எத்தனை வருட ஏக்கம்! காத்திருந்த அறிவிப்பு வந்தது! சென்னை -பெங்களூர் எக்ஸ்பிரஸ் வேயில் ட்விஸ்ட்
சென்னை: சென்னை பெங்களூர் எக்ஸ்பிரஸ் வே டெஸ்ட் டிரைவ் தொடங்க உள்ளது. அடுத்த மாதம் முதல் இதுவரை கட்டப்பட்ட சாலைகளில் முதல் கட்டமாக டெஸ்ட் டிரைவ் தொடங்க உள்ளதாம்.
மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி முக்கியமான சில அறிவிப்புகளை வெளியிட்டு உள்ளார். அதன்படி பெங்களூர் மற்றும் சென்னை இடையேயான கிரீன்ஃபீல்ட் காரிடார் மற்றும் பெங்களூரு சாட்டிலைட் டவுன்ஷிப் ரிங் ரோடு (STRR) திட்டம் ஆகிய இரண்டையும் டிசம்பர் 2024 க்குள் திறந்து வைப்பதாக உறுதியளித்து உள்ளார்.

கிரீன்ஃபீல்ட் வழித்தடத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைப்பார் என்றும் அவர் கூறினார். நேற்று நடந்த கர்நாடக பாஜக சிறப்பு மாநில செயற்குழு கூட்டத்தின் பாராட்டு நிகழ்வில் கட்கரி இந்த அறிவிப்பை வெளியிட்டார். ரூ. 17,000 கோடி மதிப்பிலான இந்த திட்டம் திட்டமிடப்பட்டதை விட ஒரு வருடம் முன்னதாக 2024 டிசம்பருக்குள் முடிக்கப்படும் என்று கூறினார்.
டெஸ்ட் டிரைவ்: சென்னை பெங்களூர் எக்ஸ்பிரஸ் வே டெஸ்ட் டிரைவ் தொடங்க உள்ளது. அடுத்த மாதம் முதல் இதுவரை கட்டப்பட்ட சாலைகளில் முதல் கட்டமாக டெஸ்ட் டிரைவ் தொடங்க உள்ளதாம்.
ஜூன் 2022 இல் தொடங்கப்பட்ட இந்தத் திட்டம், பெங்களூருவின் சுற்றுப்புறங்களை இணைப்பதையும், நகரத்திற்குள் போக்குவரத்தை 30% குறைக்கும் நோக்கத்தையும் கொண்டுள்ளது. 2018ல் அறிவிக்கப்பட்ட ரூ.17,930 கோடி மதிப்பிலான பசுமைத் சாலை திட்டம், ஆறு ஆண்டுகளாக வளர்ச்சியில் உள்ளது, மேலும் இந்த ஆண்டு இறுதியில் திறக்கப்படும் என கட்கரி தெரிவித்துள்ளார்.
எப்போது முடியும்: ஜூன் 2022 இல் இதற்கான அடிக்கல் நாட்டப்பட்டது. இந்த சாலை பெங்களூருவின் சுற்றுப்புறங்களை இணைக்கும், டாப்ஸ்பேட், ராமநகரா, மாகடி சாலை, தொட்டபல்லாபூர், தேவனஹள்ளி, ஹோஸ்கோட், சர்ஜாபூர் மற்றும் ஓசூர் வழியாக செல்லும். இந்தத் திட்டத்தால் பெங்களூரு நகருக்குள் போக்குவரத்து 30% வரை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 17,930 கோடி மதிப்பிலான பெங்களூரு-சென்னை கிரீன்ஃபீல்ட் வழித்தடமானது, இரு நகரங்களுக்கு இடையேயான பயண நேரத்தை வெறும் இரண்டு மணி நேரமாகக் குறைக்கும்.
கடந்த பத்தாண்டுகளில் கர்நாடகா ரூ. 3.5 லட்சம் கோடி மதிப்பிலான சாலைப் போக்குவரத்துப் பணிகளைப் பெற்றுள்ளது என்றும், மாநிலத்தைச் சேர்ந்த ஒவ்வொரு எம்.பி.யும் தங்கள் திட்டங்களுக்கு நிதியுதவி பெறுவதையும் கட்கரி எடுத்துரைத்தார்.
எக்ஸ்பிரஸ் வே: சென்னை - பெங்களூர் இடையே அமைக்கப்படும் எக்ஸ்பிரஸ் வே சாலையில் கார்களுக்கு 100 கிலோ மீட்டர் வேகமும், பேருந்துகளுக்கு 120 கிலோ மீட்டர் வேகமும் லிமிட்டாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சாலை NH-7 என்று அழைக்கப்படும் என்று அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதன் exclusive புகைப்படங்கள் தற்போது வெளியாகி உள்ளன.
சென்னை - பெங்களூர் இடையே அமைக்கப்படும் எக்ஸ்பிரஸ் வே சாலை தொடர்பான முக்கியமான அப்டேட் வெளியாகி உள்ளது. கர்நாடகாவில் 60 சதவிகித பணிகள் நிறைவு பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஆந்திர பகுதியில் மட்டுமே பணிகள் மெதுவாக நடக்கின்றது. இதனால் அந்த பகுதியில் டிசம்பரில் சாலை திறக்கப்படும். அதற்கு முன் உள்ள தமிழ்நாடு பகுதிகள் மற்றும் கர்நாடக பகுதிகளில் அதற்கு முன்பாகவே சாலையை திறக்க முடிவு செய்துள்ளனர். பெரும்பாலும் ஜூலை மாதமே சாலையை திறக்க முடிவு செய்துள்ளனர்.
சாலை பணிகள் தீவிரம்: பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையே சென்னை பெங்களூர் இடையே விரைவுச்சாலை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த சாலை வந்த பின் பெங்களூர் - சென்னை இடையிலான பயணம் அடியோடு மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முக்கியமாக தற்போது சென்னை பெங்களூர் இடையே பயணம் செய்ய 7 மணி நேரம் ஆகிறது. இந்த விரைவுச்சாலை வரும் பட்சத்தில் போக்குவரத்து 4 மணி நேரமாக குறையும். இதனால் மக்கள் இன்னும் வேகமாக, எளிதாக பயணம் செய்ய முடியும்.
பாலங்கள்: சென்னை பெங்களூரை இணைக்கும் சாலையில் உள்ள உயர் மட்ட சாலைகளாக அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. அதன் ஒரு கட்டமாக 23.2 கிமீ நீளமுள்ள மதுரவாயல்-ஸ்ரீபெரும்புதூர் இடையேயான மேம்பாலப் பணி இந்த நிதியாண்டு இறுதிக்குள் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் (NHAI) வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்த ஆண்டுக்கான வேலைத் திட்டத்தில் இந்த திட்டம் சேர்க்கப்பட்டுள்ளது. ₹3,500 கோடி மதிப்பில் இந்த உயர்மட்ட சாலை அமைக்கப்பட உள்ளது. அதாவது 23.2 கிமீ நீளமுள்ள மதுரவாயல்-ஸ்ரீபெரும்புதூர் இடையே ஒரே நீளமாக பாலம் அமைக்கப்படும். இந்த பகுதியை இப்போது கடக்க 30 நிமிடம் குறைந்தபட்சம் ஆகிறது. பாலம் கட்டப்பட்டால் 10 -15 நிமிடத்தில் இந்த பகுதியை கடக்கலாம்
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications