கொடூரம்.. உயிரே போயிடும் போலயே.. சென்னை பெங்களூர் எக்ஸ்பிரஸ்வேயில் நடக்கும்.. திடுக் சம்பவம்!
சென்னை: சென்னை பெங்களூர் எக்ஸ்பிரஸ்வே சாலையில் ஆள் நடமாட்டம் இல்லாத இடங்களில் திட்டமிட்டு விபத்துகள் அரங்கேற்றப்படுவதாக குற்றச்சாட்டுகள் வைக்கப்படுகின்றன. அதாவது அங்கே செல்லும் வாகனங்களை சில சமூக விரோதிகள் திட்டமிட்டு தாக்குவதாக புகார்கள் வைக்கப்படுகின்றன.
சென்னை பெங்களூர் எக்ஸ்பிரஸ்வே சாலையில் சிசிடிவி இல்லாத, ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிகளில் அடிக்கடி இப்படி நடப்பதாக கூறப்படுகிறது. சாலையில் சில சமூக விரோதிகள் பொய்யாக பேரிகேட் வைக்கின்றனர். இதை பார்த்து வாகன ஓட்டிகள் மெதுவாக ஒதுங்கி செல்கின்றனர்.
அப்போது சாலை ஓரம் பதுங்கி இருக்கும் கும்பல் வாகனத்தின் கண்ணாடியை கம்பியை வைத்து உடைத்து விபத்துகளை ஏற்படுத்துகின்றனர். இந்த சம்பவம் அடிக்கடி நடந்து வருவதாக கூறப்படுகிறது. இங்கே ஹைவே போலீசார் இன்னும் ரோந்து பணிகளை தொடங்காத காரணத்தால் இந்த குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.

கடந்த 23ம் தேதி பெங்களூரை சேர்ந்த நபர் ஒருவர் இங்கே இதேபோன்ற திட்டமிடப்பட்ட விபத்தில் இருந்து தப்பி உள்ளார். அதில் சாலையில் சில சமூக விரோதிகள் பொய்யாக பேரிகேட் வைத்து இருந்தனர். அதை பார்த்து மெதுவாக ஒதுங்கி சென்ற போது.. சாலை ஓரம் பதுங்கி இருக்கும் கும்பல் வாகனத்தின் கண்ணாடியை கம்பியை வைத்து உடைத்து விபத்து ஏற்படுத்த முயன்றனர் என்று அவர் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வெளியிட்டு எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த ரீல் இணையத்தில் தீயாக பரவி வருகிறது.
பெங்களூர் சென்னை எக்ஸ்பிரஸ்வே:
பெங்களூர் -சென்னை எக்ஸ்பிரஸ் விரைவுச் சாலையின் தமிழ்நாடு மற்றும் கர்நாடகப் பகுதி முழுமையடைந்து போக்குவரத்திற்காக திறக்கப்பட்டுள்ளது. ஆந்திர பிரதேச பகுதி இன்னும் திறக்கப்படவில்லை. இந்த சாலையில் தற்போது வேகத்தை கண்காணிக்கும் ஏஐ சென்சார்கள், கேமராக்கள் உள்ளன. இவை கடந்த சில நாட்களாக செயல்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டு உள்ளது. இவை விடாமல் அங்கே செல்லும் வாகனங்கள் கண்காணிக்கும். சாலையில் பயணம் செய்பவர்களை விடாமல் இந்த கேமரா கண்காணிக்கும்.
இந்த விரைவுச்சாலையானது கர்நாடகா, ஆந்திரா மற்றும் தமிழ்நாடு ஆகிய மூன்று மாநிலங்கள் வழியாகச் செல்கிறது மற்றும் அதிகபட்ச வேக வரம்பு மணிக்கு 120 கி.மீ என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. பெங்களூரு மற்றும் சென்னை இடையேயான பயண நேரத்தை இப்போது 6 மணி நேரத்திற்கும் மேலாக உள்ள பயண நேரத்தை மூன்று மணி நேரத்திற்குள் குறைக்க முடிவு செய்துள்ளனர்.
இந்த நான்கு வழிச்சாலையின் கட்டுமானம் கர்நாடகாவில் மூன்று தொகுப்புகளாக பிரிக்கப்பட்டு உள்ளது.
தொகுப்பு 1: ஹோஸ்கோட் மற்றும் மாலூருக்கு இடையே, 27.1 கி.மீ.
தொகுப்பு 2: மாலூர் மற்றும் பங்கார்பேட்டை இடையே 27.1 கி.மீ
தொகுப்பு 3: பங்கார்பேட்டை மற்றும் பெத்தமங்களா இடையே 17.5 கி.மீ
காரில் வேகமாக செல்பவர்களால் அடிக்கடி இந்த சாலையில் அடுத்தடுத்து விபத்துகள் ஏற்பட தொடங்கி உள்ளன. கடந்த 3 வாரத்தில் மட்டும் 3 விபத்துகள் ஏற்பட்டு உள்ளன. இதில் 7 பேர் வரை பலியாகி உள்ளனர். இந்த விபத்துகளுக்கு பின் முக்கியமான காரணங்கள் உள்ளன. சாலை புதியது என்பதால் பலரும் காட்டுத்தனமாக.. வேகமாக ஓட்டுகிறார்கள். அங்கே பைக் அனுமதி இல்லை என்றாலும் டோல் இல்லை என்பதால் பலரும் பைக்கில் செல்கின்றனர். அங்கே நடந்த 3 விபத்தில் 2 பைக் சம்பந்தப்பட்டது ஆகும்.
சாலை பணிகள் இன்னும் சில இடங்களில் முடியவில்லை
அங்கே இப்போது பெரிய அளவில் விளக்குகள் இல்லை. இங்கே இரவு நேரம் பயணம் அனுமதிக்கப்பட்டு உள்ள நிலையில் இதன் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன. இந்த சாலை பகுதியில் போதிய விளக்குகள் இன்னும் பொருத்தப்படவில்லை. ஒரு பக்கம் பணிகள் வேறு நடக்கின்றன. அதேபோல் பொட்டல் காடாக இருப்பதால் இரவு நேரத்தில் பாதுகாப்பற்ற சூழல் உள்ளது. தற்போது கர்நாடக பகுதி மக்களால் இது நீண்ட டிரைவ்களுக்கும் ஜாலி ரைடுகளுக்கும் பயன்படுத்தப்படுகிறது. இதனால் விபத்துகள் அதிக அளவில் அங்கே ஏற்பட தொடங்கி உள்ளன.
ஆந்திரப் பிரதேசம் பகுதியில் இன்னும் முடிக்கப்படாத 260 கிமீ விரைவுச் சாலை ஆகஸ்ட் 2025 க்குள் முழுமையாகச் செயல்படத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 71 கிலோமீட்டர் நீளமுள்ள கர்நாடகப் பகுதி திறந்திருப்பதால், விரைவுச் சாலையைச் சுற்றி வசிக்கும் உள்ளூர் மக்களும், சாலை முடியும் வரை நீண்ட தூரம் சென்று திரும்பி வந்தவர்களும் இதைப் பயன்படுத்துகின்றனர். ஹோஸ்கோட் அருகே ஜின்னகெரா கிராஸில் உள்ள ஒரு கோயில் காரணமாக இங்கே பணிகள் தாமதமாக நடந்தது. கோவில் இடமாற்றம் செய்யப்பட்டு, 400 மீட்டர் தூரம் சாலை அமைக்கும் பணி தற்போது முடிவடைந்தது. இதையடுத்து சாலை மக்களுக்காக திறக்கப்பட்டுள்ளது. சில சிறிய பணிகளைத் தவிர மற்ற பணிகள் எல்லாம் முடிந்துவிட்டது .












Click it and Unblock the Notifications