ராயல் என்ஃபீல்ட் பைக்கில் போகணுமா? வந்தது வாடகை திட்டம்.. ராயல் என்ஃபீல்ட் கொண்டு வந்த செம திட்டம்
சென்னை: பைக்குகளை வாடகையாக அளிக்கும் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது ராயல் என்ஃபீல்ட் நிறுவனம்.
இந்தியாவில் ராயல் என்பீல்ட்.. சரியாக சொல்ல வேண்டும் என்றால் புல்லட் பைக் என்பது ஒரு ஸ்டேட்டஸ் சிம்பிள். முன்பு கிராமங்களில் குறிப்பிட்ட சாதியினர், நகரங்களில் பணக்காரர்கள் மட்டுமே பயன்படுத்தும் பைக்காக இது இருந்தது.

ஆனால் அதன்பின் கடந்த 10 வருடங்களில் இந்தியாவில் ராயல் என்பீல்ட் பயன்பாடு அதிகரித்து உள்ளது. ராயல் என்பீல்ட் வாங்குவது என்பது ஸ்டேட்டஸ் சிம்பிள் என்பது மாறி வாட்ஸ் ஆப்பில் ஸ்டேட்டஸ் வைப்பது போல எல்லோரும் எளிதாக வாங்க தொடங்கிவிட்டனர்.
முக்கியமாக இளைஞர்கள் மத்தியில் ராயல் என்பீல்ட் மிக முக்கியமான பைக்காக பார்க்கப்படுகிறது. அதிலும் லடாக் பயணம் செல்வது, வடஇந்திய பயணம் மேற்கொள்வது என்று பல்வேறு விஷயங்களுக்கு ராயல் என்பீல்ட் மிக முக்கியமான பைக்காக மாறிவிட்டது. இதனால் இந்தியாவில் ராயல் என்பீல்ட் மார்க்கெட் என்பது மிகப்பெரியது.
வசதி: ஆனால் பலருக்கும் இந்த பைக் வாங்கும் வசதி இருக்காது.இனி சொந்தமாக ராயல் என்பீல்டு பைக் இல்லைன்னு கவலை வேண்டாம். உங்களுக்காக புதிய திட்டம் ஒன்றை ராயல் என்பீல்டு நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
அதன்படி ராயல் என்ஃபீல்ட் பைக்களை வாடகையாக அளிக்கும் புதிய திட்டத்தை அந்நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. பைக்கின் மாடலுக்கு ஏற்ப விலை நிர்ணயம் செய்யப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.
முதற்கட்டமாக சென்னை, பெங்களூரு, டெல்லி, திருவனந்தபுரம், மும்பை உள்ளிட்ட 27 நகரங்களில் இத்திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது. தற்போது ஒரு மாதத்திற்கு கிட்டத்தட்ட சராசரியாக 55 ஆயிரம் முதல் 60 ஆயிரம் வரை ராயல் என்பீல்ட் பைக் விற்பனை ஆகிறது. ஒரு ஹை எண்டு மாடல் பைக் இவ்வளவு அதிகமாக விற்பனை ஆவது ராயல் என்பீல்ட் பைக்கிற்கு மட்டுமே. இந்த மார்க்கெட்டை பிடிக்க வேண்டும் என்றுதான் உலகின் டாப் பைக் நிறுவனங்கள் களமிறங்கி உள்ளன. முக்கியமாக ஹார்லி டேவிட்சன், ட்ரையம்ப் இரண்டு பைக்குகளும் இந்திய மார்க்கெட்டை குறி வைத்து உள்ளன.
இந்த நிலையில்தான் வாடகை மார்க்கெட்டிலும் ராயல் என்பீல்டு இறங்கி உள்ளது.
இவி - ராயல் என்பீல்ட்: இன்னொரு பக்கம் ராயல் என்ஃபீல்டு தனது முதல் EV பைக்கை 2024 ஆம் ஆண்டு இறுதிக்குள் அறிமுகப்படுத்த உள்ளது. அதே நேரத்தில் 60 ஏக்கர் பரப்பளவில் செய்யாரில் வரவிருக்கும் ஆலை 2025 ஆம் ஆண்டிற்குள் தயாராக இருக்கும் என்றும் அறிவித்து உள்ளது.
இந்த இவி பைக் ஒன்றரை லட்சம் ரூபாய் வரை ஆன் ரோட்டில் இருக்கும் என்று தகவல்கள் வெளியாகி வருகின்றன. உலகம் முழுக்க இ மின்சார வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இ மின்சார வாகனங்களை பயன்படுத்த மக்கள் அதிக அளவில் ஆர்வம் செலுத்தி வருகின்றனர்.இந்தியாவில் மின்சார வாகனங்களின் உற்பத்தியில் தமிழ்நாடுதான் முன்னிலை வகித்து வருகிறது. ஏற்கனவே ஆட்டோமொபைல் சாதனங்களின் உற்பத்தியில் சென்னைதான் இந்தியாவின் டெட்ராய்டு என்று அழைக்கப்படுகிறது.
இந்திய மார்க்கெட்டில் கோலோச்சும் டாப் எண்ட் மாடல் பைக் என்றால் அது ராயல் என்பீல்டுதான். தற்போது வீட்டிற்கு ஒரு புல்லட் என்று சொல்லும் அளவிற்கு விலை அதிகம் இருந்தாலும் கூட மார்க்கெட்டில் இவர்கள்தான் டாப்பில் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications