சென்னைக்கு கிடைக்க போகும் அடுத்த புது ஹை-வே.. 4 முக்கிய நகரங்களை இணைக்கிறது.. சூப்பர் ரூட்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையை 4 முக்கியமான பகுதிகளுடன் இணைக்கும் புதிய தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்பட உள்ளது. சமீபத்தில் இதற்கான டெண்டர் விடப்பட்ட நிலையில் டிபிஆர் தயாரிக்கப்படுகிறது. இந்த சாலை இந்த வருட இறுதியில் கட்டுமானம் தொடங்கி 2028 ஜனவரியில் முழுமையாக முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னையை வேலூர், திருப்பதி, ராணிப்பேட்டை, வேலூர் உள்ளிட்ட நகரங்களுடன் இணைக்கும் பல்வேறு சாலை திட்டங்கள் தொடர்பாக மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

automobile

NH-40 எப்படி இந்த நெடுஞ்சாலை அமைப்பதற்கான 1,338 கோடி ரூபாய்க்கான திட்டத்திற்கு மத்திய அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த நெடுஞ்சாலை வாலாஜாபேட்டை/ராணிப்பேட்டையை தமிழ்நாடு-ஆந்திர பிரதேச எல்லையில் இணைக்கும் வகையில் 28 கி.மீ. தூரத்திற்கு கட்டப்படும். 4 வழி சாலை + 2 சர்வீஸ் சாலையாகவும் இது அமைக்கப்படும்.

நெரிசலைக் குறைக்க வாலாஜாபேட்டை மற்றும் ராணிப்பேட்டையைச் சுற்றி 10 கிலோமீட்டர் தூரத்திற்கு புறவழிச்சாலை அமைப்பது இந்த திட்டத்தின் முக்கிய அங்கமாகும். இந்த திட்டத்தில் நான்கு பெரிய பாலங்கள் மற்றும் இரண்டு ரயில்வே மேம்பாலங்கள் அமைக்கப்படும்.

இது அணுகல்-கட்டுப்பாட்டு வழி சாலை ஆகும். சென்னையை பெங்களூரு, திருப்பதி மற்றும் வேலூர் உள்ளிட்ட முக்கிய நகரங்களுடன் எளிதாக இணைக்கும் வகையில் இந்த சாலை அமைக்கப்படும்.

சென்னை திருப்பதி

அதேபோல் சென்னை-திருப்பதி NH716 இன் 44 கி.மீ தூரத்தை 750 கோடி செலவில் 4 வழிச்சாலையாக விரிவுபடுத்தும் டெண்டர்களை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வெளியிட்டு உள்ளது.

சென்னையில் இருந்து மும்பை மற்றும் திருப்பதிக்கு சாலை மார்க்கமாக செல்வதற்கான நேரத்தை கணிசமாகக் குறைக்கும் வகையில், சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் 144 கி.மீ. தூரத்திற்கு அகலப்படுத்தும் பணிகள் நடக்க உள்ளன.

இது சென்னை-சூரத் விரைவு நெடுஞ்சாலைத் திட்டத்தின் ஒரு பகுதியாகும், இது ரேனிகுண்டா, மகபூப்நகர், அக்கல்கோட், சோலாப்பூர் மற்றும் நாசிக் வழியாகச் செல்லும். இந்த திட்டம் மூலம் சென்னைக்கும் மும்பைக்கும் இடையிலான தூரம் குறைந்தது 120-130 கி.மீ அளவு குறையும் என்று கூறப்படுகிறது.

பிளான் என்ன?

சென்னை-திருப்பதி NH 205, திருவள்ளூரில் இருந்து தமிழ்நாடு-ஆந்திர எல்லை வரை, இரண்டு வழிச்சாலையில் இருந்து நான்கு வழிச் சாலையாக விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. கூடுதலாக, தமிழக-ஆந்திர எல்லையில் இருந்து திருப்பதி வரையிலான நான்கு வழிச்சாலை ஆறு வழிச் சாலையாக மேம்படுத்தப்படும். மேம்படுத்துவதற்கான விரிவான திட்ட அறிக்கையை இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் தற்போது தயாரித்து வருகிறது.

இவை தயாரிக்கப்பட்ட பின் அதற்கான பணிகள் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இங்கே இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக பல பாலங்கள், மேம்பாலங்கள், உயர் மட்ட சாலைகள் அமைக்கப்பட உள்ளன. ஆனாலும் , NH முழுவதுமாக அல்லது பகுதியளவு எக்ஸ்பிரஸ் வே ஆக மேம்படுத்தப்படுமா என்பது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. சென்னை திருப்பதி சாலையில் இதையடுத்து 44 கி.மீ தூரத்தை 750 கோடி செலவில் 4 வழிச்சாலையாக விரிவுபடுத்தும் டெண்டர்களை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வெளியிட்டு உள்ளது.

அதோடு இதன் இணைப்பு சாலைகள் மூடப்படுமா என்பது குறித்தும் முடிவு எடுக்கப்படவில்லை. பாடி - கொரட்டூர் சந்திப்பில் துவங்கும் சென்னை-திருப்பதி நெடுஞ்சாலையில் தற்போது திருநின்றவூர் வரை 22 கி.மீ.க்கு நான்கு வழிச்சாலை உள்ளது. இது, மாநில நெடுஞ்சாலைத்துறை மூலம் ஆறு வழிச்சாலையாக விரிவுபடுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+