இனி டீசல் வாகனம் வாங்கலாமா? இவி வாகனம் வாங்கலாமா? மத்திய பட்ஜெட்டுக்கு பின் எது பெஸ்ட் சாய்ஸ்
சென்னை: மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் இனி டீசல் வாகனம் வாங்கலாமா? இவி வாகனம் வாங்கலாமா? என்ற கேள்வி பலருக்கும் எழலாம். மத்திய அரசு இதில் எடுத்த முடிவு மற்றும் உலக அரசியலை கருத்தில் கொண்டு நீங்கள் உங்கள் முடிவை எடுக்கலாம். இவி அல்லது டீசல் பெட்ரோல் வாகனங்களை வாங்கும் முன் பின்வரும் இரண்டு விஷயங்களை நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டும்.
உலகம் முழுக்க மக்கள் இடையே இவி கார், பைக் வாங்கும் மோகம் அதிகரித்து வருகிறது. இந்த மோகத்திற்கு பின் மார்க்கெட் மாறியதே காரணம். உலகம் முழுக்க வெப்பமயமாக்கலுக்கு எதிராக பிரச்சாரம் நடக்கிறது. இதன் காரணமாக உலகின் பல நாடுகள் இவி வாகனங்களை வாங்க ஊக்குவிக்கின்றன.

இந்தியாவிலும் கூட கடந்த மாதம் வரை இவி வாகனங்களை வாங்க வரி விலக்கு, சலுகைகள், நிதி உதவிகள் கூட வழங்கப்பட்டு வந்தன. இது போக காற்று மாசை கட்டுப்படுத்த வேண்டும் என்று ஐநா பல நாடுகளுக்கு உத்தரவிட்டு உள்ளது. அதற்கு இவி வாகனங்கள் முக்கிய கருவியாக பார்க்கப்படுகிறது.
இதெல்லாம் போக மத்திய கிழக்கு நாடுகளில் கச்சா எண்ணெய் காலியாக தொடங்கி உள்ளது. உலக அளவில் பெட்ரோல் டீசல் விலை உச்சம் அடைந்து உள்ளது. ரஷ்யாவின் எண்ணெய்யை உலக நாடுகள் பல வாங்குவது இல்லை. இதெல்லாம் போக இவி வாகனங்கள் செலவு குறைவு. அதுதான் இப்போது டிரெண்டும் கூட. இப்படி பல காரணங்களால் இவி வாகனங்கள் அதிகம் விற்கப்படுகிறது.
விஷயம் 1:
ஆனால் தற்போது அமெரிக்க அதிபராக பதவி ஏற்றுள்ள டொனால்ட் டிரம்ப் மீண்டும் கச்சா எண்ணெய் வர்த்தகம், பெட்ரோல், டீசல் வாகன பயன்பாட்டை ஊக்குவிக்க முடிவு செய்துள்ளார். பாரிஸ் காலநிலை உடன்படிக்கையில் இருந்து அமெரிக்கா வெளியேறி உள்ளது.
இந்த உடன்படிக்கையில் பிடன் கையெழுத்திட்ட காரணத்தால் அமெரிக்காவில் பல இடங்களில் சிஎன்ஜி எடுக்க தடை விதிக்கப்பட்டது. அதேபோல் கச்சா எண்ணெய் இறக்குமதி, ஏற்றுமதியும் குறைக்கப்பட்டது. இதற்கு பதிலாக இவி வாகனங்கள் களமிறக்கப்பட்டன.
ஆனால் டிரம்ப் இது இரண்டையும் நிராகரித்து உள்ளார். டிரம்ப் உத்தரவின் பெயரில் பாரிஸ் காலநிலை உடன்படிக்கையில் இருந்து அமெரிக்கா வெளியேறி உள்ளது. அதோடு கச்சா எண்ணெய், சிஎன்ஜி ஆலைகளை மீண்டும் திறக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. அதோடு சிஎன்ஜி எடுக்க ஊக்குவிக்கப்படும், ஏற்கனவே மூடப்பட்ட கிணறுகள், ஆலைகளை அரசு மீண்டும் திறக்கும் என்று கூறி உள்ளார்.
இதனால் உலக அளவில் டீசல் வாகனங்கள் மீண்டும் அதிகரிக்கும். இவி வாகனங்கள் நீண்ட காலம் உழைப்பது இல்லை. அதோடு செமி கண்டெக்டர் உற்பத்தி கடினம், செலவு அதிகம். இவி வாகனங்கள் அடிக்கடி தீ பிடிக்கும் பிரச்சனையை கொண்டு உள்ளதால் அதன் விற்பனை குறையும்.
விஷயம் 2:
ஆனால் இந்தியாவில் இதற்கு எதிர்மாறாக விதிகள் வந்துள்ளன.
நாடு முழுக்க இவி பேட்டரிகள் தயாரிக்க சலுகைகள் வழங்கப்படும், லித்தியம் பேட்டரிக்கான இறக்குமதி சுங்கவரி ரத்து செய்யப்படும், மின்சார வாகனம் மற்றும் மொபைல் போன்களுக்காக தயாரிக்கப்படும் பேட்டரிகளுக்கு உற்பத்தி வரி சலுகை வழங்கப்படும் என்று நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.
இதன் அர்த்தம் இனி இவி பேட்டரிகள் இந்தியாவில் தயாரிப்பது அதிகரிக்கும். இதன் விலை குறைவாக இருக்கும். இதனால் இவி வாகனங்கள் விற்பனை மோகம் அதிகரிக்கும் சூழல் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications