ஜூன் 1ம் தேதி முதல்.. மாறப்போகும் 2 முக்கியமான ஆர்டிஓ விதிகள்.. வாகன ஓட்டிகளுக்கு முக்கிய அறிவிப்பு
சென்னை: வாகனங்கள் தொடர்பான இரண்டு முக்கியமான ஆர்டிஓ விதிகள் வரும் ஜூன் 1ம் தேதி முதல் மாற உள்ளன.
முதலாவதாக, ஓட்டுநர் உரிமம் வாங்குவதற்கான சோதனை நடைமுறை குறிப்பிடத்தக்க மாற்றங்களை சந்திக்க உள்ளது, வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் (ஆர்டிஓ) கட்டாய ஓட்டுநர் சோதனை இனி செய்ய வேண்டியது இல்லை. ஆர்டிஓ அலுவலகம் செல்லாமல் அதற்கு பதிலாக, விண்ணப்பதாரர்கள் இப்போது அங்கீகாரம் பெற்ற தனியார் ஓட்டுநர் பள்ளிகளில் ஓட்டுநர் பயிற்சி எடுத்து அங்கேயே டெஸ்ட் செய்து லைசன்ஸ் பெற முடியும்.

இந்த அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களில் சோதனையை வெற்றிகரமாக முடித்தால், ஒரு சான்றிதழ் வழங்கப்படும். இதை பயன்படுத்தி லைசன்ஸ் பெற முடியும். இது RTO இல் மேலும் சோதனை செய்யாமல் லைசன்ஸ் பெற உதவியாக இருக்கும்.
தேர்ந்தெடுக்கப்பட்ட தனியார் ஓட்டுநர் பள்ளிகளுக்கு அரசாங்கம் சான்றிதழ்களை வழங்கும், இந்த ஓட்டுநர் சோதனைகளை நடத்த அவர்களுக்கு அங்கீகாரம் அளிக்கப்படும். இருப்பினும், அங்கீகாரம் பெற்ற பள்ளியின் சான்றிதழ் இல்லாத ஓட்டுனர்கள் எப்போதும் போல RTO இல் டெஸ்டில் பங்கேற்க வேண்டும்
இரண்டாவது விதி; கடந்த வாரம் மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள புனேவில் 17 வயது சிறுவன் குடிபோதையில் காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது.. இதில் பைக்கில் பயணித்த இருவர் தூக்கி வீசப்பட்டு கொடூரமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாட்டையே உலுக்கி உள்ளது.
இந்த விபத்தை ஏற்படுத்திய புனேவின் பிரபல கட்டுமான தொழிலதிபரின் மகன் உடனடியாக கைது செய்யப்பட்ட போதிலும் சில மணி நேரத்தில் அவனுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது விவாதத்தைக் கிளப்பியது. விபத்து தொடர்பான வீடியோ இணையத்தில் பரபரப்பை கிளப்பிய நிலையில், அந்த சிறுவனின் ஜாமீன் ரத்து செய்யப்பட்டது.
சோதனை; இந்த நிலையில்தான் சென்னை ட்ராபிக் போலீசார் முக்கியமான சோதனை ஒன்றை சாலைகளில் செய்ய தொடங்கி உள்ளனர். 18- வயதுக்குட்பட்டவர்களுக்கு வாகனம் ஓட்ட அனுமதி அளித்தால், அந்த வாகனத்தின் பதிவை (Registration) நிறுத்தி வைப்போம் என்று தமிழ்நாடு போக்குவரத்து போலீசார் உத்தரவிட்டுள்ளனர். அதோடு மைனர் ஓட்டும் வண்டிகளின் பதிவு ஜூன் 1ம் தேதி முதல் நீக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
கடந்த மாதம் காரைக்குடியில் காசிம் என்பவர் 18 வயது பூர்த்தி அடையாத சிறுவர் ஒருவருக்கு தனது KTM என்ற இருசக்கர வாகனத்தை ஓட்டுவதற்கு கொடுத்த குற்றத்திற்காக போலீஸ் அவர் மீது நடவடிக்கை எடுத்தது. காரைக்குடி வடக்கு காவல் நிலையத்தால் sec. 199(A) & 129 MV Act -ன்படி வழக்கு பதிவு செய்யப்பட்டு குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மேற்படி வழக்கில் அந்த சிறுவருக்கு இருசக்கர வாகனத்தை இயக்குவதற்காக கொடுத்துள்ள குற்றமானது நிரூபிக்கப்பட்டுள்ளதால் அவருக்கு இந்நீதிமன்றம் ரூ.26,000/- அபராதமும் மற்றும் 12 மாத காலத்திற்கு இந்த இரு சக்கர வாகனத்தின் பதிவை (Registation) நிறுத்தி வைக்கவேண்டும் (To be suspended) என்று 02.02.2024ல் உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் அபராதத் தொகையை காசிம் த-பெ. பிரான்மலை என்பவர் இந்நீதிமன்றத்தில் செலுத்திவிட்டார். எனவே 12 மாத காலத்திற்கு மேற்படி இருசக்கர வாகனத்தின் பதிவை (Registation) நிறுத்தி வைக்கவேண்டும் எனவும் மோட்டார் வாகன சட்டப்பிரிவு 199(A)ன் கீழ் உத்தரவிடப்படுகிறது என்று போலீசார் அறிவித்துள்ளனர்.
போலீஸ் எச்சரிக்கை; இந்த நிலையில்தான் 18- வயதுக்குட்பட்டவர்களுக்கு வாகனம் ஓட்ட அனுமதி அளித்தால், அந்த வாகனத்தின் பதிவை (Registation) நிறுத்தி வைப்போம் என்று தமிழ்நாடு போக்குவரத்து போலீசார் உத்தரவிட்டுள்ளனர்.
இது தொடர்பாக போலீசார் விடுத்துள்ள எச்சரிக்கையில், 8- வயதுக்குட்பட்டவர்களுக்கு வாகனம் ஓட்ட அனுமதி தரும் எண்ணத்தில் உள்ள பெற்றோர்களா நீங்கள்? 18-வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு வாகனம் ஓட்ட அனுமதி அளிக்கும் பெற்றோருக்கு தண்டனை உறுதி.
12 மாதங்களுக்கு வாகன பதிவு நிறுத்தி வைக்கப்படும். கவனம் தேவை பெற்றோர்களே என்று போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications