ஈசிஆரில் பயணம் செய்கிறீர்களா? மாறுது சாலை அமைப்பு.. வாகன ஓட்டிகளுக்கு எதிர்பார்க்காத நல்ல செய்தி!
சென்னை: மரக்காணத்தில் இருந்து கிழக்கு கடற்கரை சாலையின் (ECR) பாதை அமைப்பை மாற்ற இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) முடிவு செய்துள்ளது. மொத்த நீளமான 46 கிமீ நீளத்தில், கூனிமேடு முதல் அலியூர் வரையிலான 30.8 கிமீ தூரம் உள்ள சாலை கிரீன்ஃபீல்ட் அணுகல் கட்டுப்பாட்டு சாலையாக மாற்றப்பட உள்ளது. இதனால் இனி வாகன ஓட்டிகள் மணிக்கு 100 கிமீ வேகத்தில் செல்ல முடியும்..
தற்போது உள்ள சாலையானது மரக்காணத்திலிருந்து கூனிமேடு வரை இருக்கும் ECR வழியாக 15.2 கிமீ தூரம் செல்கிறது, அது வலதுபுறம் திரும்பி NH 332, திண்டிவனம்-புதுச்சேரி-மயிலம் சாலையில் இணைகிறது. இதற்கு பதிலாக மரக்காணம் முதல் கூனிமேடு வரை தற்போதுள்ள நான்கு வழிச் சாலை ஆறு வழிச் சாலையாக மாற்றப்படும், இது முழுத் திட்டத்தின் முக்கிய அம்சமாகும்.

திட்டத்திற்கான நிலம் கையகப்படுத்துதல் ஆரம்ப கட்டத்தில் உள்ளது. திட்டச் செலவை அதிகரிப்பதற்கான அனுமதிக்காக NHAI காத்திருக்கிறது. உள்ளூர் போக்குவரத்து சாலையை கடக்க மூன்று இடங்களில் வாகன சுரங்கப்பாதைகள் அமைக்கப்படும். இதனால் இனி வாகன ஓட்டிகள் மணிக்கு 100 கிமீ வேகத்தில் செல்ல முடியும்..
இணையும் சாலை: இது போக போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் கிழக்கு கடற்கரை சாலையையும் (ECR) பழைய மகாபலிபுரம் சாலையையும் (OMR) இணைக்கும் திட்டம் விரைவில் நிறைவேற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
21 கோடியில் வெங்கடேசபுரம்-இளங்கோ நகர், மணியம்மை தெரு-வீரமணி தெரு, அறிஞர் அண்ணாசாலை-பாண்டியன் சாலை ஆகிய சாலைகளை இணைக்கும் வகையில் 3 இரும்பு பாலங்கள் கட்டப்படும் என சட்டசபையில் அறிவிக்கப்பட்டது. 2019 டிசம்பரில் கால்வாயின் குறுக்கே ஆறு இடங்களை குடிமை அமைப்பு இறுதி செய்து வடிவமைப்புகள் தயார் செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
சாலை இணைப்பு: சென்னை கிழக்கு கடற்கரை சாலை ( ecr) மற்றும் பழைய மகாபலிபுரம் சாலை (omr) ஆகிய சாலைகளை இணைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த திட்டம் பல காலமாக நிலுவையில் இருந்த நிலையில் ஒருவழியாக இதற்கு தற்போது டெண்டர் விடப்பட்டு உள்ளது.
மொத்தமாக 1000 கோடி செலவில் உருவாக உள்ள இந்த திட்டம் நடைமுறைக்கு வந்தால் மொத்தமாக சென்னையே அடியோடு மாறும். ஓஎம்ஆர், ஈசிஆரில் தற்போது உள்ள ஒன்றரை மணி நேர பயணம் அதிகபட்சம் 20 நிமிடமாக குறையும் என்கிறார்கள்.
இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக கிழக்கு கடற்கரை சாலையை (ECR) சென்னை பெரிஃபெரல் ரிங் ரோட்டுடன் (CPRR) இணைக்கும் பூஞ்சேரியில் ட்ரம்பெட் இன்டர்சேஞ்ச் அமைக்கும் பணி விரைவில் தொடங்கும். 1.8 கிமீ நீளம், ₹40 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள இந்த குறிப்பிட்ட இணைப்பு வசதி, ECR இல் போக்குவரத்தை குறைக்கவும், நகரத்திற்குள் செல்லாமல் எண்ணூருக்கு வசதியாக பயணிக்கவும் அனுமதிக்கும்.
இந்த சாலைக்கு CPRR என்று பெயர் வைக்கப்பட்டு உள்ளது. இந்த CPRR முடிந்ததும், பல இடங்களுக்கு இணைப்பு அதிகரிக்கும். எண்ணூரில் இருந்து ஒருவர் புதுச்சேரிக்கு சாலை மார்க்கமாக ஐந்தரை மணி நேரத்திற்குப் பதிலாக மூன்றரை மணி நேரத்தில் செல்ல முடியும் என்று கற்பனை செய்து பாருங்கள். இது நேரத்தையும், எரிபொருளையும் மிச்சப்படுத்தவும், வாகனங்களின் தேய்மானத்தைக் குறைக்கவும் உதவும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக சென்னையில் உள்ள ஓஆர்ஆர் சாலை அதாவது அவுட்டர் ரிங் ரோடு சாலையும் விரிவுபடுத்தப்பட உள்ளது. அதன்படி சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் (சிஎம்டிஏ) டெல்லியைச் சேர்ந்த ருத்ராபிஷேக் எண்டர்பிரைசஸ் லிமிடெட் நிறுவனத்திற்கு 62 கிமீ வெளிவட்டச் சாலையின் (ஓஆர்ஆர்) இருபுறமும் மேம்படுத்துவதற்கான வரைபடத்தைத் தயாரிக்க ரூ.2.9 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தை வழங்கியுள்ளது.












Click it and Unblock the Notifications