ஒரு லிட்டருக்கு ரூ.15 தான் செலவு.. முழுக்க முழுக்க எத்தனாலில் இயங்கும் கார்.. நிதின் கட்காரி அறிவிப்பு
மும்பை: பெட்ரோல், டீசலுக்கு மாற்றான வாகனங்களை இந்தியாவில் கொண்டுவர மத்திய அரசு அதிகம் விரும்புகிறது. அதற்காக மின்சார வாகனங்களுக்கு வரி சலுகை அளித்து வருகிறது. இந்நிலையில் முழுக்க முழுக்க எத்தனாலில் இயங்கும் புதிய வாகனங்கள் அறிமுகப்படுத்தப்படும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார்.
அது எப்படி எத்தனாலில் கார் போகும்? பொதுவாக எத்தனால் என்பது பெட்ரோலுடன் சேர்க்கப்படும் ஒரு திரவம். இது முற்றிலும் எரிக்க உதவும். அதேநேரம் தீமையான உமிழ்வைக் குறைக்குது. அமெரிக்காவில் எத்தனால் கலந்த பெட்ரோல் தான் விற்பனை செய்யப்படுகிறது. 10 சதவிகிதம் எத்தனாலுடன் கலந்த எரிபொருள் தான் அங்கு விற்பனை செய்யப்படுகிறது.

இந்தியாவிலும் குறிப்பிட்ட சதவீதம் எத்தனால் கலந்தே பெட்ரோல் விற்பனை செய்யப்படுகிறது. இந்தியாவில் 2025க்குள் 20 சதவீதம் எத்தனால் கலந்து எரிபொருள்களை விற்பனை செய்ய மத்தியஅரசு திட்டமிட்டுள்ளது. அப்படி நடந்தால் அரசுக்கு பல்லாயிரம் கோடி அந்நியச்செலாவணி மிச்சம் ஆகும். அரசு அதற்காக எத்தனால் உற்பத்தியை அதிகரிக்க பல்வேறு ஊக்குவிப்பு நடவடிக்கைகளை செய்து வருகிறது.
இந்நிலையில் முழுக்க முழுக்க எத்தனாலில் இயங்கக்கூடிய கார்களை கொண்டுவர வேண்டும் என்று மத்திய அரசு விரும்புகிறது. இது தொடர்பாக நேற்று நாக்பூரில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை மத்திய அமைச்சர் நிதின் கட்காரி இதனை தெரிவித்தார்.
முழுக்க முழுக்க எத்தனாலில் இயங்கும் புதிய வாகனங்கள் அறிமுகப்படுத்தப்படும் என்று கூறிய கட்கரி, மின்சார வாகனத்தை அறிமுகப்படுத்திய மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் தலைவரை சமீபத்தில் தான் சந்தித்ததையும் மேடையில் நினைவு கூர்ந்தார்.
இதுபற்றி கட்கரி கூறும போது, "எதிர்காலத்தில் எலெக்ட்ரிக் வாகனங்களை மட்டுமே தயாரிப்போம் என்று மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் தலைவர் என்னிடம் கூறினார். முழுக்க முழுக்க எத்தனாலில் இயங்கும் புதிய வாகனங்களை கொண்டு வருகிறோம்.பஜாஜ், டிவிஎஸ், ஹீரோ ஸ்கூட்டர்கள் 100 சதவீதம் எத்தனாலில் இயங்கும்.
டொயோட்டா நிறுவனம் தங்களுடைய கேம்ரி காரை ஆகஸ்ட் மாதம் அறிமுகப்படுத்த போகிறது. இது 100 சதவீதம் எத்தனாலில் இயங்குவதுடன், 40 சதவீத மின்சாரத்தையும் உற்பத்தி செய்யும்.
பெட்ரோலுடன் ஒப்பிட்டுப் பார்த்தால், எத்தனால் 60 ரூபாயாக இருக்கிறது. பெட்ரோல் விலை லிட்டருக்கு 120 ரூபாய் வரை இருக்கிறது. 40 சதவீதம் மின்சாரம் உற்பத்தி செய்யும் என்பதால் சராசரியாக லிட்டருக்கு 15 ரூபாய் தான் செல்வு ஆகும்" என்று அவர் கூறினார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications