வண்டி வண்டியாக.. ரெய்டு விடப்போறாங்க! பாஸ்ட் டேக் வச்சு இருக்கவங்க.. உடனே இதை செக் பண்ணுங்க!
சென்னை: ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (SBI) சார்பாக பாஸ்ட் டேக் மொத்தமாக மாற்றி அமைக்கப்பட உள்ளது. பல பெரிய வாகனங்களில் டோல் கட்டணங்களைக் குறைக்க பொய்யான பாஸ்ட் டேக் பயன்படுத்தப்படுகிறது.
அதாவது பெரிய லாரிகளில்.. கார்களில் பயன்படுத்தப்படும் சிறிய வாகனங்களுக்கான பாஸ்ட் டேக் பயன்படுத்தப்படுகிறது. இந்த வாகனங்கள் கார்களுக்கு செலுத்தும் கட்டணங்களை செலுத்தி ஏமாற்றுகிறது. சிறிய வாகனக் பாஸ்ட் டேக் குறியீடுகளை வைத்து.. மக்கள் ஏமாற்றுவதை தடுக்க புதிய FASTag வடிவமைப்பை எஸ்பிஐ அறிமுகப்படுத்தியுள்ளது.

இது குறிப்பாக வாகன வகுப்பு-4 (VC-04) வகை FASTag என்று எஸ்பிஐ தெரிவித்துள்ளது. இதில் கார், ஜீப் மற்றும் வேன் வகைகள், லாரி வகைகளுக்கு தனி தனியாக பாஸ்ட் டேக் வடிவமைப்பு இருக்கும். அந்த குறிப்பிட்ட வடிவமைப்பு பாஸ்ட் டேக்கை பயன்படுத்தவில்லை என்றால் அதற்கான கூடுதல் கட்டணம் விதிக்கப்படும். அதோடு இல்லாமல்.. தவறான டிசைனை பயன்படுத்தினால் அந்த கார்டு ரீட் ஆகாது என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
சமீபத்தில் பாஸ்ட் டேக்கில் 3 முக்கியமான மாற்றங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இது தொடர்பான அறிவிப்புகள் வெளியாகி உள்ளன.
தேசிய நெடுஞ்சாலை கழகம் மூலம் 'ஒரு வாகனம், ஒரு FasTag' என்ற முறை செயல்படுத்தப்பட்டு உள்ளது. இந்த முறை நடைமுறைக்கு வந்த நிலையில் இதில் முறைகேடுகள் தடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்த முறை வந்த பின்பே பல குற்றச்சாட்டுகள் வைக்கப்படுகின்றன. அதை அமல்படுத்த 3 அறிவிப்புகள் வெளியாகி உள்ளன.
அறிவிப்பு 1: பாஸ்ட் டேக் 5 வருடங்களுக்கு முன் எடுக்கப்பட்டால் அதை உடனே நீக்க வேண்டும். அதை மாற்ற அக்டோபர் 31 வரை அவகாசம் உள்ளது.
அறிவிப்பு 2 : பாஸ்ட் டேக் 3 வருடங்களுக்கு முன் எடுக்கப்பட்டால் அதில் உடனே கேஒய்சியை மாற்ற வேண்டும். அதை மாற்ற அக்டோபர் 31 வரை அவகாசம் உள்ளது.
அறிவிப்பு 3 - பாஸ்ட் டேக் வாகனத்தின் முன் ஒட்டப்பட்ட வேண்டும். இல்லையென்றால் இரட்டை தொகை கட்ட வேண்டும்.
டோல்: இது போக விரைவில், இந்தியாவில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் செயற்கைக்கோள் அடிப்படையிலான டோல் கட்டண முறைகள் நடைமுறைப்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. டோல் கட்டண முறைகேடுகளை தவிர்ப்பது, பொய்யான டோல் கட்டண முறையை தடுப்பதற்காக இந்த முறை கொண்டு வரப்பட்டு உள்ளது.
நாடு முழுக்க இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (என்ஹெச்ஏஐ) விரைவில் புதிய முறையை அறிமுகப்படுத்தும் என்று சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார். மார்ச், 2024க்குள் தேசிய நெடுஞ்சாலைகளில் செயற்கைக்கோள் அடிப்படையிலான கட்டண முறையை NHAI அறிமுகப்படுத்தும் என்று அமைச்சர் நிதின் கட்கரி ராஜ்யசபாவில் தெரிவித்தார்.
சுங்கச்சாவடி: சமீபத்தில், சுங்கச்சாவடிகளில் காத்திருப்பு காலத்தை குறைப்பது மற்றும் துறைமுகங்களில் ஏற்றுமதி, இறக்குமதி நேரத்தை எளிதாக்குவது போன்ற குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் குறித்து இந்தியா உலக வங்கியிடம் பல விவரங்களை தெரிவித்தது. FASTag செயல்படுத்தப்பட்டதன் மூலம், சுங்கச்சாவடிகளில் சராசரி காத்திருப்பு நேரம் வியத்தகு முறையில் குறைந்துள்ளது. தற்போது காத்திருப்பு நேரம் வெறும் 47 வினாடிகளாகக் குறைந்துள்ளது, இது முந்தைய 714-வினாடி காத்திருப்பில் இருந்து கணிசமான முன்னேற்றம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
உலக வங்கி பிரதிநிதிகளுடனான சமீபத்திய கலந்துரையாடலில், மத்திய அரசாங்கம் நாட்டின் உள்கட்டமைப்பை மேலும் மேம்படுத்துவதற்கான அதன் திட்டங்களை குறிப்பிட்டது. நவம்பர் இறுதி வரை, இந்த நிதியாண்டின் முதல் ஒன்பது மாதங்களில் தேசிய நெடுஞ்சாலைகளின் கட்டுமானம் மற்றும் விரிவாக்கம் புதிய உச்சத்தை அடைந்து உள்ளது.
வேகம்: மேலும், இந்தியாவில் தேசிய நெடுஞ்சாலைகளில் மக்கள் செல்லும் சராசரி வேகத்தை உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
வாகனங்களுக்கான வேக வரம்பு கடைசியாக ஏப்ரல் 2018 இல் புதுப்பிக்கப்பட்டது. தற்போது, நெடுஞ்சாலைகளில் அதிகபட்சமாக 100 கிமீ வேகத்திலும், எக்ஸ்பிரஸ்வேயில் மணிக்கு 120 கிமீ வேகத்திலும் கார்கள் ஓட்ட அனுமதிக்கப்படுகிறது. நகர்ப்புற சாலைகளில் அதிகபட்ச வேகம் மணிக்கு 70 கி.மீ அனுமதிக்கப்படுகிறது. அதே சமயம் சராசரி வேகம் 70 கிமீ என்ற அளவில் தேசிய நெடுஞ்சாலைகளிலும் உள்ளது.
அதாவது 100 கிமீ அனுமதிக்கப்பட்டால் சாலை தரம், தடுப்புகள் காரணமாக சராசரி வேகம் 70 கிமீ ஆக உள்ளது. இதை 85 ஆக உயர்த்த.. அதாவது வாகனங்கள் சராசரியாக செல்லும் வேகத்தை அதிகரிக்க சாலைகளில் மாற்றங்களை செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் வாய்ப்புகள் உள்ளன.












Click it and Unblock the Notifications