Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ரத்தன் டாடாவின் நிறைவேறாத கனவு! தக்க நேரத்தில் உதவிய மோடி- இனியாவது நிறைவேறுமா! விரைவில் குட் நியூஸ்

Subscribe to Oneindia Tamil

மும்பை: நமது நாட்டில் தலைசிறந்த தொழிலதிபர்களில் ஒருவரான ரத்தன் டாடா உடல்நலக்குறைவால் காலமானார். அவரது உடல் இன்று மாலை அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்படுகிறது. தொழில்துறையில் ரத்தன் டாடா பல சாதனைகளைப் படைத்து இருந்தாலும் கூட, அவரது ஒரு கனவு நிறைவேறாமலேயே போய் இருக்கிறது. அது குறித்து நாம் பார்க்கலாம்.

நமது நாட்டின் மிக முக்கியமான தொழிலதிபர்களில் ஒருவராக இருந்தவர் ரத்தன் டாடா.. தொழில்துறையில் இவர் படைத்த சாதனைகள் எண்ணில் அடங்காதவை.. டாடா குழுமத்தைச் சர்வதேச அரங்கில் விரிவுபடுத்தியதில் இவரது பங்கு முக்கியமானது.

ratan tata ratan tata death tata

டாடா குழுமம்: டாடா ஸ்டீல்ஸ், டாடா மோட்டர்ஸ், டிசிஎஸ், இப்போது டாடா ஏரோஸ்பேஸ் என்று ஒவ்வொரு தலைமுறைக்கும் ஏற்ப நிறுவனங்களைத் தொடங்கிப் பல லட்சம் இளைஞர்களுக்கு ரத்தன் டாடா வேலைவாய்ப்பைக் கொடுத்துள்ளார். இந்தியாவின் வளர்ச்சிக்கு ரத்தன் டாடாவின் தொலைநோக்கு பார்வையும் முக்கிய காரணமாக இருந்துள்ளது. இவரது பல திட்டங்கள் மிகப் பெரியளவில் வெற்றி அடைந்துள்ளது. ஆனாலும், ரத்தன் டாடாவின் கனவுத் திட்டம் மட்டும் ஏனோ வெற்றி அடையாமலேயே போய்விட்டது. அது குறித்து நாம் பார்க்கலாம்.

நமது நாட்டில் கார்கள் என்பது இப்போதும் கூட ஆடம்பரத்தின் சின்னமாகவே பார்க்கப்படுகிறது. ஆனால், அந்த கார்களை மிடில் கிளாஸ் மக்கள் அனைவரிடமும் எடுத்துச் செல்ல விரும்பியவர் ரத்தன் டாடா.. அதுவும் இப்போது இல்லை.. 2000களிலேயே ரத்தன் டாடாவுக்கு இந்த எண்ணம் வந்துவிட்டது. அப்போது ரத்தன் டாடா சென்று கொண்டு இருந்த கார் ஒரு முறை சிக்னலில் நின்றுள்ளது.

டாடா நானோ: அப்போது அவரது வானகத்திற்கு அருகே பைக் ஒன்று வந்து நின்று இருக்கிறது. அதில் கணவர்- மனைவி மற்றும் 2 குழந்தைகள் என 4 பேர் சிரமப்பட்டுச் செல்வதை ரத்தன் டாடா பார்த்துள்ளார். அப்போது தான் அவருக்குக் குறைந்த விலையில் கார் உற்பத்தி செய்ய வேண்டும் என்ற சிந்தனை உருவானது. இதற்கான ஐடியாவில் உருவானது தான் டாடா நானோ.

இருப்பினும், இந்த காரை ரத்தன் டாடாவால் அவ்வளவு எளிதாகச் சந்தைக்குக் கொண்டு வர முடியவில்லை. முதலில் டாடா தொழிற்சாலையை அவர் மேற்கு வங்கத்தில் தான் அமைக்க முடிவு செய்தார். அதற்கான பணிகளும் தொடங்கப்பட்டன. இருப்பினும், அப்போது இளம் தலைவராக இருந்த மம்தா இதை எதிர்த்து போராட்டத்தில் குதித்தார். 26 நாட்கள் உண்ணாவிரதம் இருந்தார். மம்தாவின் அரசியல் வாழ்க்கையில் இது தான் திருப்பமாகவே அமைந்தது. சிக்கல்கள் தொடர்ந்ததால் வேறு வழியின்றி டாடா நிறுவனம் குஜராத்தில் இருந்து வெளியேறியது.

தோல்வி: அப்போது டாடா தொழிற்சாலைக்குச் சிவப்பு கம்பளம் கொடுத்து வரவேற்றது அப்போதைய குஜராத் முதல்வர் மோடி. அங்கு உற்பத்தி தொடங்கப்பட்டு. சந்தைக்கும் வந்தது. வெறும் ரூ.1 லட்சத்தில் இந்த கார் விற்பனைக்கு வந்தது. நல்ல எதிர்பார்ப்பு நிலவிய நிலையில், குறைந்த விலை, நல்ல மைலேஜ் ஆகியவையும் இருந்ததால் இந்த கார் ஹிட் அடிக்கும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், அது மக்களிடையே வரவேற்பைப் பெறவில்லை. சில ஆண்டுகளில் நானோ உற்பத்தியையே டாடா மோட்டர்ஸ் நிறுத்த வேண்டி இருந்தது.

தப்பாகிப் போனது என்ன: இதற்குப் போராட்டங்கள் காரணம் என்றாலும் வேறு ஒரு முக்கிய காரணமும் இருக்கிறது. அதாவது கார் என்பது ஆடம்பர சின்னமாக இருந்த நிலையில், நானோ காரை மலிவு விலை கார் என விளம்பரப்படுத்தியது மக்களிடையே எடுபடவில்லை. அதாவது cheapest கார் என்பதற்குப் பதிலாக affordable கார் எனச் சந்தைப்படுத்தி இருந்தால் சரியாக இருந்து இருக்கும் என்பதை பின்னாட்களில் ரத்தன் டாடாவே கூறியிருந்தார்.

டாடா நானோ ரத்தன் டாடாவின் லட்சிய திட்டமாகப் பார்க்கப்பட்ட போதிலும் அது நிறைவேறவில்லை.. ஆனால், இதை டாடா நிறுவனம் அப்படியே விட்டுவிடவில்லை.. இப்போது டாடா மோட்டர்ஸ் மின்சார வாகனங்களில் கவனம் செலுத்தி வரும் நிலையில், நானோ காரை எலக்டிரிக் வடிவில் டெலவப் செய்து வருகிறார்கள். கடந்த 2022இல் ரத்தன் டாடா இந்த எல்டிரிக் நானோ காருடன் எடுத்த போட்டோ கூட இணையத்தில் டிரெண்டாகி இருந்தது.

ratan tata ratan tata death tata

நானோ மின்சார கார்கள்: இப்போது நானோ எலக்டிரிக் சோதனையில் உள்ளது. அது குறித்த தகவல்கள் அவ்வப்போது வெளியாகிக் கொண்டு இருக்கிறது. எப்படியும் வரும் காலத்தில் சரியான விலையில் இந்த கார் சந்தைக்கு வரும். பெட்ரோல், டீசல் செலவும் இருக்காது என்பதால்.. அப்போது மிடில் கிளாஸ் மக்கள் அந்த காரையே வாங்க ஆர்வம் காட்டுவார்கள். நிச்சயம் அதைப் பார்த்து மகிழ்வார் ரத்தன் டாடா!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+