சென்னையில் எல்லா சாலையிலும் களமிறக்கப்படும் AI கேமரா, ட்ரோன்கள்.. காரணத்தை கேட்டா.. ஸ்டன் ஆகிடுவீங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: கிரேட்டர் சென்னை கார்ப்பரேஷன் (ஜிசிசி) சென்னையில் உள்ள 408 கிமீ சாலைகளை ட்ரோன்கள் மற்றும் AI- மூலம் இயக்கப்படும் கேமராக்களைப் பயன்படுத்தி ஆய்வு செய்ய உள்ளது.

சாலையின் உண்மையான அகலங்களை கண்டுபிடிக்கவும், ஆக்கிரமிப்புகளை நீக்கவும் இந்த ஏ ஐ மேப் உருவாக்கப்பட்டு வருகிறது. அதாவது ஏஐ மூலம் ஒரு சாலையின் உண்மையான நீளம், அகலம் கண்டுபிடிக்கப்படும். அதன்பின் அந்த சாலையில் ஆக்கிரமிப்பு இருந்தால் அகற்றப்படும்.

automobile

பெங்களூருவைச் சேர்ந்த ரோட்மெட்ரிக்ஸ் நிறுவனம் இந்த பணியை மேற்கொள்ள உள்ளது. முதல் கட்ட பணிகள் மார்ச் மாதத்தில் துவங்குகிறது. அதைத் தொடர்ந்து அண்ணாசாலை, ஜிஎஸ்டி சாலை போன்ற முக்கிய சாலைகள் ஆய்வு செய்யப்படும். ஏற்கனவே எட்டு மாத தாமதத்திற்குப் பிறகு, கிரேட்டர் சென்னை கார்ப்பரேஷன் (ஜிசிசி) விரைவில் நகரம் முழுவதும் 570 கிமீ நீளமுள்ள 3,505 சாலைகளை புதுப்பிக்க உள்ளது. இந்த பணிகள் மூன்று மாதங்களுக்குள் முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நீண்ட காலமாக பள்ளங்கள் நிறைந்த மற்றும் மோசமாக பராமரிக்கப்படும் சாலைகளை மீண்டும் போட முடிவு செய்துள்ளனர். குறிப்பாக துரைசாமி சுரங்கப்பாதை, நுங்கம்பாக்கம் சுரங்கப்பாதை மற்றும் மேட்லி சுரங்கப்பாதை ஆகியவற்றில் சாலை அமைக்கப்பட உள்ளது.

இதற்காக சென்னை GCC 486 கோடியை முன்மொழிந்துள்ளது. 2025-26 பட்ஜெட்டில் நிதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, தமிழ்நாடு நகர்ப்புற சாலை உள்கட்டமைப்பு நிதியிலிருந்து (TURIF) 150 கோடியும், நகர்ப்புற சாலை மேம்பாட்டு திட்டத்திலிருந்து (NSMT) 60 கோடியும் எதிர்பார்க்கப்படுகிறது.

பணிகள் ஓவர்

சென்னையில் தொடர் மழை வெள்ளம் முடிந்து உள்ள நிலையில் சேதமடைந்த சாலைகளை உடனுடக்குடன் சீரமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. சேதம் அடைந்த சாலைகள் சிமெண்ட் சாலைகள் மூலம் பேட்ச் செய்யப்பட்டு வருகின்றன. இதனால் உடனுக்குடன் குழிகள் மூடப்படுகின்றன.

தமிழ்நாடு முழுக்க பல்வேறு காரணங்களுக்காகக் சாலை பணிகள் நடந்து வருகின்றன. சாலைகளை விரிவு செய்வது, பாதாள சாக்கடை அமைப்பது, கழிவு நீர் குழாய்களை அமைப்பது, கேபிள் அமைப்பது, மழை நீர் வடிகால் சென்னையில் அமைப்பது, மின்சார வடங்களை அமைப்பது, பாலம் கட்டுவது என்று பல்வேறு மாவட்டங்களில் பல்வேறு பணிகள் நடந்து வருகின்றன. இந்த பணிகள் நிறைவடைந்த காரணத்தால் தற்போது சாலைகள் மீண்டும் அமைக்கப்பட உள்ளன.

1,000 மெயின் மற்றும் உட்புற சாலைகள் அடுத்த வாரத்திற்குள் சரி செய்யப்பட்டு, வாகன ஓட்டிகளுக்கு நிவாரணம் அளிக்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. முழுவதாக மோசம் அடைந்த சாலைகள் சரி செய்யப்படும். அவை பேட்ச் செய்யப்படாமல் மொத்தமாக சாலைகள் மீண்டும் போடப்படும். அதுவே பள்ளங்கள் மட்டும் இருந்தால் அவை பேட்ச் செய்யப்படும். ஒரு பள்ளத்தை சரிசெய்ய சுமார் 20 நிமிடங்கள் ஆகும். இரவு நேரங்களில் இதற்கான பணிகள் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

சென்னை சாலைகள் சீர்திருத்தம்:

பல சாலைகளில் உள்ள பள்ளங்களை சரிசெய்ய ஜெட் பேட்ச் இயந்திரங்களை வாடகைக்கு எடுக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இதற்காக 7 கோடி ரூபாய்க்கு டெண்டர் எடுத்துள்ளது. இந்த இயந்திரங்கள் அகமதாபாத்தில் இருந்து வாடகைக்கு எடுக்கப்பட்டு, சாலைகளில் உள்ள குழிகளை சுத்தம் செய்ய பயன்படுத்தப்படும்.

மாற்றப்படும் சாலைகள்:

ராயபுரம், தொண்டியார்பேட்டை, பெருங்குடி, அண்ணாநகர் ஆகிய பகுதிகளில் உள்ள பெரிய சாலைகளான பர்னபி ரோடு, புரசைவாக்கம் மெயின் ரோடு, பேசின் பிரிட்ஜ் ரோடு, அண்ணாநகரின் சாந்தி காலனி ரோடு உள்ளிட்ட சாலைகள் முதல் கட்டமாக சரி செய்யப்படும். இந்த சாலைகளை சரிசெய்வது போக்குவரத்து நெரிசலையும் குறைக்க உதவும்.

கண்டறியப்பட்ட 1,000 மோசமான சாலைகளில் 300 வடசென்னையில் உள்ளன. அடுத்த மழை முடிந்ததும் சாலைகள் சீரமைக்கும் பணி விரைவில் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. பழவந்தாங்கல் சுரங்கப்பாதை, மேட்லி ரோடு மற்றும் நுங்கம்பாக்கம் உள்ளிட்ட சில சுரங்கப்பாதைகளில் தண்ணீர் தேங்கி சாலைகள் சேதமடைந்துள்ளதால் அவற்றை சரிசெய்ய முடிவெடுக்கப்பட்டு உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+