இந்தியா முழுக்க 4 வழி சாலைகளில் முக்கிய மாற்றம் வருது! மத்திய அரசு பெரிய பிளான்! மாஸ்டர் ஸ்ட்ரோக்
சென்னை: பெட்ரோல், டீசல் உட்பட எரிபொருள் பயன்பாடு மற்றும் வாகன மாசுவை குறைக்கும் முயற்சியில், நகரங்களுக்கு இடையேயான பொதுப் போக்குவரத்தை மின்மயமாக்கும் திட்டத்தை மத்திய அரசு கையில் எடுத்துள்ளது. இதற்காக தங்க நாற்கர சாலையில் 6,000 கிலோமீட்டர் தூரத்திற்கு மின்சார வாகனத்தை இயக்கம் வகையில் நெடுஞ்சாலைகளை மாற்ற அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
இ-மொபைலிட்டி மற்றும் இ-பஸ்களின் பயணத்தை ஊக்குவிப்பதற்காக அடுத்த ஏழு ஆண்டுகளில் இந்த திட்டம் கொஞ்சம் கொஞ்சமாக நிறைவேற்றப்பட திட்டமிடப்பட்டுள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தங்க நாற்கர சாலை; தங்க நாற்கர சாலையானது இந்தியாவின் மிக நீளமான தேசிய நெடுஞ்சாலை வலையமைப்பை கொண்டது ஆகும், இது முக்கிய தொழில்துறை, விவசாய மற்றும் கலாச்சார மையங்களை இணைக்கிறது. இது டெல்லி (வடக்கு), கொல்கத்தா (கிழக்கு), மும்பை (மேற்கு) மற்றும் சென்னை (தெற்கே) ஆகிய நகரங்களுடன் இணைக்கப்படும் வகையில் உருவாக்கப்பட்டு உள்ளது ,
இந்த முன்முயற்சி விஷன் 2030: PM பொது போக்குவரத்து சேவையின் ஒரு பகுதியாக செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. மின்-நெடுஞ்சாலைகளின் வளர்ச்சியானது நாட்டில் மாசுபாட்டை குறைக்கும். இதற்கு சார்ஜிங் உள்கட்டமைப்பில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். தினசரி பயணத்திற்கு மின்சார கார்களின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மின்சார மையம்; அதன்படி சாலைகளில் மின்சார சார்ஜ் மையங்கள் அமைப்பது தொடங்கி பல மாற்றங்களில் மின்சார வாகனம் பயன்படுத்தும் வகையில் மாற்றம் செய்ய உள்ளனர்.
அடுத்த 7 ஆண்டுகளில் 800,000 டீசல் பேருந்துகளுக்குப் பதிலாக மின்சாரப் பேருந்துகளை களமிறக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. 2,00,000 அரசுப் போக்குவரத்து நிறுவனங்களுக்கும் (STUs), 5,50,000 தனியார் ஆபரேட்டர்களுக்கும், 50,000 பள்ளிகள் மற்றும் ஊழியர்களின் போக்குவரத்திற்கும் 2030ஆம் ஆண்டுக்குள் வழங்க அரசு திட்டமிட்டுள்ளது. இந்தியாவில் (ஹைப்ரிட் மற்றும்) எலக்ட்ரிக் வாகனங்களின் வேகமான பயன்பாடு மற்றும் உற்பத்தி ஆகியவற்றை அதிகரிக்கும் வகையில் இந்த திட்டம் உருவாக்கப்பட்டு உள்ளது.
இ வாகனங்கள்: உலகம் முழுக்க இ மின்சார வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இ மின்சார வாகனங்களை பயன்படுத்த மக்கள் அதிக அளவில் ஆர்வம் செலுத்தி வருகின்றனர். இந்தியாவில் மின்சார வாகனங்களின் உற்பத்தியில் தமிழ்நாடுதான் முன்னிலை வகித்து வருகிறது. ஏற்கனவே ஆட்டோமொபைல் சாதனங்களின் உற்பத்தியில் சென்னைதான் இந்தியாவின் டெட்ராய்டு என்று அழைக்கப்படுகிறது.
அந்த அளவிற்கு சென்னை முழுக்க கார், பைக் உற்பத்தி மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த நிலையில்தான் உலகிலேயே மிகப்பெரிய பைக் உற்பத்தி ஆலையை ஓலா நிறுவனம் கிருஷ்ணகிரியில் அமைத்தது.
சார்ஜிங் பாயிண்ட்: சமீபத்தில்தான் தமிழ்நாட்டில் மின்சார வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிப்பதை ஊக்குவிக்கும் விதமாக தமிழ்நாட்டில் 100 இடங்களில் இ-வாகனங்களுக்கு சார்ஜிங் பாயிண்ட் அமைக்க முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. வாகனங்களை நிறுத்தி சார்ஜ் செய்யும் விதமாக இந்த பாயிண்ட் அமைக்கப்பட உள்ளது.
சாலை ஓரம் அரசு நிலத்தில் தமிழ்நாடு முழுக்க 100 இடங்களில் சார்ஜிங் பாயிண்ட் அமைக்கப்படும். மின்சார வாரியம் சார்பாக இந்த சார்ஜிங் பாயிண்ட் அமைக்கப்படும். மின்சார வாரியம் சார்பாக இங்கே மின்சாரம் வழங்கப்பட்டு அதில் சார்ஜிங் பாயிண்ட் இயங்கும். வரும் காலங்களில் மக்கள் பயன்பாட்டை பொறுத்து இந்த சார்ஜிங் பாயிண்ட்களின் எண்ணிக்கை உயர்த்தப்படும் என்று மின்சார வாரியம் அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications