்தில் உள்ள பெங்களூரு சென்னை விரைவுச்சாலை மற்றும் சித்தூர் - தச்சூர் விரைவுச்சாலை திட்டங்களுடன் இது இணைக்கப்படும். அதன் விரிவான திட்ட அறிக்கை (DPR) ஏற்கனவே தயாரிக்கப்பட்டுவிட்டது.

ஒரகடம்
தொழில்துறை மையமாக அறியப்படும் ஒரகடம், எக்ஸ்பிரஸ்வேயால் இன்னும் மதிப்பு உயரும் என்று கணிக்கப்பட்டு உள்ளது. இது வணிக மற்றும் குடியிருப்பு முதலீடுகளுக்கு கவர்ச்சிகரமான இடமாக கருதப்படுகிறது. இங்கே நிலத்தின் மதிப்பு 40% வரை உயரும் என்று ரியல் எஸ்டேட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தாம்பரம்
விரைவுச்சாலைக்கு அருகாமையில் உள்ளதால், தாம்பரம் விரும்பி வாங்கும் இடமாக மாற்ற வாய்ப்புள்ளது. இங்கே நிலத்தின் மதிப்பு 50% வரை உயரும் என்று ரியல் எஸ்டேட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஏனென்றால் ஓஆர்ஆர் சாலைக்கு அருகிலும் தாம்பரம் இருப்பதால் இங்கே நிலத்தின் மதிப்பு வேகமாக உயரும்.
பரந்தூர்
விரைவுச் சாலையில் இருந்து அருகில் இருப்பதால், ரியல் எஸ்டேட் வளர்ச்சிக்கு பரந்தூர் முக்கிய இடமாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இங்கே நிலத்தின் மதிப்பு 50% வரை உயரும் என்று ரியல் எஸ்டேட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே 52.94-கிமீ பூந்தமல்லி-பரந்தூர் மெட்ரோ நீட்டிப்புக்கான டிபிஆரை CMRL சமர்ப்பித்து உள்ளது. 52.94 கிமீ தூரத்திற்கு இந்த சாலை அமைக்கப்பட உள்ளது. சென்னையின் மேற்கு புறநகர்ப் பகுதிகளை பரந்தூர் விமான நிலையத்துடன் இணைக்கும் வகையில் இந்த மெட்ரோ அமைக்கப்பட உள்ளது. இந்த மெட்ரோ நெரிசலைக் குறைக்கும் மற்றும் பயண நேரத்தைக் குறைக்கும். இது குத்தம்பாக்கம் பேருந்து நிலையத்துடன் இணைக்கப்படும் வகையில் திறக்கப்பட உள்ளது. பூந்தமல்லியில் இருந்து பரந்தூர் வரையிலான மெட்ரோ ரயில் இணைப்புக்கான திட்டப்பணிகள் நடந்து வருகின்றன.,43.63 கி.மீ.தொலைவுக்கு விரிவான திட்ட அறிக்கையை தயாரிப்பதற்கு, நான்கு நிறுவனங்கள் ஏலம் சமர்ப்பித்துள்ளன. பூந்தமல்லியில் இருந்து திருமழிசை மற்றும் ஸ்ரீபெரும்புதூர் வழியாக பரந்தூர் வரை பெருந்திரள் மக்கள் பயன்பாட்டிற்கான துரித போக்குவரத்து அமைப்பை (MRTS) பரிந்துரைப்பதற்கான விரிவான சாத்தியக்கூறு அறிக்கையின் (DFR) முன்மொழியப்பட்ட முக்கிய அம்சங்கள் பின்வருமாறு.
1. வழித்தடத்தின் மொத்த நீளம்: 43.63 கி.மீ
2. பெருந்திரள் துரித போக்குவரத்திற்கான நிலையங்கள்: 19 (தோராயமாக)
3. மதிப்பிடப்பட்ட நிறைவு செலவு: ரூ 10,712 கோடி (தோராயமாக)
பரந்தூரில் முன்மொழியப்பட்ட புதிய விமான நிலையம், திருமழிசையில் முன்மொழியப்பட்ட பேருந்து நிலையம் மற்றும் வழித்தடத்தின் எதிர்கால வளர்ச்சி போன்ற சமீபத்திய முன்னேற்றங்களைக் கருத்தில் கொண்டு சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், பெருந்திரள் மக்கள் பயன்பாட்டிற்கான துரித போக்குவரத்து அமைப்பை (MRTS) நீட்டிப்பதற்கான சாத்தியக்கூறு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு பரிந்துரைக்கிறது.
மப்பேடு
எக்ஸ்பிரஸ்வே வழித்தடத்தில் அமைந்துள்ள மப்பேடு, மேம்பட்ட இணைப்பு மற்றும் சாத்தியமான தொழில்துறை வளர்ச்சியின் காரணமாக சொத்து மதிப்புகள் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இங்கே நிலம் மதிப்பு 60% வரை உயரும் வாய்ப்புகள் உள்ளன.
சென்னை பெங்களூர் எக்ஸ்பிரஸ்வே
பெங்களூர் -சென்னை எக்ஸ்பிரஸ் விரைவுச் சாலையின் தமிழ்நாடு மற்றும் கர்நாடகப் பகுதி முழுமையடைந்து போக்குவரத்திற்காக திறக்கப்பட்டுள்ளது. ஆந்திர பிரதேச பகுதி இன்னும் திறக்கப்படவில்லை.
ஆந்திரப் பிரதேசம் பகுதியில் இன்னும் முடிக்கப்படாத 260 கிமீ விரைவுச் சாலை ஆகஸ்ட் 2025 க்குள் முழுமையாகச் செயல்படத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 71 கிலோமீட்டர் நீளமுள்ள கர்நாடகப் பகுதி திறந்திருப்பதால், விரைவுச் சாலையைச் சுற்றி வசிக்கும் உள்ளூர் மக்களும், சாலை முடியும் வரை நீண்ட தூரம் சென்று திரும்பி வந்தவர்களும் இதைப் பயன்படுத்துகின்றனர்.
ஹோஸ்கோட் அருகே ஜின்னகெரா கிராஸில் உள்ள ஒரு கோயில் காரணமாக இங்கே பணிகள் தாமதமாக நடந்தது. கோவில் இடமாற்றம் செய்யப்பட்டு, 400 மீட்டர் தூரம் சாலை அமைக்கும் பணி தற்போது முடிவடைந்தது. இதையடுத்து சாலை மக்களுக்காக திறக்கப்பட்டுள்ளது. சில சிறிய பணிகளைத் தவிர மற்ற பணிகள் எல்லாம்முடிந்துவிட்டது .
விரைவுச்சாலையில் மாலூர், பங்கார்பேட்டை மற்றும் பெத்தமங்களாவில் வெளியேறும் கிளை சாலைகள் உள்ளன. முழு நீளமும் இன்னும் முடிவடையாததால், டோல் சார்பாக எந்த கட்டணத்தையும் வசூலிக்கவில்லை. இந்த விரைவுச் சாலையை இப்போது உள்ளூர்வாசிகள் மற்றும் நீண்ட தூரம் செல்பவர்கள் பயன்படுத்துகின்றனர்.
இந்த விரைவுச்சாலையானது கர்நாடகா, ஆந்திரா மற்றும் தமிழ்நாடு ஆகிய மூன்று மாநிலங்கள் வழியாகச் செல்கிறது மற்றும் அதிகபட்ச வேக வரம்பு மணிக்கு 120 கி.மீ என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. பெங்களூரு மற்றும் சென்னை இடையேயான பயண நேரத்தை இப்போது 6 மணி நேரத்திற்கும் மேலாக உள்ள பயண நேரத்தை மூன்று மணி நேரத்திற்குள் குறைக்க முடிவு செய்துள்ளனர்.
இந்த நான்கு வழிச்சாலையின் கட்டுமானம் கர்நாடகாவில் மூன்று தொகுப்புகளாக பிரிக்கப்பட்டு உள்ளது.
தொகுப்பு 1: ஹோஸ்கோட் மற்றும் மாலூருக்கு இடையே, 27.1 கி.மீ.
தொகுப்பு 2: மாலூர் மற்றும் பங்கார்பேட்டை இடையே 27.1 கி.மீ
தொகுப்பு 3: பங்கார்பேட்டை மற்றும் பெத்தமங்களா இடையே 17.5 கி.மீ












Click it and Unblock the Notifications