4 நகரங்களை மகிழ்ச்சியில் துள்ள வைத்த தமிழ்நாடு அரசு.. சைலண்ட்டாக வந்த அறிவிப்பு.. இதுதான் தொலைநோக்கு
சென்னை: தமிழ்நாட்டில் முக்கியமான 4 நகரங்களில் பைபாஸ் சாலைகள் கொண்டு வரப்படும் என்று நேற்று சட்டசபையில் அறிவிக்கப்பட்டது. இந்த பைபாஸ் சாலைகள் மூலம் தமிழ்நாட்டில் சாலை போக்குவரத்து பெரிய அளவில் மாற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலைத் துறையானது, 1,055 கோடி மதிப்பிலான நெடுஞ்சாலைத் திட்டங்களை உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்தின் கீழ் கொண்டு வர உள்ளது. 6 புறவழிச்சாலைகள் இதில் அமைக்கப்பட உள்ளன. உங்கள் தொகுதியில் முதல் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் ஒரு பகுதியாகத் தொடங்கும்.

கடந்த 3 ஆண்டுகளில் திமுக அரசு நெடுஞ்சாலைத் திட்டங்களில் 42,662 கோடி முதலீடு செய்துள்ளதாகவும், அதில் 62% நிதி அதிமுக ஆட்சியில் இருந்து நிலுவையில் உள்ள திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.
விளக்கம்: நெடுஞ்சாலைகள் மற்றும் பொதுப்பணித்துறைக்கான மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதிலளித்த அமைச்சர், சாலை கிராசிங்குங்களை உயர்மட்ட பாலங்களாக மாற்றும் நோக்கில், 'முதலமைச்சர் அனைத்து பருவகால தடையில்லா இணைப்புத் திட்டத்தின்' கீழ் 50 தரைப்பாலங்கள் மேற்கொள்ளப்படும் என்றார்.
கடந்த மூன்று ஆண்டுகளில், இத்திட்டத்தின் கீழ் 1,146 தரைப்பாலங்கள் உயர்மட்ட பாலங்களாக மாற்றப்பட்டுள்ளன, என்று அவர் கூறினார். 'முதலமைச்சர் சாலை மேம்பாட்டுத் திட்டத்தில்' அவிநாசி-மேட்டுப்பாளையம் சாலை, ஈரோடு-கரூர், ராமநாதபுரம்-சிவகங்கை சாலைகள் உட்பட 200 கிமீ நீளமுள்ள இருவழிச் சாலைகள் நான்கு வழிச் சாலைகளாக மேம்படுத்தப்படும்.
பைபாஸ் சாலைகள்: மேலும், நடப்பு நிதியாண்டில் போக்குவரத்தை மேம்படுத்தும் வகையில், 550 கிமீ நீளமுள்ள ஒற்றை வழிச் சாலைகள் இரண்டு வழிச்சாலையாக விரிவுபடுத்தப்படும். தென்காசி, ஆற்காடு, போடிநாயக்கனூர், திருநெல்வேலி ஆகிய நகரங்களில் புதிய புறவழிச்சாலை அமைக்கப்படும்.
மயிலாடுதுறை மற்றும் கடலூர் மாவட்டங்களை இணைக்கும் புதிய சாலை மற்றும் மதுரையில் உள்ள சித்தம்பட்டி மற்றும் தென்காசி ரோட்டில் ஆலம்பட்டியை இணைக்கும் வெளிவட்ட சாலைக்கு விரிவான திட்ட அறிக்கைகளை நெடுஞ்சாலைத்துறை தயாரிக்கும். தொழில் வளர்ச்சியை அதிகரிக்கவும், இத்துறைகளுக்கு சரக்குகள் சீராக செல்வதை உறுதி செய்யவும், தொழில்களை இணைக்கும் சாலைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.
தொழிற்சாலைகளை இணைக்கும் சாலைகளை விரிவுபடுத்துதல் மற்றும் பலப்படுத்துதல் 200 கோடி செலவில் மேற்கொள்ளப்படும் என வேலு கூறினார். மேலும், ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு உள்ளிட்ட மலைப்பகுதிகளில் நிலச்சரிவு ஏற்படாமல் தடுக்க, 25 கோடி ரூபாய் செலவில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
கோவை சாலை: அதேபோல் கோவையில் மேற்கு புறவழிச்சாலை திட்டத்தின் முதல் கட்டப் பணியை அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குள் முடிக்க மாநில நெடுஞ்சாலைத் துறை நம்பிக்கை கொண்டுள்ளது. இங்கே ஏற்படும் போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு தொலைநோக்கு பார்வையோடு சாலை அமைக்கப்பட்டு வருகிறது.
32 கிலோமீட்டர் நீளமுள்ள இந்தப் பாதை மூன்று கட்டங்களாகப் பூர்த்தி செய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். முதல் கட்டமாக மதுக்கரை முதல் மாதம்பட்டி வரையிலான 11.8 கிமீ நான்குவழிச் சாலை மேம்பாடு அடங்கும். முதற்கட்டமாக ₹200 கோடியில் நடைபாதை உடன் கூடிய சாலை அமைக்கப்படும். மணல் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டதால் பணிகள் மந்தமடைந்துள்ளன. அது சரி செய்யப்பட்டு, பணிகள் விரைந்து முடிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இரண்டாம் கட்டமாக நிலம் கையகப்படுத்தும் பணி 70 சதவீதம் முடிந்துவிட்டது. இது மாதம்பட்டியில் இருந்து கணுவாய் வரை கிட்டத்தட்ட 10 கி.மீ. அரசு நிதி ஒதுக்கீடு செய்ய குறைந்தபட்சம் 90% முடிக்க வேண்டும்.












Click it and Unblock the Notifications