Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

எலக்ட்ரிக் காரை விட ஹைபிரிட் கார் தான் பெஸ்ட்.. ஆனால் கடைசியில் எதிர்பார்க்காத ட்விஸ்ட்! சிக்கல்தான்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நமது நாட்டில் ஏற்கனவே டூவிலர்கள் எலக்ட்ரிக் வண்டிகளாக மாற தொடங்கிவிட்டன. விரைவில் கார்களும் இதேபோல மாற ஆரம்பிக்கும். அதேநேரம் இப்போது சந்தையில் எலக்ட்ரிக் கார்களுக்கு போட்டியாக ஹைபிரிட் கார்களும் உள்ளன. எலக்ட்ரிக் கார்கள் vs ஹைபிரிட் கார்கள் என வரும் போது இரண்டில் எது பெஸ்ட்! எது யாருக்கு ஏற்றதாக இருக்கும் என்பது குறித்து நாம் பார்க்கலாம்.

கார்கள் விற்பனை ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. நகர்ப்புறங்களில் சவுகரியமாக ஒரு குடும்பம் செல்ல கார்கள் அத்தியாவசியமாகத் தேவைப்படுகிறது. கார்களை தேர்வு செய்ய வரும்போது இப்போதும் பெரும்பாலான மக்களுக்கு பெட்ரோல் கார் தான் முதல் சாய்ஸாக இருக்கிறது. ஆனால், அதைத் தாண்டி இந்த காலகட்டத்தில் எலக்ட்ரிக் மற்றும் ஹைபிரிட் கார்களின் விற்பனை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

car electric car

எந்த கார்?

வரும் காலங்களில் பெட்ரோல் கார்களின் பயன்பாடு குறைந்து எலக்ட்ரிக் கார்களின் பயன்பாடே அதிகரிக்கும். ஆனால், இந்த இடைப்பட்ட காலத்தில் ஹைபிரிட் கார்களை வாங்குவது சரியாக இருக்குமா.. இல்லை இப்போதே நேரடியாக எலக்ட்ரிக் கார்களை வாங்கலாமா என்ற கேள்வி பலருக்கும் இருக்கும். இதற்கான பதிலை நாம் பார்க்கலாம். அதற்கு முன்பு முதலில் இரு கார்களுக்கும் இடையே என்ன வித்தியாசம் என்பதைப் பார்க்கலாம்.

எலக்ட்ரிக் கார்கள்

எலக்ட்ரிக் கார்கள் என்பது அதன் பெயர் குறிப்பிடுவது போல மின்சாரத்தில் இயங்கக்கூடியது. செல்போனை நீங்கள் எப்படி சார்ஜ் போட்டு யூஸ் செய்வீர்களோ.. அதேபோல எலக்ட்ரிக் கார்களை சார்ஜ் போட்டு யூஸ் செய்து கொள்ளலாம். சார்ஜ் காலியாகும் போது மீண்டும் சார்ஜ் போட வேண்டும். செல்போனை போலவே இதிலும் பாஸ்ட் சார்ஜ், ஸ்லோ சார்ஜ் என பல ஆப்ஷன்கள் இருக்கிறது. நமது நாட்டில் கடந்த சில ஆண்டுகளாகவே எலக்ட்ரிக் கார்கள் விற்பனை அதிகரித்தே வருகிறது. கடந்த 2023ம் ஆண்டு சுமார் 95 ஆயிரம் எலக்ட்ரிக் கார்கள் விற்பனையான நிலையில், கடந்தாண்டு 1.13 லட்சம் எலக்ட்ரிக் கார்கள் விற்பனையானது.

car electric car

ஹைபிரிட் கார்கள்

அடுத்தது ஹைபிரிட் கார்கள்.. இந்த கார்களை நம்மால் பெட்ரோலிலும் இயக்க முடியும்.. மின்சாரத்திலும் இயக்க முடியும். அதாவது இந்த காரின் உள்ளே ஒரு பக்கம் பெட்ரோல் டேங்க், பெட்ரோல் இஞ்சின் இருக்கும். அதேபோல இதில் எலக்ட்ரிக் காரில் இருப்பதைப் போல பேட்டரியும், மோட்டாரும் இருக்கும். அதாவது இந்த ஒரு காரை பெட்ரோல் கார் போலவும் யூஸ் செய்யலாம். எலக்ட்ரிக் கார் போலவும் யூஸ் செய்யலாம். ஹைபிரிட் கார்களின் எண்ணிக்கையும் கூட நமது நாட்டில் அதிகரித்தே வருகிறது. 2025ல் 87 ஆயிரம் ஹைபிரிட் கார்கள் விற்பனையான நிலையில், கடந்தாண்டு அது 1.3 லட்சமாக உயர்ந்தது.

ஆதிக்கம் செலுத்துவது யார்?

எலக்ட்ரிக் கார்களை பொறுத்தவரை நமது நாட்டில் டாடா மோட்டர்ஸ் தான் ஆதிக்கம் செலுத்துகிறது. அவர்களின் பஞ்ச், டியாகோ, டைகார், நெக்சான், கர்வு உள்ளிட்ட எலக்ட்ரிக் கார்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. மேலும், மஹிந்திரா உள்ளிட்ட நிறுவனங்களும் கூட இப்போது சந்தையில் குதித்துள்ளன. ஹைப்ரிட் கார்களை பொறுத்தவரை மாருதி சுஸுகி கிராண்ட் விட்டாரா, மாருதி சுஸுகி இன்விக்டோ, டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் உள்ளிட்டவை அதிகம் விற்பனையாகிறது.

car electric car

சார்ஜிங் உள்கட்டமைப்பு

என்ன தான் எலக்ட்ரிக் கார்களின் பயன்பாடு அதிகரித்து வந்தாலும் கூட இன்னும் நமது நாட்டில் எலக்ட்ரிக் கார்களின் உள்கட்டமைப்பு முழுமையடையவில்லை. பெட்ரோல் கார் என்றால் தைரியமாக எங்கு வேண்டுமானாலும் போகலாம். ஆனால் எலக்ட்ரிக் கார்களில் அப்படி இல்லை. உதாரணமாக சென்னை டூ கோவை 500 கிமீ தொலைவாகும். தற்போதுள்ள மின்சார கார்களால் ஒரே சார்ஜில் இவ்வளவு தூரம் போகவே முடியாது. குறைந்தது ஒரு முறையாவது சார்ஜ் போட வேண்டி இருக்கும்.

பெட்ரோல் வண்டியில் நினைத்த இடத்தில் பெட்ரோல் போடுவதைப் போல இதில் நினைத்த இடத்தில் சார்ஜிங் போட முடியாது. அதிலும் நமது நாட்டில் இன்னும் சார்ஜிங் உள்கட்டமைப்பு முழுமையடையவில்லை. இதனால் குறிப்பிட்ட சில இடத்தில் மட்டுமே சார்ஜ் போட முடியும். அதை உன்னிப்பாகக் கவனித்து சார்ஜ் போட வேண்டும். மேலும் கார் சார்ஜ் ஆகும் வரை சில மணி நேரம் சும்மா தான் இருக்க வேண்டும்.

மறுபுறும் ஹைபிரிட் கார்களை எடுத்துக் கொண்டோம் என்றால் அதில் இந்த பிரச்சினையே இல்லை.. சார்ஜ் இருக்கும் வரை அதில் ஓட்டலாம். சார்ஜ் காலியான உடன் பெட்ரோல் மோடிற்கு மாற்றி ஓட்ட ஆரம்பிக்கலாம். அடுத்து எப்போது சார்ஜிங் ஸ்டேஷன் இருக்கிறதோ.. அங்கு சார்ஜ் போட்டால் போதும், இதுவே இதில் இருக்கும் பெரிய பிளஸ்

car electric car

விலை எப்படி

பெட்ரோல் கார்களை விட இரண்டுமே காஸ்ட்லி தான் என்றாலும் எலக்ட்ரிக் ஒப்பீட்டளவில் விலை கொஞ்சம் குறைவு. அதிலும் டாடா மோட்டர்ஸின் டியாகோ எலக்ட்ரிக் கார் ரூ.8 லட்சம் முதலே கிடைக்கிறது. அதன் பிறகு ஒவ்வொரு ரேட்டிலும் ஒவ்வொரு கார் மாடல்கள் உள்ளன. அதேநேரம் ஹைபிரிட் கார்களை பொறுத்தவரை தற்போது அதன் ரேட் அதிகம் தான். தற்போது குறைந்தது 20 லட்ச ரூபாய் இருந்தால் மட்டுமே ஹைபிரிட் கார்களை வாங்கலாம் என்ற நிலையே இருக்கிறது.

ஹைபிரிட் கார்களின் விலை இந்தளவுக்கு அதிகமாக இருக்க வரியும் ஒரு முக்கிய காரணமாகும். மின்சார கார்களின் மீது தற்போது 5% மட்டுமே ஜிஎஸ்டி வசூலிக்கப்படுகிறது. மேலும், தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில் சாலை வரி மற்றும் ஆர்டிஓ பதிவு கட்டணங்கள் இல்லை. அதேநேரம் ஹைபிரிட் கார்களுக்கு வழக்கமான பெட்ரோல் கார்களை போல இவை அனைத்துமே இருக்கும். இதுவே விலை அதிகரிக்க முக்கிய காரணமாக இருக்கும். உபி உள்ளிட்ட ஒருசில மாநிலங்கள் மட்டும் சாலை வரி மற்றும் ஆர்டிஓ பதிவு கட்டணங்களில் இருந்து விலக்கு தருகிறது.

இரண்டில் எது பெஸ்ட்?

நீங்கள் முதன்மையாகச் சிட்டிக்குள் காரை ஓட்டும் நபராக இருந்தால் எலக்ட்ரிக் கார்களே போதுமானதாக இருக்கும். ஏனென்றால் சார்ஜ் காலியாகும் போது வீட்டிலேயே சார்ஜ் போட்டுக்கொள்ளலாம். சார்ஜிங் உள்கட்டமைப்பு வளரும் வரை நெடுந்தூர பயணங்களுக்கு இது ஏற்றதாக இருக்காது. அதேநேரம் நீங்கள் அடிக்கடி லாங் டிரிப் போகும் நபராக இருந்து, உங்களுக்கு பட்ஜெட் பிரச்சினை இல்லை என்றால் ஹைபிரிட் கார்கள் பக்கம் போகலாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+