திறந்தவுடன்.. பெங்களூர் - சென்னை எக்ஸ்பிரஸ் விரைவுச் சாலையில்.. அடுத்தடுத்து நடந்த விபத்துகள்.. ஏன்?

Subscribe to Oneindia Tamil

பெங்களூர் -சென்னை எக்ஸ்பிரஸ் விரைவுச் சாலையின் கர்நாடகப் பகுதி முழுமையடைந்து போக்குவரத்திற்காக திறக்கப்பட்டுள்ளது. இந்த எக்ஸ்பிரஸ் விரைவுச் சாலையின் பயணம் எப்படி இருக்கும் என்பது தொடர்பான தகவல் வெளியாகி உள்ளது. தமிழ்நாட்டின் சில பகுதி இன்னும் இதில் திறக்கப்படவில்லை. கர்நாடகா பகுதி மட்டுமே திறக்கப்பட்டு உள்ளது.

ஆனால் இந்த சாலையில் அடுத்தடுத்து விபத்துகள் ஏற்பட தொடங்கி உள்ளன. கடந்த 3 வாரத்தில் மட்டும் 3 விபத்துகள் ஏற்பட்டு உள்ளன. இதில் 7 பேர் வரை பலியாகி உள்ளனர். இந்த விபத்துகளுக்கு பின் முக்கியமான காரணங்கள் உள்ளன.

automobile chennai bangalore

1. சாலை புதியது என்பதால் பலரும் காட்டுத்தனமாக.. வேகமாக ஓட்டுகிறார்கள்.

2. அங்கே பைக் அனுமதி இல்லை என்றாலும் டோல் இல்லை என்பதால் பலரும் பைக்கில் செல்கின்றனர். அங்கே நடந்த 3 விபத்தில் 2 பைக் சம்பந்தப்பட்டது ஆகும்.

3. அங்கே இப்போது பெரிய அளவில் விளக்குகள் இல்லை.

4. இங்கே இரவு நேரம் பயணம் அனுமதிக்கப்பட்டு உள்ள நிலையில் இதன் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன. இந்த சாலை பகுதியில் போதிய விளக்குகள் இன்னும் பொருத்தப்படவில்லை. ஒரு பக்கம் பணிகள் வேறு நடக்கின்றன.

5. அதேபோல் பொட்டல் காடாக இருப்பதால் இரவு நேரத்தில் பாதுகாப்பற்ற சூழல் உள்ளது. தற்போது கர்நாடக பகுதி மக்களால் இது நீண்ட டிரைவ்களுக்கும் ஜாலி ரைடுகளுக்கும் பயன்படுத்தப்படுகிறது.

6. இதனால் விபத்துகள் அதிக அளவில் அங்கே ஏற்பட தொடங்கி உள்ளன.

ஆந்திரப் பிரதேசம் மற்றும் தமிழ்நாட்டில் இன்னும் முடிக்கப்படாத 260 கிமீ விரைவுச் சாலை ஆகஸ்ட் 2025 க்குள் முழுமையாகச் செயல்படத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

71 கிலோமீட்டர் நீளமுள்ள கர்நாடகப் பகுதி திறந்திருப்பதால், விரைவுச் சாலையைச் சுற்றி வசிக்கும் உள்ளூர் மக்களும், சாலை முடியும் வரை நீண்ட தூரம் சென்று திரும்பி வந்தவர்களும் இதைப் பயன்படுத்துகின்றனர்.

ஹோஸ்கோட் அருகே ஜின்னகெரா கிராஸில் உள்ள ஒரு கோயில் காரணமாக இங்கே பணிகள் தாமதமாக நடந்தது. கோவில் இடமாற்றம் செய்யப்பட்டு, 400 மீட்டர் தூரம் சாலை அமைக்கும் பணி தற்போது முடிவடைந்தது. இதையடுத்து சாலை மக்களுக்காக திறக்கப்பட்டுள்ளது. சில சிறிய பணிகளைத் தவிர மற்ற பணிகள் எல்லாம் முடிந்துவிட்டது .

விரைவுச்சாலையில் மாலூர், பங்கார்பேட்டை மற்றும் பெத்தமங்களாவில் வெளியேறும் கிளை சாலைகள் உள்ளன. முழு நீளமும் இன்னும் முடிவடையாததால், டோல் சார்பாக எந்த கட்டணத்தையும் வசூலிக்கவில்லை. இந்த விரைவுச் சாலையை இப்போது உள்ளூர்வாசிகள் மற்றும் நீண்ட தூரம் செல்பவர்கள் பயன்படுத்துகின்றனர்.

இந்த விரைவுச்சாலையானது கர்நாடகா, ஆந்திரா மற்றும் தமிழ்நாடு ஆகிய மூன்று மாநிலங்கள் வழியாகச் செல்கிறது மற்றும் அதிகபட்ச வேக வரம்பு மணிக்கு 120 கி.மீ என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. பெங்களூரு மற்றும் சென்னை இடையே இப்போது 6 மணி நேரத்திற்கும் மேலாக உள்ள பயண நேரத்தை மூன்று மணி நேரத்திற்குள் குறைக்க முடிவு செய்துள்ளனர்.

இந்த நான்கு வழிச்சாலையின் கட்டுமானம் கர்நாடகாவில் மூன்று தொகுப்புகளாக பிரிக்கப்பட்டு உள்ளது.

தொகுப்பு 1: ஹோஸ்கோட் மற்றும் மாலூருக்கு இடையே, 27.1 கி.மீ.

தொகுப்பு 2: மாலூர் மற்றும் பங்கார்பேட்டை இடையே 27.1 கி.மீ

தொகுப்பு 3: பங்கார்பேட்டை மற்றும் பெத்தமங்களா இடையே 17.5 கி.மீ

சாலை: பெங்களூர் சென்னை விரைவுச்சாலையில் அவசரத்திற்கு யூ டர்ன் எடுக்கும் வசதிகள் அமைக்கப்பட்டு உள்ளன. அவசர கால தேவைகள், போக்குவரத்து மாற்றங்களை சமாளிப்பதற்காக யூ டர்ன் எடுக்கும் வசதிகள் அமைக்கப்பட்டு உள்ளன.

பொதுவாக எக்ஸ்பிரஸ் வே சாலைகளில்.. இப்படி யூ டர்ன் எடுக்கும் வசதிகள் இருக்காது. ஆனால் சென்னை பெங்களூர் சாலையில் இந்த மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. சென்னை - பெங்களூர் இடையே அமைக்கப்படும் எக்ஸ்பிரஸ் வே சாலையில் மும்மொழி கொள்கை பின்பற்றப்பட்டு உள்ளது.

இதில் கர்நாடக எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் அது தமிழ் அதிகம் பேசும் இடங்களாக இருந்தாலும் தமிழில் தகவல் பலகைகள் வைக்கப்படவில்லை. அதே போல் தமிழ்நாட்டு எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் அது கன்னடம் அதிகம் பேசும் இடங்களாக இருந்தாலும் கன்னடத்தில் தகவல் பலகைகள் வைக்கப்படவில்லை. மாறாக இந்தி மூன்றாவது மொழியாக வைக்கப்பட்டு உள்ளது.

உதாரணமாக சென்னை 10 கிமீ என்று கர்நாடக எல்லையில் இந்த எக்ஸ்பிரஸ் வே சாலையில் போர்டு வைக்கப்பட்டு உள்ளது. சென்னை 10 கிமீ தூரத்தில் இருந்தாலும் தமிழில் பெயர் பலகை இல்லாமல் இந்தி - ஆங்கிலம் - கன்னடத்தில் பலகை உள்ளது. தமிழ்நாடு எல்லைக்குள் கன்னடம் இல்லாமல் போய் உள்ளது. இந்தி பயன்படுத்த வேண்டும் என்பதால் தமிழ் - கன்னடம் முக்கியமான இடங்களில் புறக்கணிக்கப்பட்டு உள்ளன .

சாலை வேக கட்டுப்பாடு; இந்த சாலையில் கார்களுக்கு 100 கிலோ மீட்டர் வேகமும், பேருந்துகளுக்கு 120 கிலோ மீட்டர் வேகமும் லிமிட்டாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சாலை NH-7 என்று அழைக்கப்படும் என்று அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

262-கிமீ நீளமுள்ள பெங்களூர்-சென்னை விரைவுச்சாலை (BCE) முடிவடையும் தருவாயில் உள்ளது. BCE திட்டம் என்று அழைக்கப்படும் சென்னை - பெங்களூர் சாலை அதிகாரப்பூர்வமாக NE-7 என்று அழைக்கப்படுகிறது. கர்நாடகாவின் பெங்களூரு அருகே ஹோஸ்கோட்டையும், தமிழ்நாட்டின் சென்னைக்கு அருகிலுள்ள ஸ்ரீபெரும்புதூரையும் இணைக்கும் நான்கு வழி அணுகல் கட்டுப்பாட்டு சாலையாகும். தற்போதைய பயண நேரமான ஏழிலிருந்து எட்டு மணி நேரத்துடன் ஒப்பிடும்போது, ​​பெங்களூரு மற்றும் சென்னை இடையேயான பயண நேரத்தை இந்த புதிய சாலை இரண்டு முதல் இரண்டரை மணி நேரமாகக் குறைக்கும். இந்த அதிவேக நெடுஞ்சாலையானது நகரங்களுக்கு இடையிலான தூரத்தை 80 கி.மீ வரை குறைக்கும். அதிவேக நெடுஞ்சாலையில் அனுமதிக்கப்பட்ட வேகம் மணிக்கு 120 கி.மீ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+