நோட் பண்ணுங்க.. தமிழ்நாட்டில் இந்த டோல் கேட்டுகளில்.. கட்டணம் உயர்த்தப்படாது.. அசத்தல் செய்தி
டெல்லி: இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) தமிழ்நாட்டில் உள்ள 25 சுங்கச்சாவடிகளில் இன்று முதல் கட்டணத்தை உயர்த்தி உள்ளது. சுங்கச்சாவடி கட்டணம் 5% முதல் 7% வரை உயரும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. பல்வேறு வகையான வாகனங்களுக்கான கட்டண உயர்வு ₹5 முதல் ₹150 வரை இருக்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. அதே சமயம் தமிழ்நாட்டில் சில டோல்களில் கட்டணம் உயர்த்தப்படவில்லை. எந்தெந்த டோல்களில் கட்டணம் உயர்த்தப்படவில்லை என்று இங்கே பார்க்கலாம்!
NHAI தரப்பு வட்டாரங்கள் கூறுகையில், தமிழ்நாட்டில் 67 சுங்கச்சாவடிகள் மூலம் நெடுஞ்சாலைகளின் பயன்பாட்டுக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. பொதுவாக ஒவ்வொரு ஏப்ரல் மற்றும் செப்டம்பர் மாதங்களில் இரண்டு கட்டங்களாக சுங்கக் கட்டணம் திருத்தப்படும்.இருப்பினும் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெற்றதால், மறு ஆய்வு ஒத்திவைக்கப்பட்டு ஜூன் மாதம் நடந்தது. இதையடுத்து இன்று கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளது.

எங்கு செய்யப்படும்?: தற்போது ஸ்ரீபெரும்புதூர், வாலாஜாபாத், விழுப்புரம், விக்கிரவாண்டி, உளுந்தூர்பேட்டை, திருச்சி, மதுரை, சமயபுரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 25 சுங்கச்சாவடிகளில் கட்டணத்தை மாற்றியமைக்க முன்மொழியப்பட்டுள்ளது. பல்வேறு வகையான வாகனங்களுக்கான கட்டண உயர்வு ₹5 முதல் ₹150 வரை இருக்கும்.
2023-24 நிதியாண்டில் தமிழகத்திலிருந்து சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் ஈட்டிய வருவாய் ₹4,221 கோடி. மாநிலத்தில் மொத்தம் 3,109 கிமீ நீளமுள்ள சாலை உள்ளது மற்றும் 67 சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் பின்வரும் சுங்கச்சாவடிகள் உள்ளன:
ஆத்தூர் (திண்டிவனம்)
போகலூர்
பூதக்குடி
சென்னசமுத்திரம்
சித்தம்பட்டி
எகதூர்
எலியார்பதி
எட்டூர்வட்டம்
IVRCL செங்கப்பள்ளி
கல்லக்குடி
கப்பலூர்
கீழ்குப்பம்
கொடைரோடு
கிருஷ்ணகிரி
லம்பளக்குடி
லெச்சுமணப்பட்டி
மனகெதி
மணவாசி கரூர்
மாத்தூர்
மேட்டுப்பட்டி
மொரட்டாண்டி
நல்லூர்
நாங்குநேரி
நத்தக்கரை
நெமிலி (ஸ்ரீபெரும்புதூர்)
ஓமல்லூர்
பாளைய கந்தர்வகோட்டை
பள்ளிகொண்டா
பரனூர் (செங்கல்பேட்டை)
பொன்னம்பலப்பட்டி
புதுக்கோட்டை (வாகைகுளம்)
புதுப்பாண்டியபுரம்
சாலைப்புதூர்
சமயபுரம்
செங்குறிச்சி
செண்பகம்பேட்டை
சூரப்பட்டு (சென்னை பைபாஸ் II)
தென்னமாதேவி
எல் அண்ட் டி கிருஷ்ணகிரி
திருப்பாச்சேத்தி
திருப்பராய்த்துறை
உத்தண்டி
வைகுந்தம்
வளவந்தான்கோட்டை
வானகரம்
வரதராஜபுரம்
வெண்ணத்தூர்
வாணியம்பாடி
வீரசோழபுரம் (மேற்கு)
வேலஞ்செட்டியூர் கரூர்
விஜயமங்கலம்
விக்கிரவாண்டி (விழுப்புரம்)
இதில் தற்போது ஸ்ரீபெரும்புதூர், வாலாஜாபாத், விழுப்புரம், விக்கிரவாண்டி, உளுந்தூர்பேட்டை, திருச்சி, மதுரை, சமயபுரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 25 சுங்கச்சாவடிகளில் கட்டணத்தை மாற்றியமைக்கப்பட்டு உள்ளது. பல்வேறு வகையான வாகனங்களுக்கான கட்டண உயர்வு ₹5 முதல் ₹150 வரை இருக்கும். மேற்கண்டதை தவிர மற்ற சுங்கச்சாவடிகளில் டோல் கட்டணம் மாற்றி அமைக்கப்பட மாட்டாது.
டோல் கட்டணம்: இதற்கு இடையே நாடு முழுக்க அனைத்து சுங்கச்சாவடிகளை அகற்றி, ஜிபிஎஸ் அடிப்படையிலான கட்டண வசூலை செயல்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. அமைச்சர் நிதின் கட்கரி இந்த புதிய முறையை உறுதி செய்துள்ளார். இது எப்படி செயல்படும் என்று விவரங்கள் வெளியாகி உள்ளன.
ஜிபிஎஸ் அடிப்படையிலான கட்டண வசூலை இயக்க, அனைத்து வாகனங்களுக்கும் ஜிபிஎஸ் (குளோபல் பொசிஷனிங் சிஸ்டம்) இருப்பது அவசியம். அரசாங்கம் திட்டமிட்டுள்ளபடி, இது மூன்றாம் தலைமுறை (3ஜி) மற்றும் ஜிபிஎஸ் இணைப்புடன் கூடிய மைக்ரோ-கண்ட்ரோலரின் உபகரணங்களின் மூலமாக இயங்கும்.
ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு செல்லும் வாகனங்களின் ஜி.பி.எஸ் ரெக்கார்டுகளை அரசு பெற்று அவற்றை தொடர்ந்து கண்காணிக்க முடியும். எனவே, அவர்கள் பயணிக்கும் வாகனங்களின் வழித்தடத்தையும், அவர்கள் எடுக்கும் சுங்கச்சாவடிகள் ரூட் என்ன என்பதையும் அரசு தெரிந்து கொள்ளும். அவர்கள் எத்தனை டோல் கேட்களைக் கடந்து செல்கிறார்கள் என்பதைச் சரிபார்த்து மொத்த டோல் வரியைக் கணக்கிடலாம்.
அதாவது வாகனங்கள் எந்த இடத்திற்கு எல்லாம் பயணம் செய்துள்ளது என்பதை கண்டுபிடித்து அதன் மூலம் ஜிபிஎஸ் பயன்படுத்தி நேரடியாக டோல் கட்டணம் வசூலிக்கப்படும்.












Click it and Unblock the Notifications