கார் கண்ணாடியில் இது மட்டும் இருந்தால்.. மொத்தமாக போச்சு.. ஃபைன் கட்டணும்.. சென்னை போலீஸ் வார்னிங்
சென்னை: சென்னையில் எத்தனை சதவீதம் சன் ஃபிலிம் அனுமதிக்கப்படுகிறது என்று கேள்விக்கு சென்னை போக்குவரத்து போலீசார் பதில் அளித்துள்ளனர். இது தொடர்பாக பல நாட்களாக நிலவி வரும் முக்கியமான சர்ச்சைக்கு சென்னை போலீசார் விளக்கம் அளித்துள்ளனர்.
இது தொடர்பாக நெட்டிசன் ஒருவர் சென்னையில் எத்தனை சதவீதம் சன் ஃபிலிம் அனுமதிக்கப்படுகிறது என்று எனக்கு பின்புறம் மற்றும் முன்புறம் இரண்டிலும் 50% உள்ளது, இன்று அதற்கு 500 ரூபாய் சலான் கிடைத்தது. மோட்டார் ஏசிடியின்படி, முன் 50% மற்றும் பின்பகுதியில் 70% வரை சிவப்பு நிறமானது அனுமதிக்கப்படுகிறது என்று பல இடங்களில் படித்துள்ளேன். இது தொடர்பாக விளக்கம் வேண்டும் என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

இது தொடர்பாக சென்னை போலீசார் அளித்துள்ள விளக்கத்தில், தமிழ்நாட்டில் வாகனங்களில் சன் பிலிம் அனுமதிக்கப்படவில்லை. OEM ஆல் பொருத்தப்பட்டபடி, அங்கீகரிக்கப்பட்ட எளிதாக பார்க்க கூடிய tinted glass கண்ணாடி மட்டுமே அனுமதிக்கப்படுகிறது, என்று சென்னை போலீசார் தெரிவித்துள்ளனர்.
எச்சரிக்கை: இது போக வாகன ஓட்டிகளுக்கு முக்கியமான எச்சரிக்கை ஒன்றை தமிழ்நாடு போக்குவரத்து போலீசார் வெளியிட்டு உள்ளனர். கடந்த சில வாரத்துக்கு முன் காரைக்குடியில் காசிம் என்பவர் 18 வயது பூர்த்தி அடையாத சிறுவர் ஒருவருக்கு தனது KTM என்ற இருசக்கர வாகனத்தை ஓட்டுவதற்கு கொடுத்த குற்றத்திற்காக போலீஸ் அவர் மீது நடவடிக்கை எடுத்தது. காரைக்குடி வடக்கு காவல் நிலையத்தால் sec. 199(A) & 129 MV Act -ன்படி வழக்கு பதிவு செய்யப்பட்டு குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மேற்படி வழக்கில் அந்த சிறுவருக்கு இருசக்கர வாகனத்தை இயக்குவதற்காக கொடுத்துள்ள குற்றமானது நிரூபிக்கப்பட்டுள்ளதால் அவருக்கு இந்நீதிமன்றம் ரூ.26,000/- அபராதமும் மற்றும் 12 மாத காலத்திற்கு இந்த இரு சக்கர வாகனத்தின் பதிவை (Registration) நிறுத்தி வைக்கவேண்டும் (To be suspended) என்று 02.02.2024ல் உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் அபராதத் தொகையை காசிம் த-பெ. பிரான்மலை என்பவர் இந்நீதிமன்றத்தில் செலுத்திவிட்டார். எனவே 12 மாத காலத்திற்கு மேற்படி இருசக்கர வாகனத்தின் பதிவை (Registation) நிறுத்தி வைக்கவேண்டும் எனவும் மோட்டார் வாகன சட்டப்பிரிவு 199(A)ன் கீழ் உத்தரவிடப்படுகிறது என்று போலீசார் அறிவித்துள்ளனர்.
போலீஸ் எச்சரிக்கை: இந்த நிலையில்தான் 18- வயதுக்குட்பட்டவர்களுக்கு வாகனம் ஓட்ட அனுமதி அளித்தால், அந்த வாகனத்தின் பதிவை (Registration) நிறுத்தி வைப்போம் என்று தமிழ்நாடு போக்குவரத்து போலீசார் உத்தரவிட்டுள்ளனர்.
இது தொடர்பாக போலீசார் விடுத்துள்ள எச்சரிக்கையில், 8- வயதுக்குட்பட்டவர்களுக்கு வாகனம் ஓட்ட அனுமதி தரும் எண்ணத்தில் உள்ள பெற்றோர்களா நீங்கள்? 18-வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு வாகனம் ஓட்ட அனுமதி அளிக்கும் பெற்றோருக்கு தண்டனை உறுதி.
12 மாதங்களுக்கு வாகன பதிவு நிறுத்தி வைக்கப்படும். கவனம் தேவை பெற்றோர்களே என்று போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
போக்குவரத்தி விதி: தமிழ்நாட்டில் சாலை போக்குவரத்து விதிகள் கடுமையாக்கப்பட்டு வருகின்றன. முக்கியமாக சென்னை போன்ற பெருநகரங்களில் போக்குவரத்து விதிகள் தீவிரமாக்கப்பட்டு வருகின்றன.
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக சாலை விதிகளை பலர் மீறுவதாக புகார்கள் அதிகரித்து வருகின்றன. முக்கியமாக சாலைகளில் அபாயகரமான ஸ்டண்ட்களை செய்வதாகவும் புகார்கள் வைக்கப்பட்டு வருகின்றன.
விதி மீறல்: டிடிஎப் வாசன் போன்றவர்கள் சாலைகளில் அபாயகரமாக ஸ்டண்ட்களை செய்வதாகவும் புகார்கள் வைக்கப்பட்டு வந்தது. சாலை போக்குவரத்து விதிகளை மீறுபவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என்று சமீபத்தில் தமிழ்நாடு போக்குவரத்து துறை போலீசாரும் எச்சரிக்கை விடுத்து இருந்தனர்.
முக்கியமாக சென்னையில் அதிகம் இப்படி நடக்கிறது. அதோடு சிலர் சாலைகளில் அபாயகரமான ஸ்டண்ட்களை செய்வதாகவும் புகார்கள் வைக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில்தான் சமீபத்தில் தமிழ்நாட்டில் சாலை போக்குவரத்து விதிகளில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. பல்வேறு குற்றங்களுக்கான, விதி மீறல்களுக்கான அபராத தொகைகள் மாற்றம் செய்யப்பட்டு உள்ளன. அந்த வகையில் சென்னையில் போக்குவரத்து விதி மீறல் செய்பவர்களை கண்காணிக்க, அவர்களுக்கு அபராதம் விதிக்க புதிய வழிமுறை ஒன்றை தமிழ்நாடு அரசு கையில் எடுத்துள்ளது.
புதிய விதி: இந்த நிலையில்தான் பேருந்துகளில் அதிக ஒலி எழுப்பும் ஹார்ன்கள், வண்ண விளக்குகளை பொருத்தி பேருந்துகளை இயக்கினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதேபோல் வாகனங்களில் பல வண்ண விளக்குகள் பொறுத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது. பல வண்ண ஒளி விளக்குகள் எதிரில் வரும் வாகன ஓட்டுநரின் கவனத்தை சிதறடிப்பதால் போக்குவரத்து துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
சோதனையின் போது விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல்












Click it and Unblock the Notifications