சூப்பர் ஸ்பீடு.. சென்னை பைபாஸ் அடையாளமே தெரியாமல் மாறுது பாருங்க.. வாகன ஓட்டிகளுக்கு குஷியோ குஷி
சென்னை: சென்னை உயர்த்தப்பட்ட பைபாஸ் சாலை பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. பணிகள் தற்போது 70 சதவிகிதம் வரை நிறைவு பெற்றுள்ளது.
சென்னை உயர்த்தப்பட்ட பைபாஸ் சாலை மீண்டும் போடப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. மே 2024 இல் பணிகள் முடிக்கப்பட வேண்டும், அதை அடிப்படையாக வைத்து மறுசீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும் NHAI இன் அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.

இதன் மூலம் இன்னும் சில மாதங்களில், பெருங்களத்தூரில் இருந்து புழல் வரை செல்லும் 32 கிமீ நீளமுள்ள சென்னை புறவழிச்சாலையை வாகன ஓட்டிகள் எளிதாக கடக்க முடியும். இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) சார்பாக இங்கே உள்ள பிரதான சாலை மற்றும் சர்வீஸ் சாலை இரண்டு மீண்டும் அமைக்கப்பட உள்ளது.
பணிகள் முடிக்கப்பட வேண்டும்: மே 2024 இல் பணிகள் முடிக்கப்பட வேண்டும் என்றும், அதன்படி மறுசீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும் NHAI இன் அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன. இப்பணிகளுக்கு டெண்டர் கோரப்பட்டு, வேகமாக பணிகள் நடந்து வருகின்றன. சாலையின் உயரத்தை அதிகரிக்காமல் இருக்க மேற்பரப்பை முதலில் நீக்கிவிட்டு, அதன்பின் நீக்கப்பட்ட சாலை மேல் புதிய சாலை போடப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதைச் செய்தால், அகற்றப்பட்ட பொருட்களில் குறைந்தது 30% மீண்டும் பயன்படுத்தப்படும். இதற்காக மில்லிங் செய்யும் பணிகள் தற்போது நடக்கும் என்கிறார்கள்.
இந்த சாலைக்காக செலவிடப்படும் தொகையின் மொத்த மதிப்பு ₹100 கோடி மற்றும் மேற்பரப்பை புதுப்பித்தல் மட்டுமின்றி பல இடங்களில் பழுதடைந்துள்ள உலோக பீம் கிராஷ் தடுப்புகளை மாற்றுவது உள்ளிட்ட பிற பணிகள் செய்யப்பட உள்ளது சுமார் 90% பகுதி மழைநீர் வடிகால்களைக் கொண்டுள்ளது. இருப்பினும், 50% கட்டமைப்புகளுக்கு மட்டுமே நீர் வெளியேறும் குழாய்கள் உள்ளன, அவை இந்த முறை வழங்கப்படும். மீதமுள்ள பகுதிகளிலும் வடிகால் அமைக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றன.
மின் விளக்கு: சமீபத்தில், 14.32 கோடி ரூபாய் மதிப்பில், ரோடு முழுவதும் மின்விளக்கு வசதி செய்யும் பணி நடந்தது. தலா 9 மீட்டர் உயரமுள்ள 347 மின் விளக்கு கம்பங்களும், தலா 10 மீட்டர் உயரமுள்ள 1,033 இரட்டைக் மின் விளக்கு கம்பங்களும், அதே உயரத்தில் 1,033 தனி மின் விளக்கு கம்பங்களும் பயன்படுத்தி மொத்தம் 2,133 LED விளக்குகள் நிறுவப்பட்டன.
ஈசிஆர்; ஈசிஆர் சாலையில் ஏற்கனவே பல்வேறு அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. சென்னை கிழக்கு கடற்கரை சாலை ( ecr) மற்றும் பழைய மகாபலிபுரம் சாலை (omr) ஆகிய சாலைகளை இணைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த திட்டம் பல காலமாக நிலுவையில் இருந்த நிலையில் ஒருவழியாக இதற்கு தற்போது டெண்டர் விடப்பட்டு உள்ளது.
மொத்தமாக 1000 கோடி செலவில் உருவாக உள்ள இந்த திட்டம் நடைமுறைக்கு வந்தால் மொத்தமாக சென்னையே அடியோடு மாறும். ஓஎம்ஆர், ஈசிஆரில் தற்போது உள்ள ஒன்றரை மணி நேர பயணம் அதிகபட்சம் 20 நிமிடமாக குறையும் என்கிறார்கள்.
இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக கிழக்கு கடற்கரை சாலையை (ECR) சென்னை பெரிஃபெரல் ரிங் ரோட்டுடன் (CPRR) இணைக்கும் பூஞ்சேரியில் ட்ரம்பெட் இன்டர்சேஞ்ச் அமைக்கும் பணி விரைவில் தொடங்கும். 1.8 கிமீ நீளம், ₹40 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள இந்த குறிப்பிட்ட இணைப்பு வசதி, ECR இல் போக்குவரத்தை குறைக்கவும், நகரத்திற்குள் செல்லாமல் எண்ணூருக்கு வசதியாக பயணிக்கவும் அனுமதிக்கும். என்பது குறிப்பிடத்தக்கது












Click it and Unblock the Notifications