விடைபெறும் ஜாம்பவான்.. ராயல் என்பீல்டின் மிக பிரபலமான பைக் நிறுத்தப்படுகிறது.. இளைஞர்கள் சோகம்!
சென்னை: ராயல் என்பீல்ட் இம்மாத இறுதியில் இந்திய மற்றும் வெளிநாட்டு சந்தைகளில் ஹிமாலயன் 411 விற்பனையை நிறுத்துகிறது. இந்த பைக்கிற்குப் பதிலாக ஹிமாலயன் 452 பைக் வரவுள்ளது.
இந்தியாவில் ராயல் என்பீல்ட்.. சரியாக சொல்ல வேண்டுமென்றால் புல்லட் பைக் என்பது ஒரு ஸ்டேட்டஸ் சிம்பிள். முன்பு கிராமங்களில் குறிப்பிட்ட சாதியினர், நகரங்களில் பணக்காரர்கள் மட்டுமே பயன்படுத்தும் பைக்காக இது இருந்தது.

ஆனால் அதன்பின் கடந்த 10 வருடங்களில் இந்தியாவில் ராயல் என்பீல்ட் பயன்பாடு அதிகரித்து உள்ளது. ராயல் என்பீல்ட் வாங்குவது என்பது ஸ்டேட்டஸ் சிம்பிள் என்பது மாறி வாட்ஸ் ஆப்பில் ஸ்டேட்டஸ் வைப்பது போல எல்லோரும் எளிதாக வாங்க தொடங்கிவிட்டனர்.
முக்கியமாக இளைஞர்கள் மத்தியில் ராயல் என்பீல்ட் மிக முக்கியமான பைக்காக பார்க்கப்படுகிறது. அதிலும் லடாக் பயணம் செல்வது, வடஇந்திய பயணம் மேற்கொள்வது என்று பல்வேறு விஷயங்களுக்கு ராயல் என்பீல்ட் மிக முக்கியமான பைக்காக மாறிவிட்டது. இதனால் இந்தியாவில் ராயல் என்பீல்ட் மார்க்கெட் என்பது மிகப்பெரியது.
நிறுத்தப்படும் ராயல் என்பீல்டு; இந்த நிலையில் ராயல் என்ஃபீல்டு இம்மாத இறுதியில் இந்தியா மற்றும் வெளிநாட்டு சந்தைகளில் ஹிமாலயன் 411 விற்பனையை நிறுத்துகிறது. இந்த பைக்கிற்குப் பதிலாக ஹிமாலயன் 452 பைக் வரவுள்ளது.
இந்த பைக் மாடல் முதன்முதலில் 2016 இல் தொடங்கப்பட்டது, ஹிமாலயன் 411 ல் வரிசையாக அடிக்கடி மாற்றங்கள் செய்யப்பட்டன. ஒவ்வொரு மாற்றமும் மிக சிறப்பாகவே இருந்தது. முக்கியமாக BS6ல் வெளிவந்த கடைசி கட்ட மாடல்கள் மிக சிறப்பாக இருந்தது, ஆனால் துரதிர்ஷ்டவசமாக, இது இந்த மாதம் 411 மாடல் சந்தையில் இருந்து நிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
ஹிமாலயன் 411 அதன் அதீத சௌகரியம், ஆஃப்-ரோட் ரைடிங் மற்றும் அதன் சிட்டி ரைடிங் திறன்களுக்காக இளைஞர்கள் இடையே கவனம் பெற்றது. ஆனால் நெடுஞ்சாலையில் செல்லும் போது 411 மாடலில் சில பிரச்சனைகள் இருந்தன, அவை புதிய ஹிமாலயன் 452 ஆல் சரிசெய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அதே சமயம்
இதே ராயல் என்பீல்டின் ஸ்க்ராம் 411 இந்திய சந்தையில் தொடர்ந்து விற்பனை செய்யப்படும். இந்த மோட்டார்சைக்கிள் ஹிமாலயன் 411 அடிப்படையிலானது ஆனால் சிறிய முன் சக்கரம் மற்றும் ஒப்பீட்டளவில் குறைவான அம்சங்களை கொண்டுள்ளது. இதன் விற்பனை தொடர்ந்து நடக்கும். இந்தியாவில் இளைஞர்கள் இடையே 411 மிக மிக பிரபலமாக இருந்த நிலையில் அதை நீக்குவது இளைஞர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
புதிய பைக்: பைக்குகளை வாடகையாக அளிக்கும் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது ராயல் என்ஃபீல்ட் நிறுவனம். பைக்கின் மாடலுக்கு ஏற்ப விலை நிர்ணயம் செய்யப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.
முதற்கட்டமாக சென்னை, பெங்களூரு, டெல்லி, திருவனந்தபுரம், மும்பை உள்ளிட்ட 27 நகரங்களில் இத்திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது. தற்போது ஒரு மாதத்திற்கு கிட்டத்தட்ட சராசரியாக 55 ஆயிரம் முதல் 60 ஆயிரம் வரை ராயல் என்பீல்ட் பைக் விற்பனை ஆகிறது. ஒரு ஹை எண்டு மாடல் பைக் இவ்வளவு அதிகமாக விற்பனை ஆவது ராயல் என்பீல்ட் பைக்கிற்கு மட்டுமே. இந்த மார்க்கெட்டை பிடிக்க வேண்டும் என்றுதான் உலகின் டாப் பைக் நிறுவனங்கள் களமிறங்கி உள்ளன. முக்கியமாக ஹார்லி டேவிட்சன், ட்ரையம்ப் இரண்டு பைக்குகளும் இந்திய மார்க்கெட்டை குறி வைத்து உள்ளன.
இந்த நிலையில்தான் வாடகை மார்க்கெட்டிலும் ராயல் என்பீல்டு இறங்கி உள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications