Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

உடனே அகற்றுங்க.. 3 வாரம்தான் டைம்.. உத்தரவிட்ட உயர் நீதிமன்றம்! மாறுது சென்னையின் 2 பெரிய ஏரியாக்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை கே.கே. நகர் மற்றும் அசோக் நகர் பகுதிகளில் உள்ள சாலை ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிடப்பட்டு உள்ளது. முக்கிய சாலைகளின் நடைபாதைகள் மற்றும் சைக்கிள் தடங்களில் கட்டப்பட்டுள்ள பொதுக் கழிப்பறைகள், மின் பெட்டிகள், அம்மா உணவகங்கள் ஆகியவற்றை வேறு இடத்திற்கு மாற்ற சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தலைமை நீதிபதி மாந்திர மோகன் ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி. அருள் முருகன் ஆகியோர் அடங்கிய முதல் அமர்வு, பொதுநல வழக்குத் தொடுத்த வழக்கறிஞர் வி.பி.ஆர். மேனன் தெரிவித்த பெரிய அளவிலான ஆக்கிரமிப்புகள் குறித்த குற்றச்சாட்டை சென்னை மாநகராட்சி தீவிரமாக மறுக்கவில்லை என குறிப்பிட்டது.

automobile chennai parking

சாலை ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவு

இதையடுத்து, பொதுக் கழிப்பறைகள் மற்றும் சமூக சமையலறைகள் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக தொடர்ந்து செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும். ஆனால் அவை நடைபாதையில் செயல்பட கூடாது. நடைபாதைகள் மற்றும் சாலைகள் போக்குவரத்துக்காக முழு அகலத்திலும் நீளத்திலும் கிடைக்கச் செய்வதையும் உறுதிசெய்யும் வகையில், மூன்று வாரங்களுக்குள் இடமாற்றுத் திட்டத்தை சமர்ப்பிக்குமாறு மாநகராட்சிக்கு உத்தரவிடப்பட்டது.

மின்சாதனப் பெட்டிகள் மற்றும் மின்மாற்றிகள் போன்ற மின் சாதனங்களையும் வேறு இடத்திற்கு மாற்ற தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்திற்கு (TANGEDCO) நீதிபதிகள் உத்தரவிட்டனர். மின் சாதனங்களை நடைபாதைகள் மற்றும் பாதசாரிகள் நடக்கும் இடங்களில் நிறுவ முடியாது என்றும், அவற்றை பொருத்தமான இடத்தில் நிறுவ வேண்டும் என்றும் நீதிமன்றம் கூறியது.

"தனிப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு மின்சாரத்தை விநியோகிக்க மின்மாற்றிகளின் இருப்பு அவசியம் என்பதால், ஒரு பொது நோக்கம் மற்றொன்றை அழித்துவிடாதபடி அதிகாரிகள் மிகுந்த தீவிரத்துடன் செயல்பட வேண்டும். மூன்று வாரங்களுக்குள் ஒரு காலக்கெடுவுடன் கூடிய இடமாற்றுத் திட்டத்தை சமர்ப்பிக்க மாநகராட்சிக்கும், TANGEDCO-விற்கும் அவகாசம் வழங்கப்படுகிறது," என்று அமர்வு உத்தரவிட்டது.

3 வாரம் டைம்

பொதுநல வழக்குத் தொடுத்தவர், கே.கே. நகர் மற்றும் அசோக் நகர் பகுதிகளில் உள்ள நடைபாதைகளை பல தனிநபர்கள் கடை அமைத்து ஆக்கிரமித்துள்ளதாகவும் குற்றம் சாட்டினார். இக்குற்றச்சாட்டை சரிபார்த்து, அனைத்து ஆக்கிரமிப்புகளையும் உடனடியாக அகற்றும்படி சென்னை மாநகராட்சிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

கே.கே. நகரைச் சேர்ந்த வழக்கறிஞர் மேனன் தனது மனுவில், 1960-களில் அகலமான சாலைகள், பூங்காக்கள் மற்றும் பள்ளிகளுடன் தனது பகுதியும் அருகிலுள்ள அசோக் நகரும் உருவாக்கப்பட்டதாகத் தெரிவித்தார். அப்போது, இந்த இரண்டு பகுதிகளிலும் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்புகளும் மனைகளும் மட்டுமே இருந்ததாகவும், மக்கள் தொகை மிகவும் குறைவாக இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

பிற்காலத்தில், முக்கிய சாலைகளின் இருபுறமும் பெரிய அளவில் மரக்கன்றுகள் நடப்பட்டு, மரங்களின் விதானங்களின் கீழ் இருவழி வாகனப் போக்குவரத்திற்கு போதுமான இடமிருந்தது. இருப்பினும், பல ஆண்டுகளாக வீட்டு வசதி வாரிய குடியிருப்புகள் பல அடுக்குமாடி குடியிருப்புகளாக மாறியதால் மக்கள் தொகை பெருகியதாக அவர் கவலை தெரிவித்தார்.

மனுதாரர் வைத்த புகார்

கே.கே. நகரில் அண்ணா மெயின் ரோடு, காமராஜர் சாலை மற்றும் ராஜமன்னார் சாலையில் பல வணிக நிறுவனங்கள் உருவாகி, அப்பகுதியை மிகவும் நெரிசலான பகுதியாக மாற்றியதாகவும், இத்தகைய பெரிய கட்டுமானங்களுக்கு உள்ளூர் அரசியல்வாதிகள் உடந்தையாக இருந்ததாகவும் மனுதாரர் குற்றம் சாட்டினார்.

2016 முதல் மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் பிற அதிகாரிகளிடம் இந்த பிரச்சனையை எழுப்பி வருவதாகவும், 2017 இல் சில முக்கிய சாலைகளில் ஒருவழிப் போக்குவரத்தை அமல்படுத்த ஒரு முடிவு எடுக்கப்பட்டதாகவும் அவர் கூறினார். இருப்பினும், கடந்த ஏழு ஆண்டுகளாக அந்த முடிவு காகிதத்தில் மட்டுமே இருப்பதாகவும், ஒருவழிப் போக்குவரத்திற்காக ஒதுக்கப்பட்ட சாலைகளிலும் மோட்டார் வாகனங்கள் இருபுறமும் சுதந்திரமாக சென்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

பிரதான சாலைகளில் தனியார் டாக்சிகள் மற்றும் ஆட்டோ ரிக்‌ஷாக்கள் நிறுத்தப்படுவதும், கடை வைக்க தடை செய்யப்பட்ட பகுதிகளில் தெருவோரக் கடைகள் அனுமதிக்கப்படுவதும் கவலைக்குரிய காரணங்கள் என்றும் மனுதாரர் தெரிவித்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+